கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்!

கசகஸ்தான் சூப்பர்மார்கெட்களில் கற்கள் பழங்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன. சிலர் இந்த கற்களை உட்கொள்வதால் இரும்புச் சத்து கிடைப்பதாக கருதுகின்றனர்.
கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்!
கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்!Twitter
Published on

இந்த கட்டுரையைப் பார்க்கும் போது உங்களுக்கு வடிவேலு நடித்த ஏய் பட நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வரும்.

காலையில குண்டு பல்பு, மதியம் டியூப் லைட், ராத்திரிக்கு விடி பல்பு என அந்த காட்சியில் வடிவெலுவுடன் நடித்திருப்பவர் சொல்வதைக் கேட்கும் போது நமக்கே விசித்திரமாக இருக்கும்.

இதையெல்லாமா சாப்பிடுவாங்க? என ஆச்சரியப்பட வைக்கும் 5 உணவுகளைத்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

கற்களை உண்ணும் கசகஸ்தான் மக்கள்

நாட்டில் உள்ள எல்லாரும் இல்லை. ஆனால் பலருக்கு அங்கு கற்களை உண்ணும் பழக்கம் இருக்கிறது.

இந்த கற்கள் பெரும்பாலும் களிமண்களால் ஆனவை. சிறுவயதில் நாம் சிலேட்டில் எழுதும் குச்சியை சுவைப்பது போல இந்த மக்கள் கற்களை சுவைக்கின்றனர்.

இந்த கற்கள் சூப்பர்மார்கெட்களில் பழங்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன. சிலர் இந்த கற்கள்ளை உட்கொள்வதால் இரும்புச் சத்து கிடைப்பதாக கருதுகின்றனர்.

மக்கள் உடலுக்கு நல்லது என நினைத்தாலும் மருத்துவர்கள் அப்படி நினைக்கவில்லை.

நூற்றாண்டு முட்டை, சீனா

அழுகிய முட்டை சீனாவில் பிரபலமாக இருக்கிறது. இதனை century egg என அழைக்கின்றனர்.

சாதாரண முட்டையை களிமண், சாம்பல், சுண்ணாம்பில் பல மாதங்களுக்கு வைத்து, முட்டையின் வெள்ளை பழுப்பு நிற ஜெல்லி போன்றும் கரு அடர் பச்சை நிறமாக மாறிய பின்னர் இதனை உண்கின்றனர்.

இதன் வாசனை மிகவும் மோசமானதாக, சல்ஃபர் அல்லது அமோனியா வாசனைப் போன்று இருக்கும் என்கின்றனர்.

பொரித்த சிலந்தி, கம்போடியா

கம்போடியாவின் (Skoun) கௌன் நகரில் பெரும்பாண்மையான மக்கள் பொரித்த சிலந்தியை உண்கின்றனர்.

இந்த சிலந்தி எம்.எஸ்.ஜி, சர்க்கரை, உப்பு சேர்ந்த கலவையில் ஊறவைக்கப்பட்டு பூண்டு உடன் பொரித்து உண்கின்றனர்.

இதில் வெட்டுக்கிளியை விட அதிகமாக இறைச்சி இருக்குமாம். ஆனால் இதன் வயிற்றுப்பகுதியை சுத்தம் செய்ய முடியாததால் முட்டைகளும் கழிவுகளும் இருக்கும்.

கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்!
இந்திய உணவுகள் என நீங்கள் நினைக்கும் இவையெல்லாம் எந்த நாட்டு உணவு என்று தெரியுமா?

ஐஸ்லாந்தில் அழுகிய சுறா

கருப்பு சுறா அல்லது கிரீன்லாந்து சுறாக்களின் அழுகும் சடலங்களில் இருந்து இந்த உணவு வகைத் தயாரிக்கப்படுகிறது.

ஹகர்ல் என அழைக்கப்படும் இதைச் செய்ய ஒரு ஆழமற்ற குழியைத் தோண்டி அதில் சுறாவைப் புதைக்கின்றன. மேலிருந்து அழுத்தம் கொடுக்கும் படி சில கற்களையும் வைக்கின்றனர்.

சுறாவிலிருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த நீர் வெளியேறியதும் அதனை எடுத்து தொங்கவிட்டு வெட்டி பறிமாறுகின்றனர்.

கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்!
ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக் கூடாத உணவுகள் எவை?

ஜப்பானின் குளவி குக்கீகள்

மிகவும் விசித்திரமான ஒன்றாகும். இதனை Jibachi Senbei என அழைக்கின்றனர்.

தண்ணீர், முட்டை, அரிசி மாவு, சர்க்கரை, உப்பு, எண்ணெய், எள் மற்றும் சோயா சாஸ் உடன் இந்த குக்கீஸில் குளவியும் இருக்கிறது.

பார்க்க சாக்லேட் தூவப்பட்ட ஓரியோ குக்கீஸ் போல இருக்கிறதல்லவா?

கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்!
தவளை கால் முதல் செவ்வெறும்பு வரை: இந்தியாவிலிருக்கும் 10 வித்தியாசமான உணவுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com