World Cup 2023: இந்தியா vs ஆஸி. இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும்? கோப்பை யாருக்கு?

அரையிறுதிப் போட்டிகள் எந்த தடையுமின்றி நடைபெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும்?
World Cup 2023: இந்தியா vs ஆஸி. இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும்? கோப்பை யாருக்கு?
World Cup 2023: இந்தியா vs ஆஸி. இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும்? கோப்பை யாருக்கு?ட்விட்டர்

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023ன் இறுதிப்போட்டி வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தேர்வான 10 அணிகளும் தலா 9 போட்டிகள் விளையாடி, முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.

இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.

இதுவரை எத்தனை கோப்பைகள்?

இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இரண்டு அணிகலுமே இதற்கு முன் கோப்பைகளை வென்றுள்ளன.

அதில் ஆஸ்திரேலியா 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 என ஐந்து முறை கோப்பை வென்றது. இதுவே அதிகபட்சம் ஒரு அணி கோப்பை வென்ற எண்ணிக்கை ஆகும்.

இந்தியா 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றது.

2003ல் இந்தியா-ஆஸ்திரேலியா தான் இறுதியில் மோதின. ஆகையால், அன்றைய தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

உலகக்கோப்பை 2023 பைனல் விதிமுறைகள் என்ன?

ஐசிசி, 2023 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு போட்டி நாள் அல்லாமல், ரிசர்வ் டே குறித்து வைத்திருந்தது.

அதாவது போட்டி நடைபெறும் நாளில் மழை போன்ற காரணத்தினால் ஆட்டம் தடையானால் அடுத்த நாளில் போட்டி நடைபெறும்.

அரையிறுதிப் போட்டிகள் எந்த தடையுமின்றி நடைபெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

World Cup 2023: இந்தியா vs ஆஸி. இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும்? கோப்பை யாருக்கு?
World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

போட்டி தடையானால் என்ன ஆகும்?

ரிசர்வ் டே-விற்கு சென்றும் போட்டி தடையானால் அல்லது நோ ரிசல்ட் என்று அறிவிக்கப்பட்டால் கோப்பை இரு அணிகளுக்குமே வழங்கப்படும்.

இருதிப்போட்டி டை ஆகும் பட்சத்தில், சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுகிறவருக்கு கோப்பை வழங்கப்படும். சூப்பர் ஓவரும் டை ஆகும் பட்சத்தில் ஒருவர் வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று இந்தியா டைம்ஸ் தளம் கூறுகிறது.

வானிலை போன்ற காரணங்களினால், சூப்பர் ஓவர் தடையாகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் கோப்பை வழங்கப்படும்.

ரிசர்வ் டே விதிமுறைகள் மற்றும் அதிக டைம்

மழை அல்லது மற்ற காரணங்களினால், போட்டி தடையாகி, இரு அணிகளுமே 20 ஓவர்கள் கூட விளையாட முடியாமல் போகும் பட்சத்தில், போட்டி திங்கட்கிழமைக்கு (ரிசர்வ் டே) மாற்றப்படும்.

முந்தைய நாளில் எங்கு போட்டி நின்றதோ அங்கிருந்தே தொடரும். ரிசர்வ் டேவில் டை ஆகும் பட்சத்தில் சூப்பர் ஓவர் நடைபெறும்.

அதே போல, போட்டி வழக்கமான நேரத்தை விட அதிகமாக இரண்டு மணி நேரம் (120 நிமிடங்கள்) ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வழங்கப்படுகிறது. போட்டி எந்த காரணத்தினாலோ தடையானால், நடுவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த விதிமுறைகள் கிடைக்க குறைந்தது 20 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும்.

கடந்த 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. அதுவும் டை ஆகவே, பௌண்டரிகள் எண்ணிக்கையில் இங்கிலாந்து கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

World Cup 2023: இந்தியா vs ஆஸி. இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும்? கோப்பை யாருக்கு?
உலகக்கோப்பை இல்லை, ஒரு தங்க பதக்கத்துக்காக போட்டி போடும் இந்திய வீரர்கள் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com