கோவிட் 19 : 10 வயது மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்- 3 ஆண்டுகளாக வீட்டை திறக்காதது ஏன்?

காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய உறுப்பினர்கள் இணைந்து வீட்டின் முன் கதவை உடைத்து முன்முன்மஜி என்ற அப்பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் மீட்டுள்ளனர்.
கோவிட் 19 : 10 வயது மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்- 3 ஆண்டுகளாக வீட்டை திறக்காதது ஏன்?
கோவிட் 19 : 10 வயது மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்- 3 ஆண்டுகளாக வீட்டை திறக்காதது ஏன்?Representational

10 வயது மகனுடன் ஒரு பெண் தன்னை 3 ஆண்டு காலமாக வீட்டுக்குள் பூட்டி வைத்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

33 வயதான அந்த பெண் ஹரியானா மாநிலம் சக்கர்புர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.

கோவிட் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக வீட்டை பூட்டிய அவர் கடந்த செவ்வாய் கிழமை காவல் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய உறுப்பினர்கள் இணைந்து வீட்டின் முன் கதவை உடைத்து முன்முன்மஜி என்ற அப்பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் மீட்டுள்ளனர்.

முதல்வேலையாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த பெண்ணுக்கு மனநலம் தொடர்பான பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்முன்மஜிக்கும் அவரது குழந்தைக்கும் பிஜிஐ எனப்படும் சுய முன்னேற்ற சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>Lockdown</p></div>

Lockdown

Twitter

என்ன நடந்தது?

முன்முன்னின் கணவர் சுஜன் மாஜ்ஹி ஒரு பொறியாளர். அவர் வேலைக்கு சென்றிருந்த போது முதன்முறையாக லாக்டவுன் (2020) அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தின் தன்னையும் மகனையும் தனிமைப்படுத்திக்கொண்ட முன்முன் தனது கணவரைக் கூட வீட்டுக்குள் விட மறுத்திருக்கிறார்.

உறவினர்கள், நண்பர்களின் வீட்டில் வசித்துவந்த சுஜன் எவ்வளவு கேட்டுப்பார்த்தாலும் மனைவி முன்முன் வீட்டுக்குள் விடவில்லை.

கோவிட் 19 : 10 வயது மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்- 3 ஆண்டுகளாக வீட்டை திறக்காதது ஏன்?
ஒரே சமயத்தில் கோவிட், குரங்கம்மை மற்றும் HIV -ஆல் பாதிக்கப்பட்ட நபர் - எப்படி?

இதனால் அருகிலேயே ஒரு வீடு பிடித்து தங்கி வந்துள்ளார் சுஜன். வீட்டுக்கு வாடகை, கட்டணங்கள், பள்ளிக்கட்டணம் ஆகியவற்றை செலுத்தியுள்ளார்.

சமைப்பதற்கு தேவையான பொருட்களை தினமும் வாங்கி வீட்டு வாசலில் வைத்துவிட்டு வருவாராம். வீடியோகாலில் மட்டுமே மனைவி மற்றும் மகனுடன் பேசிவந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சுஜன், பிப்ரவரி 17ம் தேதி காவல்துறையை நாடி இந்த பிரச்னையை தீர்த்துள்ளார்.

காவல்துறைக்கு நன்றி தெரிவித்த சுஜன், சிகிச்சைகள் முற்று பெற்றவுடன் தனது குடும்பம் மீண்டும் பழையன் நிலைக்கு திரும்பும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.

கோவிட் 19 : 10 வயது மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்- 3 ஆண்டுகளாக வீட்டை திறக்காதது ஏன்?
கோவிட், போர், பணவீக்கம் - பொருளாதார பிரச்னையிலிருந்து மீளுமா இவ்வுலகம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com