இந்தியாவில் பொறியாளர்கள் தினம் ஏன் இன்று கொண்டாடப்படுகிறது? சுவாரஸ்ய தகவல்

இந்தியாவை பொறுத்தவரை பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்படுகிறது. ஏன் இந்த குறிப்பிட்ட தேதியில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் பொறியாளர்கள் தினம் ஏன் இன்று கொண்டாடப்படுகிறது?
இந்தியாவில் பொறியாளர்கள் தினம் ஏன் இன்று கொண்டாடப்படுகிறது? Twitter
Published on

பொறியாளர்கள் தினம் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பொறியாளர்களின் சாதனைகளை, பங்களிப்புகளைக் கொண்டாடும் நாளாகும்.

ஒவ்வொரு நாட்டிலும் பொறியியல் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்படுகிறது.

ஏன் இந்த குறிப்பிட்ட தேதியில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

பொறியாளர்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

யார் இந்த விஸ்வேஸ்வரய்யா

எம் விஸ்வேஸ்வரய்யா என்று பிரபலமாக அறியப்படும் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா, செப்டம்பர் 15, 1861 அன்று கர்நாடகாவில் உள்ள முத்தெனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.

அவர் ஒரு சிவில் இன்ஜினியர், அரசியல்வாதி, அறிஞர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

இந்தியாவின் நீர்ப்பாசனம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். அப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இருந்த மைசூரில் கிருஷ்ண ராஜ சாகர அணையைக் கட்டுவதற்குப் பொறுப்பான தலைமைப் பொறியாளராக இருந்தார்.

இந்தியாவில் பொறியாளர்கள் தினம் ஏன் இன்று கொண்டாடப்படுகிறது?
”உலகம் உறங்கும் வேளையில்” இந்தியாவுக்கு ஏன் ஆகஸ்ட் 15 நள்ளிரவு சுதந்திரம் வழங்கப்பட்டது?

அவர் 1912 முதல் 1918 வரை மைசூர் திவானாக பணியாற்றினார். திவான் என்பது இஸ்லாமிய அரசப் பதவிகளில் ஒன்றாகும். அவர் அதில் பணியாற்றியபோது கல்வி, விவசாயம், வணிகம் மற்றும் பொதுப் பணிகளில் பல சீர்திருத்தங்களையும் திட்டங்களையும் தொடங்கினார்.

பெங்களூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியின் (இப்போது பல்கலைக்கழக விஸ்வேஸ்வரயா பொறியியல் கல்லூரி என அழைக்கப்படுகிறது) னிறுவனர் இவர் தான் .

1955 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். 1962 ஆம் ஆண்டு தனது 101வது வயதில் இறந்தார்.

இந்தியாவில் 2023 இன் பொறியாளர்கள் தினத்தின் தீம் என்ன?

Engineering for Sustainable Future என்பது தான் இந்த வருட பொறியாளர் தினத்தின் தீம்.

பொறியியலாளர்கள் தங்களின் தொழில்சார் இலக்குகளைத் தொடரும்போது சுற்றுச்சூழலையும் சமூகத்தையும் மதிக்கும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீம் வலியுறுத்துகிறது.

இந்தியாவில் பொறியாளர்கள் தினம் ஏன் இன்று கொண்டாடப்படுகிறது?
பாரத்: இந்தியா பெயரை மாற்ற எவ்வளவு செலவு ஆகும்? தலைவர்கள் சொல்லும் கணக்கு இதோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com