தற்போது ஆன்லைனில் கிடைக்காத பொருள் இல்லை. உணவு கூட இருக்கும் இடத்தில் இருந்து ஆர்டர் போட்டால், வீட்டு வாசலுக்கே வந்துவிடும்.
அப்படிப்பட்ட வாடிக்கையாளர் சேவையில் இருக்கும் நிறுவனம் தான் சோமேட்டோ. இந்த சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் சமூக வலைத்தளங்களை கையாள தனிக் குழு இருக்கும். அவ்வப்போது நம்மிடம் உணவு ஆர்டர் செய்யச் சொல்லி நகைச்சுவையான மெசேஜுகள் வரும்.
ஆனால் தற்போது ஒரு பெண்ணால் அலறிக்கொண்டிருக்கிறது சோமேட்டோ. என்ன நடந்தது?
நேற்று காலை சுமார் 11 மணியளவில் சோமேட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில்,
“போபாலில் இருக்கும் அங்கிதா, தயவு செய்து உங்கள் முன்னாள் காதலனுக்கு உணவு ஆர்டர் செய்து கேஷ் ஆன் டெலிவரி செய்வதை நிறுத்துங்கள். அவர் மூன்றாவது முறையாக இது நடக்கிறது. அவர் பணம் தர மறுக்கிறார்” என்று.
இந்த ட்வீட் இணையவாசிகளை கவர்ந்துவருகிறது
ஆராய்ந்ததில், அங்கிதா தனது முன்னாள் காதலனை பழிவாங்கவே இவ்வாறு செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. நேற்று இந்த பதிவை இடுவதற்கு முன், சோமேட்டோ மற்றொரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தது.
அதில், “யாராவது அங்கிதாவிடம் அவரது சோமேட்டோ கணக்கில் COD பிளாக் செய்யப்பட்டுள்ளதை தெரிவியுங்கள். கடந்த 15 நிமிடங்களாக முயற்சித்து வருகிறார்” என்று பதிவிட்டு அழுகிற எமோஜியை வேறு போட்டிருந்தனர்.
இந்த ட்வீட்கள் லட்சங்களில் லைக்குகளை, ரீட்வீட்களை பெற்று வருகின்றது. பலரும் அங்கிதாவின் நூதன ரிவெஞ் முறையையும் பாராட்டி வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust