குளிர்ந்த நீரை விட வெப்பமான நீர் விரைவாக உறையும்.
மோனலிசாவுக்கு புருவங்கள் கிடையாது.
"The quick brown fox jumps over the lazy dog" என்கிற வரியில் 26 ஆங்கில எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
மனித உடலிலேயே மிகவும் வலுவான தசைப்பகுதி நாக்குதான்.
எறும்புகள் 12 மணி நேரத்தில் வெறும் 8 நிமிடங்களுக்குத் தான் ஓய்வு எடுக்கும்.
"I Am" தான் ஆங்கிலத்தில் முழுமையாக பொருள் கொடுக்கக் கூடிய மிகச் சிறிய வாக்கியம்.
உலகப் புகழ்பெற்ற கோககோலா தொடக்கத்தில் பச்சை நிறத்திலிருந்தது.
மொஹம்மத் என்கிற பெயர் தான் உலகில் வெகு சகஜமாகக் காணப்படும் பெயர்.
உங்கள் தலைக்கு மேல் நிலவு இருக்கும் போது, கொஞ்சம் எடை குறைவாக உணர்வீர்கள்.
பாலைவனத்தில் வீசும் மணற்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, ஒட்டகங்களுக்கு 3 கண் இமைகள் இருக்கின்றன.
"abstemious" and "facetious" என்கிற இரு சொல்லில் மட்டும் தான் ஆங்கிலத்தில் வவல்ஸ் என்றழைக்கப்படும் A, E, I, O, U என்கிற ஐந்து எழுத்துக்களும் இருக்கின்றன.
உலகில் இருக்கும் கண்டங்களின் ஆங்கிலப் பெயர்கள் அனைத்தின் முதல் மற்றும் கடைசி எழுத்து ஒரே எழுத்துக்கள் தான்.
அமெரிக்காவில் ஒரு நபருக்கு இரு கிரெடிட் கார்டுகள் உள்ளன.
QWERTY கீபோர்டில், ஒரே வரியில் உள்ள எழுத்துக்களை வைத்து தட்டச்சு செய்யப்படும் மிகப்பெரிய சொல் Typewriter.
-40 டிகிரி செல்ஷியஸ் மற்றும் -40 டிகிரி ஃபேரன்ஹீட் இரண்டுமே ஒன்றுதான்.
சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் நாய்களைக் கொன்றுவிடும்.
ஆண்கள் கண் இமைப்பதைவிட சுமார் இரு மடங்கு அதிகமாகப் பெண்கள் கண் இமைப்பர்.
ஒருவர் தன் மூச்சை அடக்கி, தற்கொலை செய்து கொள்ள முடியாது.
மனிதர்களால் தங்களின் நாக்கால், கை மூட்டைத் தொட முடியாது.
கின்னல் புத்தகங்கள் தான் பொது நூலகத்திலிருந்து அதிகம் திருடப்பட்ட புத்தகம்.
மனிதர்கள் தும்மும் போது ஒரு சில மில்லி வினாடிகளுக்கு இதயம் செயல்படாமல் நிற்கும். ஆகையால் தான் பொதுவில் தும்மினால் பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள், கடவுள் பெயர்களை உச்சரிக்கிறார்கள்
பன்றிகளால் வானத்தைப் பார்க்க முடியாது.
"sixth sick sheik's sixth sheep's sick" இது தான் ஆங்கில மொழியிலேயே மிகவும் சிரமமான நா பிறட்சி வாக்கியம்.
ஆங்கிலத்தில் வவல்ஸ் எழுத்துக்கள் இல்லாத நீண்ட சொல் 'Rhythm'
அதிவேகமாக, முழு பலத்தோடு தும்மி ஒரு விலா எலும்பையே முறிக்க முடியும். அதே போல, தும்மலை அடக்குவதன் காரணமாக தலையில் அல்லது கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மரணம் கூட சம்பவிக்கலாம்.
111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
குதிரையின் இரு முன்னங்கால்கள் தூக்கப்பட்ட நிலையில் ஒருவரின் சிலை இருந்தால் அவர் போர்களத்தில் காலமானவர் என்று பொருள்.
குதிரையின் ஒரு முன்னங்கால் மட்டும் தூக்கப்பட்ட நிலையில் ஒருவரின் சிலை இருந்தால் அவர் போர்களத்தில் ஏற்பட்ட காயங்களினால் காலமானவர் என்று பொருள்.
குதிரையின் நான்கு கால்களும் தரையில் இருப்பது போல ஒருவரின் சிலை இருந்தால் அவர் இயற்கையாக காலமானவர் என்று பொருள்.
குண்டு துளைக்காத ஆடைகள் (Bulletproof) , கார் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்படும் விண்ட் ஷீல்ட்கள், லேசர் பிரிண்டர்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. இவை அனைத்தும் பெண்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.
உலகில் கெட்டுப் போகாத உணவுப் பொருள் தேன் மட்டுமே.
முதலைகளால் தங்களின் நாக்கை வெளியே துருத்த முடியாது.
ஒரு நத்தையால் 3 ஆண்டு காலத்துக்கு தூங்க முடியும்.
பொதுவாக போலார் கரடிகள் இடது கைப்பழக்கம் கொண்டவை.
அமெரிக்காவில் ஒரு விமான சேவை நிறுவனம், முதல் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கான உணவில் ஒரு ஆலிவ் பழத்தைக் குறைத்து 1987ஆம் ஆண்டு 40,000 டாலரை மிச்சப்படுத்தியது.
பட்டாம்பூச்சிகள் தங்கள் கால்கள் வழி ருசி அறியும்.
யானைகளால் குதிக்க முடியாது.
கடந்த 4,000 ஆண்டுகளாக மனித இனம், எந்த ஒரு புதிய விலங்கினத்தையும் புதிதாக வீட்டில் வளர்க்க பழக்கப்படுத்தவில்லை.
மனிதர்கள் மரணத்துக்கு பயப்படுவதை விட, எட்டுக்கால் பூச்சிக்கு அதிகம் பயப்படுகிறார்கள்.
QWERTY கீபோர்டில், இடது கையை மட்டுமே பயன்படுத்தி தட்டச்சு செய்யக் கூடிய நீண்ட சொல் Stewardesses.
எறும்புகள் விஷத்தையோ மதுபானம் போன்றவைகளையோ உட்கொண்டால், தனக்கு வலது புறமாக விழும்.
மின்சார சேரைக் கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர்.
மனித இதயத்தைக் கொண்டு சுமார் 30 அடிக்கு நீர் பாய்ச்சலாம்.
18 மாத காலத்தில் இரண்டு எலிகளால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட எலிகளை உருவாக்கிவிட முடியும்.
ஒரு மணி நேரம் ஹெட் செட்டை அணிவது மனித காதுகளில் பாக்டீரியாவை 700 மடங்கு அதிகரிக்கும்.
தீப்பெட்டிக்கு முன்பே, லைட்டரைக் கண்டுபிடித்துவிட்டனர்.
பெரும்பாலான லிப்ஸ்டிக்களில் மீன் செதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மனிதர்களின் கைரேகையைப் போல, நாக்கும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டிருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp