டிரெக்கிங் செய்ய விரும்புவரா நீங்கள்? இந்த மலை சிகரங்களில் மலையேற்றம் செய்ய இலவசமாம்!

பசுமையான அல்லது பனி நிறைந்த மலைகளில் சாகச பயணம் மேற்கொள்வது பலருக்கு விருப்பமான விஷயமாக இருக்கும். பலரும் இதனை ஆர்வமுடன் செய்வதால் அதை சுற்றுலாவின் ஒரு அங்கமாக மாற்றி பல மாநில அரசே ஊக்குவித்து வருகிறது. அப்படி உத்தராகண்ட் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
Uttarakhand : Indian mountaineers can now climb major mountain peaks for free
Uttarakhand : Indian mountaineers can now climb major mountain peaks for freeTwitter

இந்தியாவில் பார்க்க பல்வேறு வகையான இடங்கள் உள்ளன. ஒவ்வொரு சீசன்களுக்கு ஏற்ற வகையில் சுற்றுலாத் தலங்களை இந்தியா கொண்டுள்ளது.

வெயில் காலத்திற்கு, மழை காலத்திற்கு, பனி விழும் காலத்திற்கு என்று தனித்தனி இடங்கள் உள்ளன.

அதே போல அமைதியை விரும்புபவர்களுக்கு, சாகச விரும்பிகளுக்கு என்றும் சில இடங்கள் உள்ளன. குறிப்பாக சாக விரும்பிகளுக்கு என்று பார்க்கும்போது மலை ஏறுவது, பனி சறுக்குவது , அலைகளோடு மிதப்பது என்று நிறைய இருக்கிறது. அதில் நிறைய பேர் முயற்சி செய்ய விரும்புவது மலையேற்றம்.

பசுமையான அல்லது பனி நிறைந்த மலைகளில் சாகச பயணம் மேற்கொள்வது பலருக்கு விருப்பமான விஷயமாக இருக்கும். பலரும் இதனை ஆர்வமுடன் செய்வதால் அதை சுற்றுலாவின் ஒரு அங்கமாக மாற்றி பல மாநில அரசே ஊக்குவித்து வருகிறது. அப்படி உத்தராகண்ட் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய மலை சிகரங்களில் ஏறுவதற்கு இந்தியர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ரத்து செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியர்களுக்கு மட்டுமே. வெளிநாட்டினருக்கு எப்போதும்போல கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நந்தா தேவி, சதோபந்த், ஷிவ்லிங், ஸ்ரீகாந்தா, வாசுகி பர்பத், காமெட், ஹாதி பர்பத், துனகிரி, சௌகம்பா போன்ற புகழ்பெற்ற மலைச் சிகரங்களுக்கு அதிகப்படிய மலையேற்ற பிரியர்கள் வருகை தருகின்றனர்.

Uttarakhand : Indian mountaineers can now climb major mountain peaks for free
இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?மழைக்காலத்தில் செல்ல வேண்டிய இடங்கள்!

முன்னதாக, இந்திய மலையேறுபவர்கள் முறையே 6,500 மீட்டர், 6,500-7000 மீட்டர் மற்றும் 7001 மீட்டருக்கு மேல் சிகரங்களை ஏறுவதற்கு ரூ.3000, ரூ. 4000 மற்றும் ரூ.6000 செலுத்த வேண்டும். இப்போது இந்திய மலையேறுபவர்களுக்கு இந்தக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வெளிநாட்டினருக்கு, கட்டணங்கள் (ரூ. 20,000, ரூ. 25,000 மற்றும் ரூ. 40,000 ) மாறாமல் இருக்கும்.

மலை ஏறும் கட்டணத்தை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மலை ஏறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் போன்ற பிற முக்கியமான கடமைகள் முன்பு போலவே தொடரும். அதற்கு அரசு நிர்ணயித்துள்ள விண்ணப்ப கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uttarakhand : Indian mountaineers can now climb major mountain peaks for free
அமைதியை தேடி பயணமா? இந்த மழைக் காலத்தில் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com