இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது ஏன்? புராணம் என்ன சொல்கிறது?

மக்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பொறுத்து வெவ்வேறு கடவுள்களை வணங்குகிறார்கள். சிலர் விநாயகப் பெருமானின் பக்தர்களாகவும், சிலர் கார்த்திகேயப் பெருமானை வழிபடுபவர்களாகவும், சிலர் பார்வதி தேவியின் பக்தர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் அரச மரத்தையே வணங்குகின்றனர்.
இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது ஏன்? புராணம் என்ன சொல்கிறது?
இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது ஏன்? புராணம் என்ன சொல்கிறது?Twitter

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேப்ப மரம், அரச மரம் என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு.

அதிலும் குறிப்பாக அரசமரம். இந்து புராணங்களில் மிகவும் புனிதமான மரங்களில் ஒன்றாக அரச மரம் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுகிறது.

இந்து புராணங்களின்படி இந்த மரம் பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆஞ்சநேய கோவிலில் அரச மரம் சிறப்பு வாய்ந்தது. இம்மரத்தைச் சுற்றி வர ஆஞ்சநேய ஸ்வாமி ஆசிர்வதித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவார் என்பது மக்களாலும், அர்ச்சகர்களாலும் நம்பப்படுகிறது.

கௌதம புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றதால் அரச மரம் போதி மரம் என்றும் அழைக்கப்படுகிறது. தியானம் செய்வதற்கும் தெய்வங்களை வைத்து வழிப்படுவதற்கும் இந்த மரம் அறியப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் படி, கால்-கை வலிப்பு, வயிற்றுப்போக்கு என பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க அரச மரத்தைப் பயன்படுத்தி பல மருந்துகள் தயாரிக்கலாம்.

அரச மரம் பல்வேறு பூச்சிகளை அகற்ற உதவும் மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதால் கோவில்களில் வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது ஏன்? புராணம் என்ன சொல்கிறது?
Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?

மக்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பொறுத்து வெவ்வேறு கடவுள்களை வணங்குகிறார்கள். சிலர் விநாயகப் பெருமானின் பக்தர்களாகவும், சிலர் கார்த்திகேயப் பெருமானை வழிபடுபவர்களாகவும், சிலர் பார்வதி தேவியின் பக்தர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் அரச மரத்தையே வணங்குகின்றனர்.

இந்து புராணங்களில் இது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், விஷ்ணு மரத்தின் வேர்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது. கிருஷ்ணர் தண்டு மற்றும் நாராயணன் கிளை என்று கருதப்படுகிறது.

பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வர முனைகிறார்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது விரும்பிய பொருளை அல்லது நபரைப் பெற உதவும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அவர்களுடைய துக்கங்கள் நீங்கும், அவர்களுடைய நோய்கள் குணமாகும் என பல விஷயங்களை நம்புகின்றனர்.

இந்துக்கள் அரச மரத்தை வழிபடுவது ஏன்? புராணம் என்ன சொல்கிறது?
உலகிலேயே உயரத்தில் இருக்கும் சிவன் கோயில் இதுதான்! இந்தியாவில் எங்கு இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com