மைசூர் சாண்டல் சோப்பிற்கும் உலகப்போருக்கு என்ன தொடர்பு? விறுவிறு வரலாறு

இந்த சந்தனம் மற்றும் மரக்கட்டைகளை வைத்து வியாபாரம் செய்ய விரும்பிய அரசர் திப்பு சுல்தான் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்யத் துவங்கினார். தொடர்ந்து, இந்த வாணிபம் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிந்தது.
மைசூர் சாண்டல் சோப்பிற்கும் உலகப்போருக்கு என்ன தொடர்பு?  விறுவிறு வரலாறு
மைசூர் சாண்டல் சோப்பிற்கும் உலகப்போருக்கு என்ன தொடர்பு? விறுவிறு வரலாறு Twitter
Published on

1990களில் பிறந்த 90s கிட்ஸ்களுக்கும், 2000களில் பிறந்த 2k கிட்ஸ்களுக்கும் இடையே ஒரு டிஜிட்டல் போரே போய்க்கொண்டிருக்கிறது.

அதாவது, இந்த நூற்றாண்டுகளில் பிறந்தவர்கள் சிறிய வயதில் தாங்கள் அனுபவித்த விஷயங்கள் தான் மிகச் சிறந்தது என்று தங்களுக்குள் போட்டி போட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்கள் குழந்தைகளாக இருந்த போது பார்த்த, அனுபவித்த விஷயங்கள் ஏராளம். அந்த வகையில், 1990களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பரீட்சயமான ஒரு விஷயம் மைசூர் சாண்டல் சோப்.

இந்த சோப் மற்ற சோப்புகளை விட வாசனை மிக்கதாகவும், வடிவத்தில் வித்தியாசமானதாகவும் இருந்ததால் மக்களை பெரிதும் கவர்ந்தது.

அப்படி, சிறிய வயதில் இந்த மைசூர் சாண்டல் சோப்பை ஒரு முறை கூட பயன்படுத்தாத 90ஸ் கிட்ஸ்களை பார்ப்பது மிக மிக அரிது. இப்படிப்பட்ட மைசூர் சாண்டல் சோப்பிற்கு பின்னால் ஒரு உலகப்போர் வரலாறே இருக்கிறதாம். அதாவது, இந்தியாவில் மைசூர் பகுதியில் அமைந்துள்ள சந்தன மரங்கள் அதன் வாசத்திற்கு பெயர் போனது.

இந்த சந்தனம் மற்றும் மரக்கட்டைகளை வைத்து வியாபாரம் செய்ய விரும்பிய அரசர் திப்பு சுல்தான் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்யத் துவங்கினார். தொடர்ந்து, இந்த வாணிபம் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிந்தது.

இந்த சந்தனக் கட்டைகளை இறக்குமதி செய்த வெளிநாட்டு அரசுகள் அதனை வாசனைத் திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தி அதில் நல்ல லாபமும் எடுத்தது.

அதே போல, சந்தனக் கட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் மிக வளமான தேசமாக மாறியது மைசூர். இப்படிப்பட்ட சூழலில் தான் 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் வெடித்தது.

இந்த போரின் போது மைசூரில் இருந்து சந்தனக் கட்டைகளை ஏற்றுமதி செய்யும் வாணிபம் தடைபட்டது. இதனை கவனத்தில் கொண்ட அப்போதைய மைசூர் அரசர் கிருஷ்ணராஜ வாடியார், பொறியாளர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்பவரை அணுகினார்.

மைசூர் சாண்டல் சோப்பிற்கும் உலகப்போருக்கு என்ன தொடர்பு?  விறுவிறு வரலாறு
உலகின் மிக சிறிய போர்: 38 நிமிடத்தில் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு - ஒரு விசித்திர வரலாறு!

இவர்களது கூட்டு முயற்சியின் கீழ் 1916 ஆம் ஆண்டில் பெங்களூருவில் முதல் முறையாக சந்தன மர எண்ணெய் மற்றும் சோப்பு தயாரிக்கும் ஆலை திறக்கப்பட்டது.

தொடர்ந்து உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் 1918 ஆம் ஆண்டில் பெங்களூரு கப்பன் பூங்கா பகுதியில் சந்தன எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டது.

அதன்பின்னர் 1980 ஆம் ஆண்டில் இந்த இரண்டு தொழிற்சாலைகளையும் ஒன்றாக இணைத்த கர்நாடகா அரசு அதனை சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் என்று பெயர் மாற்றியது. இப்படி 100 ஆண்டு கால வரலாற்றைக் கடந்த மைசூர் சாண்டல் சோப் இன்று வரைக்கும் மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது.

மைசூர் சாண்டல் சோப்பிற்கும் உலகப்போருக்கு என்ன தொடர்பு?  விறுவிறு வரலாறு
ஜெர்மனி: நாட்டுக்காக நாஜி வீரர்களுடன் குழந்தை பெற்ற ஆரிய பெண்கள் - மறைக்கப்பட்ட சோக வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com