Cannibalism: பெண்ணைக் கொலை செய்து உடலை சாப்பிட்ட நபர்; 41 வருடமாக தப்பித்து வாழ்ந்த கதை!

இவர் மனம் மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், விதி இவரது பக்கம் நின்றது. 1983ல் இவரை பிரன்சு மருத்துவ நிபுணர் குழு, தண்டனைக்கு ‘தகுதியற்றவர்’ எனக் கூறி, மனநலக் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தது.
இஸ்ஸேய் சகாவா
இஸ்ஸேய் சகாவாட்விட்டர்
Published on

சக மாணவியை வீட்டிற்கு அழைத்து, அவரை கொன்று, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அவரது உடல்பாகங்களை சாப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜப்பானை சேர்ந்த ’கோப் கானிபல்’, 73 வயதில் உயிரிழந்துள்ளார்.

ஜப்பானை சேர்ந்த இஸ்ஸேய் சகாவா. இவர் கடந்த நவம்பர் 24ஆம் தேதி நிமோனியா தாக்கத்தால் உயிரிழந்ததாகவும், இவரது இறுதிச் சடங்கு முக்கிய குடும்ப உறுப்பினகள் முன்னிலையில் நடந்ததாகவும் இவரது சகோதரர் குறிப்பிட்டார்.

இவர் செய்த கொலை உலகின் மிகக் கொடூரமான கொலைச் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இஸ்ஸேய் சகாவா பாரிஸில் படித்துக்கொண்டிருக்கும்போது, சக மாணவியான ரெனீ ஹார்ட்வெல்ட்டை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இவர் நெதர்லாந்தை சேர்ந்தவர்.

மாணவியை வீட்டிற்கு அழைத்த சகாவா அவரை கழுத்தில் சுட்டு கொலை செய்தார். பின்னர் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினார்.

இதோடு நிற்காமல், சகாவா அந்த பெண்ணின் சில உடல் பாகங்களையும் சாப்பிட்டிருக்கிறார். சில நாட்கள் கழித்து மீதமிருந்த உடல்பாகங்களை பாய்ஸ் டி பொலோன் என்ற இடத்தில் இவர் வீசியெறிந்தார்

murder
murderTwitter

ஆனால், சில நாட்களிலேயே, இவர் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு, காவல் துறையினரிடம் சரணடைந்தார் சகாவா.

இவர் மனம் மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், விதி இவரது பக்கம் நின்றது. 1983ல் இவரை பிரன்சு மருத்துவ நிபுணர்க் குழு, தண்டனைக்கு ‘தகுதியற்றவர்’ எனக் கூறி, மனநலக் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தது.

அங்கு சிகிச்சை முடிந்த பின்னர், மீண்டும் ஜப்பானுக்கே திருப்பி அனுப்பப்பட்டார் சகாவா. கதை அதோடு முடியவில்லை.

ஒரு கொலையாளி தண்டனையின்றி தப்பிப்பதை ஏற்க மறுத்த ரெனீயின் குடும்பத்தினர், ஜப்பான் அரசை உதவிக்கு நாடியது. . இவரது மன நலம் பாதிக்கவில்லை எனக் கருதிய ஜப்பான் அரசு, நடவடிக்கைகள் மேற்கொள்ள பிரான்ஸை அணுகியது.

ஆனால், வழக்கு முடிந்ததாக கூறி பிரான்ஸும் கைவிரித்துவிட்டது. இதனால் தண்டனையின்றி, நிரபராதியாக சந்தோஷமாக வலம் வந்தார்.

இஸ்ஸேய் சகாவா
Cannibalism: போதையில் கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட நபர் - எங்கே?
Murder
MurderTwitter

தான் செய்த கொலையை மறைக்கவோ, அதற்காக வருந்தவோ இல்லை சகாவா. இவர் எழுதிய ‘இன் தி ஃபாக்’ என்ற புத்தகத்தில், தான் செய்த கொலை பற்றி விரிவாக எழுதியிருந்தார் சகாவா.

"Letter from Sagawa-kun" என்ற புத்தகத்தின் அம்சமாகவும் இந்த கொலை சம்பவம் அமைந்திருந்தது. இதற்கு நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதும் கிடைத்ததாக டைம்ஸ் நவ் தளம் கூறுகிறது.

ஒரு கட்டத்தில் இவர் செய்த கொலையே இவரது அடையாளமாக மாறி, ஒரு சினிமா ஸ்டார் போல இவரை மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். இவர் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடங்கள் நேர்காணலுக்கு அழைத்து இவரது கதையை உலகுக்கு ஒளிபரப்பியது. அவ்வனைத்திலும் சிரித்துக்கொண்டே பெருமையோடு தன் கதையை பகிர்ந்தார் சகாவா.

இந்நிலையில், தனது கடைசி காலத்தை தன் சகோதரருடன் கழித்த சகாவா, பக்கவாதத்தால் பாதிக்கப்படிருந்தார். கடைசியாக 2013ல் ஒரு நேர்காணலில் பேசிய சகாவா, “மனித மாமிசம் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அந்த கொலைக்கு பிறகு அவர் மனித மாமிசத்தை சாப்பிட்டதாக எந்த குறிப்புகளும் இல்லை. இந்நிலையில், சகாவ கடந்த நவம்பர் 24ஆம் தேதி உயிரிழந்துள்ளார்

இஸ்ஸேய் சகாவா
Cannibalism : நர மாமிச சுவையில் தயாரிக்கப்பட்ட பர்கர் - என்ன, எங்கே, ஏன் ? - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com