Ranveer Singh: நிர்வாண புகைப்படத்தை வைத்து பழைய துணி வாங்கிய தொண்டு நிறுவனம் - Viral Video

ரன்வீரிடம் ஆடையில்லாத காரணத்தினால் அவருக்கு ஆடை வழங்குமாறு சொல்லி இந்தோரை சேர்ந்த நேகி கி தீவார் என்ற தொண்டு நிறுவனம் துணிகளை சேர்த்து வருகிறது.

Ranveer Singh
Ranveer SinghTwitter
Published on

ழைபேப்பர் பத்திரிகைக்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்து ஃபோட்டோஷூட் செய்திருந்தார். கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்டிவாக வைத்திருக்கும் விஷயம் இது தான்.

இவருக்கு முன்னர் ஒரு சில பாலிவுட் நடிகர்கள், அவ்வப்போது நடிகைகளும் கூட நிர்வாணப் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போதும் சர்ச்சைகள் எழத் தான் செய்தன. எனினும், இந்த ஃபோட்டோஷூட் கொஞ்சம் அதிகமாகவே பேசப்பட்டு வருகிறது.


Ranveer Singh
ரன்வீர் சிங்: இணையத்தில் வைரலான நிர்வாண போட்டோஷூட் - பின்னணி என்ன?
 ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்Twitter

இவரது நிர்வாண புகைப்படங்கள் வெளியான போது, பலரும் இவரது தைரியத்தை பாராட்டி வந்தாலும், இதற்கான எதிர்ப்புகளும் வலுத்துக்கொண்டு தான் இருக்கிறது. நடிகர் ரன்வீர் சிங் மீது ஷ்யாம் மங்காராம் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் பெண்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் விதமாக இந்த புகைப்படங்கள் இருப்பதாக சொல்லி காவல்துறையில் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்து. இந்த புகாரை முன்னிட்டு மும்பை போலீசார் ரன்வீர் சிங் மீது FIR பதிந்தனர்.

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Myntra இவர் ஆடை அணிந்திருப்பது போல எடிட் செய்து, 'Fixed it!' என்ற தலைப்பிட்டு மறு நாள் பகிர்ந்திருந்தது.

ரன்வீர் சிங் புகைப்படங்கள் வெளியானது முதல் விதவிதமான மீம்கள் வந்தன. இப்போது மற்றொரு விசித்திர சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Ranveer Singh
"Fixed it": ரன்வீர் சிங் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்ட Myntra - ஓர் அடடா பகிர்வு

"ரன்வீரிடம் ஆடையில்லாத காரணத்தினால் அவருக்கு ஆடை வழங்குங்கள்" எனச் சொல்லி இந்தூரை சேர்ந்த நேகி கி தீவார் என்ற தொண்டு நிறுவனம் பழைய துணிகளைச் சேர்த்து வருகிறது.

இந்தூரில் ஒரு இடத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதில் விரும்புபவர்கள் ரன்வீருக்கு ஆடைகள் வழங்கலாம் என்பது போல பதாகை வைக்கப்பட்டிருந்தது.

மக்கள் வரிசையாக வந்து அதில் பழைய துணிகளைப் போட்டுச் செல்கின்றனர்.


Ranveer Singh
"விஜயிடம் இருந்து இதை கற்றுக்கொண்டேன்" - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் குறிப்பு

ரன்வீர் சிங் இந்த புகைப்படங்களை பகிர்ந்த பிறகு, தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் தான் ஆடைகளின்றி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது


Ranveer Singh
ரன்வீர் சிங்கை தொடர்ந்து நிர்வாண போஸ் கொடுத்த விஷ்ணு விஷால் - வைரலாகும் புகைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com