சேலத்தில் இருக்கும் ”குட்டி கேரளா” குறித்து தெரியுமா? இந்த weekendக்கு செல்ல சூப்பர் Spot

பலரும் கேரளாவில் உள்ள ஆலப்புழாவுக்கு செல்ல விரும்புவார்கள். ஆனால் அதே போன்ற இடம் தமிழகத்திலும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? 'குட்டி கேரளா' என அழைக்கப்படும் இந்த அழகான இடத்தை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
சேலத்தில் இருக்கும் ”குட்டி கேரளா” குறித்து தெரியுமா? இந்த weekendக்கு செல்ல சூப்பர் Spot
சேலத்தில் இருக்கும் ”குட்டி கேரளா” குறித்து தெரியுமா? இந்த weekendக்கு செல்ல சூப்பர் SpotTwitter

மக்கள் பெரிதும் விரும்பும் கேரளாவைப் போலவே, தமிழகத்திலும் ஒரு 'குட்டி கேரளா' என அழைக்கப்படும் அழகான இடம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

சுற்றுலா பிரியர்களுக்கு கேரளா பிடித்தமான இடமாகும். பாரம்பரிய டூர் முதல் அட்வென்சர் ட்ரிப் வரை கேரளாவில் மேற்கொள்ள நிறைய இடங்கள் உள்ளன.

குறிப்பாக பலரும் கேரளாவில் உள்ள ஆலப்புழாவுக்கு செல்ல விரும்புவார்கள். ஆனால் அதே போன்ற இடம் தமிழகத்திலும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? 'குட்டி கேரளா' என அழைக்கப்படும் இந்த அழகான இடத்தை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகில் உள்ள பூலாம்பட்டி என்ற கிராமம் தான் ஏழைகளின் ஆலப்புழா என சொல்லப்படுகிறது. கேரளாவின் ஆலப்புழாவை அடைய எப்படி படகு சவாரி பிரதானமோ, அதுபோல பூலாம்பட்டியை அடைய வேண்டும் என்றால் படகில் தான் செல்ல முடியும்.

ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பயணத்திற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால் பூலாம்பட்டி ஒரு சிறந்த இடமாகும். இங்கே சென்று வர அவ்வளவு பணம் செலவாகாது. சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.

எடப்பாடியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூலாம்பட்டி மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு அழகான நீர் நிலைகள் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை கொண்ட படகு சவாரி சுற்றுலா பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

சேலத்தில் இருக்கும் ”குட்டி கேரளா” குறித்து தெரியுமா? இந்த weekendக்கு செல்ல சூப்பர் Spot
Marayoor: மூணார், உடுமலைபேட்டை நடுவில் குழுகுழு ஸ்பாட் - என்னென்ன இடங்களைப் பார்க்கலாம்?

படகில் செல்லும் வழி எங்கும் பச்சை பசேல் என்ற காட்சியை காண முடியும். மேலும் பூலாம்பட்டியில் கொக்கு மீன் ரொம்ப பிரபலம். அங்கு சென்றால் நிச்சயம் டிரை செய்து பாருங்கள்.

இயற்கையின் அழகை கண் இமைக்காமல் ரசித்தவாறு செல்லும் படகு சவாரி 15 ரூபாய் தான். வெயிலின் அதீத தாக்கத்திலும் இந்த பூலாம்பட்டி காவிரி ஆறு வற்றாது எனக் கூறப்படுகிறது. அப்படி சவாரி செய்யும் போது ஆற்றில் குளிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அதற்கும் வசதிகள் உள்ளன.

சேலம், ஈரோட்டில் இருந்து 1 மணி நேரத்தில் சென்று விடலாம். அதேபோல கோவையிலிருந்து இரண்டு மணி நேரத்திலும் போய் விடலாம்.

சேலத்தில் இருக்கும் ”குட்டி கேரளா” குறித்து தெரியுமா? இந்த weekendக்கு செல்ல சூப்பர் Spot
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com