உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 41 பணியாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று காலைதான் முதன்முதலாக உள்ளே இருப்பவர்களை வீடியோ வழியாக பார்க்க முடிந்திருக்கிறது.
6 இன்ச் அளவு உள்ள துளையிட்டு அதன் வழியாக பைப் செலுத்தி எண்டோஸ்கோபிக் கேமரா வழியாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களை காண முடிந்தது.
நவம்பர் 12ம் தேதி முதல் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் மீட்பு பணியில் இருக்கும் அலுவலர்கள் வாக்கி டாக்கி மூலமாகவும் ரேடியோ ஹெட்செட் மூலமாகவும் தொடர்புகொள்கின்றனர்.
அலுவலர்கள் தொழிலாளர்களை கேமரா முன்னால் வருமாறு அழைத்துள்ளனர். அடர்ந்த தாடியுடன் கண்களில் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் வந்த தொழிலாளர்கள் "ஓரளவு சமாளித்துக்கொண்டிருக்கிறோம்" எனப் பேசியிருக்கின்றனர்.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு நேற்று இரவு முதன்முதலாக கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. உலர் பழங்கள் மற்றும் தண்ணீர் அருந்தி சமாளித்து வருகின்றனர்.
சுரங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு சுற்றிலும் பாறைகள் சூழ்ந்து காணப்படுகிறது. நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதனால் கடந்தவாரத்தில் எடுக்கப்பட்ட பல மீட்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன.
தொழிலாளர்களை மீட்க 5 வகையான திட்டங்களை உருவாக்கியிருக்கின்றனர். 5 முகமைகளுடன் செயல்படுத்தியும் வருகின்றனர்.
மீட்பு பணிகளுக்கு தலைமை தாங்கும் கர்னல் தீபக் பாட்டில் தொழிலாளர்களுக்கு துளை மூலமாக மொபைல் ஃபோன் மற்றும் சார்ஜர் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
சர்வதேச சுரங்க வடிவமைப்பு வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரோபோடிக்ஸ் குழுவும் பணியாற்றிவருகிறது.
சர்வதேச சுரங்கப்பாதை திட்ட நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் 41 தொழிலாளர்களும் எந்த காயமும் இல்லாமல் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வரும் சுரங்கப்பாதையானது புனிதத்தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்தரி மற்றும் யமுனோத்தரி ஆகியவற்றை இணைப்பதற்காக கட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust