இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் மிக நீண்ட வரலாறு இருக்கிறது. இன்றும் அவற்றின் அழகினால், பன்னாட்டு மக்களை ஈர்த்து வருகிறது.
இந்தியாவின் கட்டிடக்கலை அற்புதங்களாக சொல்லப்படும் இந்த நினைவுச்சின்னங்கள், நம் நாட்டை ஆண்ட பல வம்சத்தினரின் அடையாளங்கள்.
இப்படி, இந்தியா என்றதும் நம் நினைவுக்கு வரும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்களில் ஒன்று தான் தாஜ் மஹால். உலகின் 7 அதிசயங்களுள் ஒன்று இந்த நுணுக்கமான வேலைபாடுகள் கொண்ட சமாதி.
இன்றைய தலைமுறையினருக்கும் காதலின் சின்னமாக இருக்கும் தாஜ் மஹால், முகலாய மன்னன் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜுக்காக கட்டப்பட்டது.
தாஜ் மஹால் கட்டப்பட்ட சமயத்தில் தான் இந்திய தலைநகர் டெல்லியில் இருக்கும் செங்கோட்டை, ஜம்மா மசூதி உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டது.
இந்த தாஜ் மஹாலை கட்டி முடித்ததுமே, மீண்டும் இப்படியொரு சின்னத்தை கட்டிவிடக் கூடாது என்பதற்காக, பணியாளர்களில் கைகள் வெட்டப்பட்டதாக சூழ்ச்சி கதைகள் எல்லாம் கூட கேட்டிருப்போம் தானே?
இந்த தாஜ் மஹாலை வடிவமைத்தவர் யார்? அவருக்கு என்ன சம்பளம் வழங்கப்பட்து என தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம்
உஸ்தாத் அகமது லஹோரி என்ற கட்டிடக்கலை நிபுணர் தான் தலைமை தாங்கி தாஜ் மஹாலை வடிவமைத்தார். இவர் தான் ஷாஜகான் ஆட்சி காலத்தில் இருந்த தலைமை கட்டிடக்கலை நிபுணர்.
உஸ்தாத் அகமது லஹோரி ஒரு கட்டிடக்கலை நிபுணர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் பாகிஸ்தானின் லாகூர் என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது குடும்பத்தினர் டெல்லிக்கு இடம்பெயர்ந்தனர்.
உஸ்தாத் லஹோரி, வடிவியல் (geometry), எண்கணிதம் மற்றும் வானியல் உள்ளிட்ட கலைகளை அறிந்தவர். இவரது நிபுணத்துவத்தை பாராட்டும் வகையில், ஷாஜகான் இவருக்கு நாதிர் உல் அசர் என்ற பட்டத்தினை வழங்கினார். இதற்கு யுகத்தின் அதிசயம் என்று பொருள்
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஷாஜகான் உஸ்தாத் அகமது லஹோரிக்கு சம்பளமாக ரூ.10,000 வழங்கியுள்ளார். இது அன்றைய தேதியின் மதிப்பு. இதனை இன்றைய மதிப்புக்கு கணக்கிட்டால், கோடிகளில் சம்பாதிக்கும் பல சி இ ஓ-க்களின் சம்பளத்தை விட அதிகம் தான்!
ஷாஜகான் கட்டிடக்கலையின் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார். இந்தியா முழுவதும் பல கட்டிடங்களை எழுப்ப நினைத்திருந்தார்.
அதன்படி, ஆக்ராவை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த ஷாஜகான், டெல்லியில் செங்கோட்டையை கட்டினார். அதன் பிறகே (மே 12 1638) டெல்லியை தலைநகராக அறிவித்தார்.
தாஜ் மஹாலை கட்டுவதில் முக்கிய பங்கு வகித்த காரணத்தினால் உஸ்தாத் அகமது லஹோரியையே செங்கோட்டையை வடிவமைப்பதற்கும் நியமித்தார் ஷாஜகான்.
டெல்லியில் உள்ள ஜம்மா மசூதிக்கு அடிதளம் போட்டதும் உஸ்தாத் லஹோரி தான். ஆனால் அதனை தொடங்கும் முன்னரே உஸ்தாத் அகமது லஹோரி உயிரிழந்துவிட்டார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust