”உலகம் உறங்கும் வேளையில்” இந்தியாவுக்கு ஏன் ஆகஸ்ட் 15 நள்ளிரவு சுதந்திரம் வழங்கப்பட்டது?

இந்தியா ஆகஸ்ட் 15 நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது என்று நாம் அறிவோம். ஜூன் 30 1948ல் வழங்கலாம் என்று முடிவாகி, கிட்ட தட்ட ஓராண்டுக்கு முன்பாகவே சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் ஏன் குறிப்பாக 12.00 மணிக்கு வழங்கப்பட்டது?
Independence Day 2023: இந்தியாவுக்கு ஏன் ஆகஸ்ட் 15 நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது?
Independence Day 2023: இந்தியாவுக்கு ஏன் ஆகஸ்ட் 15 நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது? ட்விட்டர்
Published on

சுமார் 300 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த இந்திய நாடு ஆகஸ்ட் 15 1947ல் சுதந்திரம் அடைந்தது. இன்னும் சொல்லப்போனால் சுதந்திரம் பெற்றது எனலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைந்து தற்போது 77வது ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறது.

என்ன தான் 1930 ஜனவரி 26ல் இந்திய தேசிய காங்கிரஸ் பூர்ண ஸ்வராஜை அறிவித்திருந்தாலும், 1947ல் தான் அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் அடைந்தது இந்தியா.

இந்தியா ஆகஸ்ட் 15 நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது என்று நாம் அறிவோம். ஜூன் 30 1948ல் வழங்கலாம் என்று முடிவாகி, கிட்ட தட்ட ஓராண்டுக்கு முன்பாகவே சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் ஏன் குறிப்பாக 12.00 மணிக்கு வழங்கப்பட்டது?

இந்தியா டாட் காம் என்ற தளத்தில் இது பற்றிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் போது அதிகாரத்தில் இருந்தவர் லார்ட் மௌண்ட் பேட்டன்.

இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

1. இனியும் எந்த விதமான வன்முறை, போராட்டம், கலவரமோ வேண்டாம் என்று மௌண்ட் பேட்டனுக்கு தோன்றியதாம். எவ்வளவு சீக்கிரமாக பணி முடிகிறதோ முடித்துவிட்டு சென்றுவிடலாம் என்று பேட்டன் முடிவெடுத்திருந்தார்.

2.இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்தபோது ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் ஜப்பான் படைகள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தது. 1947ஆம் ஆண்டு ஜப்பான் சரணடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருந்தது. அந்த நாளை குறிக்கும் விதமாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

Freedom at Midnight என்ற புத்தகத்தில் மௌண்ட் பேட்டன் கூறியுள்ளதாவது,

“இந்த தேதியை நான் தேர்தெடுத்தது எதிர்பாராமல் நடந்த ஒன்று தான். ஒரு கேள்விக்கு பதிலாக இந்த தேதியை நான் தேர்ந்தெடுத்தேன். இந்த மொத்த நிகழ்வுக்கும் நான் தான் தலைவன் என்பதை நிரூபிக்க நான் முனைப்பாக இருந்தேன்.

என்னிடம் ஒரு தேதியை முடிவு செய்ய சொன்னபோது, பணியை விரைவில் முடிக்கவேண்டும் என நினைத்தேன். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தான் நிச்சயமாக ஒரு தேதி வேண்டும். அதனால் ஆகஸ்ட் 15 என முடிவு எடுத்தேன்.

ஏன்? ஜப்பான் சரணடைந்து அன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது” என்று அவர் கூறியிருக்கிறார்

Independence Day 2023: இந்தியாவுக்கு ஏன் ஆகஸ்ட் 15 நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது?
76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?

”உலகம் உறங்கும் நள்ளிரவு நேரத்தில், இந்தியா சுதந்திரம் பெற்று உயிர் கொண்டு விழிக்கும்.” என்ற நேருவின் வாசகம் இப்போதும் ரீங்காரம் போடுகிறது.

ஆனால் ஏன் நள்ளிரவு என்பதற்கு வரலாற்று சான்றுகள் இல்லை. ஆனால் மௌண்ட் பேட்டன் இந்த தேதியில் பிடிவாதமாக இருந்தார். இந்திய ஜோசியர்களுக்கோ, இதில் உடன்பாடு இல்லை.

அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஜோதிடர்களை நாடினார். மௌண்ட் பேட்டன் முடிவையும் நிராகரிக்காமல், அதே சமயம் இந்திய மக்களின் நம்பிக்கையையும் குலைக்காமல் இருக்க வழி தேடினார். அதன்படியே சரியாக நள்ளிரவு 12 மணியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

மே 1988 இல் டைம்ஸ், லண்டனில் சர் உட்ரோ வியாட் எழுதிய 'Who Does Not Consult Stars', என்ற கட்டுரையில் இந்திய ஜோதிடர்கள் இந்திய சுதந்திரத்திற்கான நேரத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது

Independence Day 2023: இந்தியாவுக்கு ஏன் ஆகஸ்ட் 15 நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது?
Independence Day 2023 : சுதந்திர தினத்தில் ஏன் பிரதமர் இந்திய தேசிய கொடியை ஏற்றுகிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com