Atal Pension Yojana என்றால் என்ன? இந்த திட்டம் குறித்த A to Z விவரங்கள் இதோ..!

தனியார் & அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் எதிர்காலத்தில் ஓய்வூதியம் எதையாவது பெற வேண்டும் என்கிற நோக்கில், இந்திய ஒன்றிய அரசு கடந்த 2015 ஜூன் காலத்தில் கொண்டு வந்த திட்டம் தான் இந்த அதல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana).
Atal Pension Yojana
Atal Pension Yojana ட்விட்டர்
Published on

அதல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

இந்தியாவில் அரசுப் பணிகளில் இருந்தவர்களுக்கு சில தசாப்தங்கள் முன்பு வரை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அதே போல ஏழை எளிய மக்களும், தனியார் & அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் எதிர்காலத்தில் ஓய்வூதியம் எதையாவது பெற வேண்டும் என்கிற நோக்கில், இந்திய ஒன்றிய அரசு கடந்த 2015 ஜூன் காலத்தில் கொண்டு வந்த திட்டம் தான் இந்த அதல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana).

இதற்கு முன் 'ஸ்வாவலம்பன் யோஜனா' என்கிற பெயரில் செயல்பட்டு வந்த திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு அதல் பென்ஷன் திட்டம் வடிவமைக்கப்பட்டு, பிறகு அதல் பென்ஷனிலேயே ஸ்வாவலம்பன் திட்டத்தில் இருந்தவர்கள் இணைக்கப்பட்டனர்.

அதல் பென்ஷன் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த திட்டத்தில் இணைபவர்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு பணத்தைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். 60 வயதுக்குப் பின் அவர்கள் பணம் செலுத்திய திட்டத்தைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் 1,000 அல்லது 2,000 அல்லது 3,000 அல்லது 4,000 அல்லது 5,000 ரூபாய் ஓய்வூதியமாக வரும். இந்த திட்டத்துக்கு அரசே பொறுப்பு என்பதால் முதலீடு செய்யும் பணம் நிச்சயம் மக்கள் கையில் வந்து சேரும் என நம்பலாம்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் சேரலாம்?

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் சேரலாம்.

2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல், இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய, மாநில அரசுப் பணியாளர்கள் அல்லது அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இந்த திட்டத்தில் இணையலாமா?

தாராளமாக இணையலாம். இந்திய குடிமக்கள் எல்லோருக்குமே இந்த திட்டத்தில் இணைய அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதல் பென்ஷன் திட்டத்தில் எப்படி இணைவது?

வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தை அணுகி, ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்குங்கள். அதே வங்கி அல்லது அஞ்சலக அலுவலகத்தில், அதல் பென்ஷன் திட்டத்தைக் கையாளும் அதிகாரிகளிடம் உங்கள் சேமிப்புக் கணக்கு விவரங்களைக் கொடுத்து அதல் பென்ஷன் திட்டத்துக்கான படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களைக் கொடுத்தால் போதும், அதல் பென்ஷன் கணக்கைத் தொடங்கி விடலாம்.

ஒருவேளை ஏற்கனவே வங்கி அல்லது அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு இருக்கிறது என்றால், அவர்கள் கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று அதல் பென்ஷன் திட்ட படிவத்தை நிரப்பி இணையலாம்.

இணைய வழியிலும் அதல் பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பம் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வலைதளத்திலும் கிடைக்கும்.

ஆதார் இருந்தால் தான் அதல் பென்ஷன் கணக்கைத் தொடங்க முடியுமா?

ஆதார் & சரியான தொலைபேசி எண் இல்லாமல் அதல் பென்ஷன் கணக்கைத் தொடங்க முடியாது என பேங்க் பசார் வலைதளம் கூறுகிறது. ஆனால் என் எஸ் டி எல் என்கிற அரசு அமைப்போ, ஆதார் சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழ் அதல் பென்ஷன் திட்டம் வருவதால் ஆதாரை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதார் இல்லாமல் திட்டத்தில் இணைய முடியுமா இல்லையா என்று தெளிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை.

வங்கி அல்லது அஞ்சலகத் துறை சேமிப்புக் கணக்கு இல்லாமல் அதல் பென்ஷன் திட்டத்தில் இணைய முடியுமா?

நிச்சயமாக முடியாது. இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால் வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கு அவசியம்.

அதல் பென்ஷன் திட்ட விண்ணப்பத்தில் நாமினி குறிப்பிடாமல் திட்டத்தில் இணைய முடியுமா?

முடியாது. கட்டாயம் யாரையாவது நாமினியாகக் குறிப்பிட வேண்டும்.

யாரை நாமினியாகத் தேர்வு செய்யலாம்?

திருமணம் ஆனவர் என்றால், கணவன் அல்லது மனைவியைத் தேர்வு செய்யலாம். திருமணம் ஆகாதவர் என்றால் பெற்ரோரில் ஒருவரைத் தேர்வு செய்யலாம். நாமினியாகக் குறிப்பிடுவோரின் ஆதார் விவரங்களைச் சமர்பிக்க வேண்டி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

அதல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒருநபர் பல கணக்குகளைத் தொடங்கலாமா?

முடியாது. ஒருவருக்கு ஒரு அதல் பென்ஷன் திட்டக் கணக்கைத் தான் தொடங்க முடியும்.

சிறார்களால் அதல் பென்ஷன் திட்டக் கணக்கைத் தொடங்க முடியுமா?

முடியாது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே அதல் பென்ஷன் திட்டத்தில் இணைய முடியும்.

Atal Pension Yojana
பற்றி எரியும் அக்னிபத் சர்ச்சை : வெளிநாடுகளில் இது போன்ற தேர்வு முறைகள் உள்ளதா?

40 வயது நிறைவடைந்தவர்கள் அதல் பென்ஷன் திட்டத்தில் சேர முடியுமா?

முடியாது. 40 வயது நிறைவடைவதற்குள் இந்த திட்டத்தில் சேர்ந்துவிட வேண்டும். அப்போது தான் 20 ஆண்டு கால முதலீட்டைத் தொடர்ந்து 60 வயதிலிருந்து பென்ஷன் தொகை கொடுக்க முடியும்.

வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) அதல் பென்ஷன் திட்டத்தில் இணைய முடியுமா?

முடியும் என்கிறது என் எஸ் டி எல் வலைதள விவரங்கள்.

திட்டத்தில் இணைந்த பின் ஒருவர் இந்திய குடியுரிமையை மறுத்துவிட்டால் என்ன ஆகும்?

ஒருவேளை இந்த திட்டத்தில் இணைந்த பின் ஒருவர் இந்திய குடியுரிமையை மறுத்துவிட்டால், அவரது கணக்கை மூடி, அவருடைய பணம் அவருக்கே வழங்கப்பட்டுவிடும். இதில் அவர் செலுத்திய பணத்துக்கான வட்டித் தொகை அதிகரிப்புகளும் அடக்கம்.

பயனாளர் எவ்வளவு தொகையைச் செலுத்த வேண்டும்? எந்த வயதுக்காரர் எவ்வளவு தொகை செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்?

Plan Details படத்தைப் பார்க்கவும்

ஆதாரம்: இந்திய அஞ்சலக அலுவலகம்

எப்படி, எப்போது பணம் செலுத்துவது?

வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் முறையில் பணத்தைச் செலுத்தலாம்.

ஒருவருக்கு மாதத்தின் தொடக்கத்தில் முதல் தவணைப் பணம் டெபிட் ஆனால், அடுத்தடுத்த மாதங்களிலும் ஏறத்தாழ அதே தேதியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து அதல் பென்ஷன் திட்டத்துக்கு பணம் டெபிட் ஆகும்.

மாதாந்திர திட்டத்திலிருந்து காலாண்டு திட்டத்துக்கு மாற்ற முடியுமா?

மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு என எப்படி வேண்டுமானாலும் ஆட்டோ டெபிட் தவணையை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செய்து கொள்ள முடியும் என்கிறது என் எஸ் டி எல் வலைதளம். எப்போதும் மாதாந்திர தவணை பாக்கி தொகை, சேமிப்புக் கணக்கில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தவணைத் தொகை செலுத்த தாமதம் ஆனால் என்ன ஆகும்?

திட்டத்துக்கான தவணை செலுத்தத் தவறினால், அபராதம் போல திட்டத்துக்குத் தகுந்தாற் போல 1 - 15 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

Atal Pension Yojana
நீங்களே வருமான வரியை தாக்கல் செய்வது எப்படி? | How to file income tax returns?

சேமிப்புக் கணக்கில் பணமில்லை என்றால் என்னவாகும்?

ஒரு தவணை ஆட்டோ டெபிட் ஆகும் காலத்தில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால், அடுத்த தவனை டெபிட் செய்யப்படும் போது கணக்கில் இருக்கும் பணத்தைப் பொருத்து டெபிட் செய்து கொள்ளப்படும்.

அதல் பென்ஷன் திட்டத்தில் திரட்டப்படும் பணத்தை யார் நிர்வகிக்கிறார்கள்? எதில் முதலீடு செய்கிறார்கள்?

இந்த திட்டத்தை எஸ் பி ஐ பென்ஷன் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட், எல் ஐ சி பென்ஷன் ஃபண்ட் லிமிடெட், யூ டி ஐ ரிட்டையர்மெண்ட் சொல்யூஷன் லிமிடெட் என மூன்று நிறுவனங்கள் நிர்வகிப்பதாக பி எஃப் ஆர் டி ஏ கூறுகிறது.

இந்த திட்டத்தில் திரட்டப்படும் பணத்தில் 45 - 50% பணம் அரசு பத்திரங்கள் போன்ற சொத்துக்களிலும், 35 - 45% பணம் வங்கி டெபாசிட் & கடன் பத்திரங்களிலும், 5 - 15% பணம் ஈக்விட்டி & ஈக்விட்டி சார் முதலீடுகளிலும், சொத்தைப் பின்புலமாகக் கொண்ட முதலீடுகளில் 5%, ரொக்கம் மற்றும் தினசரி பணச் சந்தையில் 5% பணமும் முதலீடு செய்யப்படுவதாக பேங்க் பசார் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

திட்டத்தில் என்ன பற்று வரவு இருக்கிறது? கணக்கு வழக்குகளை எங்கே பார்ப்பது?

ஒவ்வொரு ஆண்டும், அதல் பென்ஷன் திட்ட விவரங்கள் ஸ்டேட்மெண்ட் போல, அதல் திட்டத்தில் பதிவு செய்திருக்கும் முகவரிக்கு தபாலில் வந்து சேரும். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை எஸ் எம் எஸ் மூலமும் திட்டத்தில் என்ன இருக்கிறது, எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது போன்ற விவரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

உங்களிடம் பதிவு செய்யப்பட்ட PRAN எண் இருந்தால் அதைப் பயன்படுத்தி இணையத்திலும் அதல் திட்ட விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம். எனவே PRAN இருப்பவர்கள், அதை அதல் பென்ஷன் திட்டத்தோடு இணைத்துக் கொள்ளவும். சமீபத்தில் அதல் பென்ஷன் திட்டத்துக்காக தனி செயலியையும் பி எஃப் ஆர் டி ஏ அமைப்பு அறிமுகப்படுத்தியது. அதைப் பயன்படுத்தியும் உங்கள் கணக்கு விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு ஏதாவது உதவி எண் இருக்கிறதா?

1800-110-069 என்கிற எண் அதல் பென்ஷன் திட்டத்துக்கான உதவி எண்ணாக என் எஸ் டி எல் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதல் பென்ஷன் திட்டத்துக்கு வரிச் சலுகை ஏதேனும் உண்டா?

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மொத்த தொகையும் இந்திய வருமான வரிச் சட்டம் 80 CCD (1) பிரிவின் கீழ் வரிச் சலுகைக்கு உரியது.

இந்த திட்டத்தில் இருந்து 60 வயதுக்கு முன்பே வெளியேறுவது எப்படி?

விருப்பத்தின் அடிப்படையில் 60 வயதுக்கு முன்பே இந்த திட்டத்தில் இருந்து வெளியேறலாம். அப்படி வெளியேறினால் அவர் செலுத்திய பணம் மற்றும் அதற்கான வட்டி மட்டுமே கணக்கிட்டு அவருக்கு கொடுக்கப்படும். இப்படி வெளியேற விரும்புவோர், அதல் கணக்கு நிர்வகிக்கப்படும் வங்கி அல்லது அஞ்சலக அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் அதல் திட்டத்தை மூட ஒரு மனு எழுதிக் கொடுத்தால் போதுமானது.

60 வயது வரை திட்டத்தில் முறையாக பணம் செலுத்தி நிறைவு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முதலில் திட்டத்தில் இணைந்தவர் உயிரிழக்கும் வரை மாதாமாதம் பென்ஷன் கிடைக்கும்.

அடுத்து அவரது கணவர் அல்லது மனைவி காலமாகும் வரை பென்ஷன் கொடுக்கப்படும்.

கணவன் அல்லது மனைவி காலமான பின், மீதமிருக்கும் பென்ஷன் தொகை அவரது நாமினிக்கு வழங்கப்படும். எனவே அதல் பென்ஷன் திட்டத்தைத் தொடங்கினால் அதை எப்பாடுபட்டாவது 60 வயது வரை நிறைவு செய்துவிடப் பாருங்கள்.

அதல் பென்ஷன் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்கு முன் இறந்துவிட்டால்?

ஒருவேளை இந்த திட்டத்தில் இணைந்து சரியாக தவணைகளைச் செலுத்தி வந்த நபர் 60 வயதுக்கு முன்பே இறந்துவிட்டால், அவர் படிவத்தில் குறிப்பிட்டு இருக்கும் நாமினிக்கு ஒரு பெரிய தொகை வழங்கப்படும். யாருக்கு எந்தத் தொகை வழங்கப்படும் என்பதை கீழே கொடுத்திருக்கு (Corpus details) அட்டவணையில் பார்க்கவும்.

ஆதாரம்: பைசா பஜார்

அல்லது

திட்டத்தில் இணைந்தவரின் கணவன் அல்லது மனைவி அதே கணக்கை அவர்களின் 60 வரை தங்கள் கணக்கு போலத் தொடர்ந்து பயன்களைப் பெறலாம்

அதல் பென்ஷன் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்கள் ஏதேனும் இருக்கிறதா?

யூடியூப் - APY Ki Pathshala (https://www.youtube.com/channel/UC5SuHg-O6ipH1J_HTfU17ug)

NPS - National Pension System

https://www.youtube.com/channel/UCLMx1eZWY-LDeyIWCwYu15Q

ஃபேஸ்புக் - Atal Pension Yojana

https://www.facebook.com/OfficialAPY/

ட்விட்டர் - @PFRDAOfficial

https://twitter.com/pfrdaofficial?lang=en

Atal Pension Yojana
வரலாற்றில் RSS அமைப்பு சந்தித்த தடைகள் : ஒரு வரலாற்று பார்வை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com