Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?

அல்பட்ரோஸ் பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் தான் கொண்டிருக்கும். சில வகைப் பறவைகள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையைக் கொண்டிருக்கும். பறக்கும் போதே தூங்கும் திறமைகொண்ட இவற்றைக் குறித்து இன்னும் சில ஆச்சரிய தகவல்களைக் காணலாம்.
Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?Twitter
Published on

அல்பட்ரோஸ் ஒரு பெரிய கடல்பறவை ஆகும். இதனை பசிபிக், அண்டார்டிகா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதிகளிலும் காணலாம்.

டியோமேடியா என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது அல்பட்ரோஸ். இப்போது உலகில் இருக்கும் பெரிய அளவு பறவைகளில் இதுவும் ஒன்று.

அல்பட்ரோஸ் பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் தான் கொண்டிருக்கும். சில வகைப் பறவைகள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையைக் கொண்டிருக்கும்.

அல்பட்ரோஸ் ஒவ்வொரு இனச்சேர்க்கை காலத்திலும் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும். இதனால் தான் 22 வகை அல்பட்ரோஸ் பறவைகளில் 21 இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.

நீங்கள் கடலில் பயணம் செய்யும் போது 12 அடி இறக்கைகளை விரித்துக்கொண்டு ஒரு பறவைப் பறப்பதைப் பார்த்தால் நிச்சயமாக அதனை சூப்பர் மேன் என்றோ அல்லது விமானம் என்றோ தான் நினைப்பீர்கள்... ஆனால் அது ஆல்பட்ரோஸ். இவற்றைப் பற்றி சில ஆச்சரியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

மிகப் பெரிய இறக்கைகள்

இப்போது உலகில் இருக்கும் பறவைகளிலேயே மிகப் பெரிய இறக்கைகளைக் கொண்டது அல்பட்ரோஸ் தான்.

இதன் இறக்கைகள் 3.7 மீட்டர் வரை விரியக்கூடியது. இவ்வளவு பெரிய இறக்கைகள் நீண்டகாலத்துக்கு பறக்க உதவுகின்றன.

நீண்ட ஆயுள்

அல்பட்ரோஸ் பறவைகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழக் கூடியன.

1956ம் ஆண்டு ஒரு ஆய்வுக்குழுவினர் ஒரு லைசன் வகை அல்பட்ரோஸ் பறவைக்கு விஸ்டம் எனப் பெயர் சூட்டினர். சுமார் 62 ஆண்டுகள் கழித்து அதே பறவையை அவர்கள் திரும்பவும் பார்த்துள்ளனர்.

காட்டு உயிரிகளில் மிக நீண்ட ஆயுளைக் கொண்டவற்றுள் ஒன்று.

Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
Guide Dogs : மனிதர்களுக்கு கண்களாக இருக்கும் நாய்கள் - வழிகாட்டும் விலங்குகள் உருவான கதை!

நிலத்தில் கால்வைக்கவே வைக்காது

அல்பட்ரோஸ் பறவைகள் ஒருமுறை பறக்கத் தொடங்கிவிட்டால் நிலத்தில் கால்வைக்கவே வைக்காது. சராசரியாக ஒரு ஆண்டும், அதிகபட்சமாக 5 ஆண்டுக்கு மேலாகவும் அவை பறந்துகொண்டே இருக்கும்.

அவற்றுக்கான உணவும் கடலிலேயே கிடைத்துவிடும். அல்பட்ரோஸ் பறவைகள் பறக்கும் போதே தூங்கும் பழக்கமும் கொண்டவை என்கின்றனர். ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஃப்ரிகேட்பேர்ட் என்ற பறவைக் கூட பறந்துகொண்டே தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கணக்காக நிலத்தில் கால் வைக்காமல் இருக்கும் இந்த பறவைகள் இனப் பெருக்க கால முழுவதுமே தரையில் தான் கழிக்கும்.

இனப் பெருக்கம்

அல்பட்ரோஸ் பறவை இணையைக் கவருவதற்காக ஆடும் நடனம் மிகவும் பிரபலம். ஏற்கெனவே கூறியதைப் போல இவை ஆயுளில் ஒரே ஒரு இணையைத் தான் கொண்டிருக்கும். ஆனால் வாழ்வின் பெரும் காலத்தை தனியாகவே தான் கழிக்கும்.

இனப் பெருக்க காலம் என்பது ஒராண்டுக்கும் மேல் நிலைக்கும். அந்த நாட்களில் முழுவதுமே அல்பட்ரோஸ்கள் தரையில் தான் இருக்கும்.

முட்டையிடும் வரை ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்றை ஒன்று அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் பின்னர் பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டு, மாறி மாறி அவற்றை அடைகாக்கும். ஒரு பறவை அடைகாக்கும் போது மற்றொன்று உணவு சேகரிக்கும்.

குஞ்சு பொரித்த பின்னர் இரண்டு பறவைகளும் சேர்ந்து குஞ்சுக்காக உணவு தேடும். குஞ்சு வளர்ந்து பறக்கும் நிலைக்கு வரும் வரை இரண்டு பறவைகளும் அங்கே சேர்ந்து இருக்கும். இதற்கு 165 நாட்கள் வரைக் கூட ஆகலாம்.

அதன் பிறகு இரு பறவைகளும் பிரிந்து சென்றுவிடும் அடுத்த இனப் பெருக்க காலம் வரை அவை ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளாது.

Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

கூனி (முட்டாள்) பறவைகள்

காமிக்களில் அல்பட்ரோஸ் பறவைகள் தரையிறங்குவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தினால் அவற்றுக்கு முட்டாள் பறவைகள் என்று பெயர்.

பறப்பதில் என்னதான் கில்லாடியாக இருந்தாலும் அல்பட்ரோஸ் பறவைகள் அடிக்கடி தரையிறங்குவதில்லை என்பதால் அவற்றுக்கு தரையிறங்கத் தெரியாது.

காற்றில் மிதந்து வந்து பொத்தெனத் தரையில் விழும். அவற்றின் வாத்து போன்ற கால்கள் தரையிறங்குவதில் வீக்!

நீருக்கடியில் இருக்கும் இரையை கண்டறிவது எப்படி?

அல்பட்ரோஸ் மட்டுமல்ல பெரும்பாலான கடற்பறவைகள் நீருக்கடியில் இருக்கும் உணவைத் தேட நுகரும் புலனையே பயன்படுத்துகின்றன.

என்ன தான் அசாத்தியமான நுகரும் திறன் இருந்தாலும் பறந்துவிரிந்த கடற்கரையில் ஒரு மீனின் வாசனையை பின்தொடர்ந்து அதனை வேட்டையாடுவது என்பது எவ்வளவு கடினமானது என்று நினைத்துப் பாருங்கள்...

கிட்டத்தட்ட 19 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இரையைக் கூட குறிவைத்து வேட்டையாடும் அல்பட்ரோஸ் பறவைகள். இதற்காக இவை மேல்காற்று ஜிக்ஜாக் எனும் டெக்னிக்கை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
Loneliest Whale : உலகிலேயே தனிமையான திமிங்கலம் - மர்ம உயிரினம் கண்டறிப்பட்டது எப்படி?

அழியும் நிலையில் அல்பட்ரோஸ்கள்

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் கூறுவதன் படி 22 அல்பட்ரோஸ் இனங்களில் 21 அழிவின் விளிம்பில் உள்ளன.

அதிலும் 15 விரைவில் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது எனக் கருதுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இவற்றின் இறகுகள் வேட்டையாடப்படுவது தான். அதிகப்படியான மீன் பிடிப்புகள், சிறிய அல்பட்ரோஸ் பறவைகள் கடல் பிளாஸ்டிக்குகளை உட்கொள்ளும் நிலை இருக்கிறது.

Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
'சாவர்கர் பறவைகள் மீதேறி வந்தார்' - கர்நாடக பள்ளி பாடத்தால் சர்ச்சை

உயரமான பறவைகள்

அல்பட்ரோஸ் பறவைகளின் இறக்கை மட்டும் நீளமானவை அல்ல. அதன் உயரம் 3 முதல் 4 அடிவரை இருக்கும். எடையோ 7.7 கிலோ முதல் 10 கிலோ வரை இருக்கும்.

Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
மரணமே இல்லாத உயிர்கள் 1: வயதாவதால் இறப்பது உறுதியா?- மரணத்தை கடந்து வாழும் ஜெல்லி மீன்கள்!

அல்பட்ரோஸ் பறவைகள் பறக்க அதிகமான சக்தி தேவைப்படுமே என இப்போதே கணித்திருப்பீர்கள். ஆனால் அப்படி இல்லை, அவைப் பறக்கும் போது இறக்கையை அசைப்பதே இல்லை.

எதாவது மலைப் பகுதியில் இருந்து விழுவது போல பாய்ந்து பறக்கத் தொடங்கும் இரண்டு மூன்றுமுறை இறக்கையை அசைத்தால் போதும், அப்படியே காற்றில் மிதக்க வேண்டியது தான்.

பறவைகளை தேடிப் பார்க்கும் பழக்கம் இந்த காலத்தில் அதிகரித்திருக்கிறது. அல்பட்ரோஸ்களைக் காண நியூசிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 40,000க்கும் மேலான மக்கள் குவிகின்றனர்.

Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
ஈமு போர் : ஆஸ்திரேலிய இராணுவத்தை எதிர்கொண்ட பறவைகள்; வென்றது யார்? வியக்க வைக்கும் வரலாறு!
Albatross: 5 ஆண்டுகள் இறங்காமல் பறக்கும்; நீண்ட காலம் வாழும்- காதல் பறவை பற்றி தெரியுமா?
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com