கடவுளின் பூமியான கேரளாவில் உள்ள கடற்கரை கிராமம் தான் வர்கலா. கடந்த சில ஆண்டுகளாக வர்கலாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வர்கலாவுக்கு சென்னையில் இருந்து நேரடியாக ரயில் வசதி இருக்கிறது.
இங்குள்ள பீச் தான் மெயின் அட்ராக்ஷனே என்று கூறலாம். ஒரு சின்ன கோவா என்றே கூறுமளவு இங்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை இருக்கிறது.
இங்கு கரையில் பாறைகள் இருக்கும் மெயின் கடற்கரை மிகவும் பிரபலம். இதனை வர்கலா கடற்கரை அல்லது பாபநாசம் கடற்கரை என அழைக்கின்றனர். அதேப்போலவே கருப்பு மணல் இருக்கும் பிளாக் சாண்ட் பீச்சும்.
வர்கலாவில் ஒரு நாள் முழுவதையும் கூட நம்மால் கடற்கரைகளில் செலவிடமுடியும். கப்பில் கடற்கரையில் ஒரு பக்கம் அலையடித்துக்கொண்டிருக்கும் கடல் தண்ணீரும், மறுபக்கம் இருக்கும் பேக் வாட்டர்ஸும் அற்புதமான உணர்வைக் கொடுக்கும்.
பேக் வாட்டர்ஸுக்குள் இறங்கினால் கண்ணாடி போன்ற தண்ணீருக்கு அடியில் நத்தைகளின் உலகம் இருப்பதைப் பார்க்கலாம்.
எந்த அளவுக்கு அதிகமாக நத்தைகள் இருக்குமென்றால் கால் வைக்கும் இடமெல்லாம் நத்தைகள் தான் நெருநெருவென தட்டுப்படும்.
வர்கலா க்ளிஃபில் உயிருடன் ஃப்ரெஷ்ஷான மீன்வகைகள் கிடைக்கும். நாம் கேட்கும் மீனை கேட்கும்படி சமைத்துக்கொடுக்கும் கடைகளும் இருக்கும். சலிக்காமல் ஷாப்பிங்கும் செய்யலாம்.
மேலும், அஞ்சு தொங்கு கோட்டை, லைட் ஹவுஸ், கோல்டன் தீவு, விஷ்ணு கோவில், சிவகிரி மடம், ஜனார்தன சுவாமி கோவில் ஆகிய இடங்கள் அருகில் இருக்கின்றன.
இங்குள்ள கலாச்சார மையத்தையும் பார்வையிடலாம். ஜடாயு சிலையில் ஒரு புகைபடம் எடுக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.
ஆனால் அங்கு செல்ல 1000 ரூபாய் வரை செலவாகும். அதிக செலவு செய்து சென்று பார்க்கும் அளவு அந்த இடம் சிறப்பானதா என்பதை வீடியோ பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள்...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust