இந்தியா என்னும் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பெங்களூருவில் 2வது கூட்டம் நடந்தது. அப்போது கட்சிகள் ஒருங்கிணைந்து, அந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியுள்ளது.
இந்திய குடியரசு என்று இருக்கும் பெயரை பாரத் குடியரசு என்று மத்திய அரசு மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெயர் மாற்ற தீர்மானத்தை அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி சு வெங்கடேசன் தனது X தள பக்கத்தில், நாட்டின் பெயரை மாற்ற எவ்வளவு செலவாகும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
அதில், இதற்கு முன்னர் இந்தியாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள், அதற்கான செலவு விவரம் இருந்தது.
இது குறித்து காங்கிரஸ் ஆதரவு ட்விட்டர் பக்கம் ஒன்றின் பதிவில், "அலகாபாத் என்றிருந்த பெயரை பிரயாக் ராஜ் என்று மாற்ற ரூ.300 கோடி செலவாகியுள்ளது. அதேபோல அவுரங்காபாதின் பெயரை சத்ரபதி சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றினர். அதற்கு 500 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவேண்டும் எனில், 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகலாம் என கணிக்கப்படுகிறது." எனக் கூறப்பட்டிருந்தது.
அவர் தனது பதிவில், ”அரசியல் சாசனத்தின் முதல் வரியான "இந்தியாவின் மக்களாகிய நாங்கள்" ( We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல்.
இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம்.”
சொத்து பத்திரம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான ஆவணங்களிலும் பெயர் மாறும்
நாட்டின் பணம் (இந்திய ரிசர்வ் வங்கி என்றே அச்சிடப்பட்டிருக்கும்) மாறும்
இந்தியாவின் முக்கியமான பெறு நிறுவங்கள் யாதெல்லாம் இந்தியா என்ற பெயரை கொண்டுள்ளதோ, அதுவெல்லாம் மாறும்
பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, லைசென்ஸ் அனைத்தும் மாற்றம் செய்ய நேரிடும்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மாற்றம் காணும்
இதர பல மாற்றங்கள் நாட்டுக்குள் நடக்கும். தனி மனித பொருளாதார பாதிப்படையும், நாட்டின் பொருளாதாரமும்.
இந்த பெயர் மாற்றமானது கொண்டுவரப்பட்டால் குழப்பங்கள் வரும்.
எனக்கு வீட்டில் வைத்த பெயர் பிடிக்கவில்லை என நமக்கு பிடித்த ஸ்டைலான பெயரை வைத்துக்கொள்ளும் கதையல்ல இது!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust