சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?

நிலவில் அடுத்த 14 நாட்களில் சந்திரயான் செய்யப்போகும் ஆய்வுகளும், அதில் கிடைக்கப்போகும் அரிய தகவகல்களும் தான் இஸ்ரோவின் நீண்டகால போராட்டத்துக்கான பலன்கள்!
சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?
சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?Twitter

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை சாஃப்ட் லேண்ட் செய்து சாதித்துள்ளது இந்தியா. இதுவரை எந்த நாடும் தென் துருவத்தை ஆராய்ந்தது இல்லை என்பதனால் சந்திரயான் செய்வதற்கு அங்கு பல காரியங்கள் இருக்கின்றன.

தென் துருவம் மிகவும் இருள் சூழ்ந்ததாக இருக்கும். நிலவில் ஒரு நாள் என்பது பூமியைப் பொருத்தவரை 29.5 நாட்கள். எனவே சந்திரயான் ஆய்வு செய்யப்போகும் 14 நாட்கள் என்பது நிலவில் அரை நாள்தான்.

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற ரோவர் நிலவில் இறங்கும். இந்த இரண்டும் தான் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகின்றன.

ரோவர் ஆய்வு செய்யும் தகவல்களை லேண்டருக்கு அனுப்பும். அதன் மூலமே இஸ்ரோவுக்கு தரவுகள் கிடைக்கப்போகின்றன. இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மொத்த திட்டமும் வீண்தான். இதனால் சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலமாகவும் தகவல்களை பெற நடவடிக்கை எடுத்துள்ளது இஸ்ரோ.

விக்ரம் லேண்டரில் 4 முக்கிய கருவிகள் இருக்கின்றன.

  • ரம்பா(RAMBHA) - Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere.

  • சேஸ்ட் (ChaSTE) - Chandra’s Surface Thermo physical Experiment

  • ஐ.எல்.எஸ்.ஏ - Instrument for Lunar Seismic Activity

  • எல்.ஆர்.ஏ. – LASER Retroreflector Array

ரம்பா: நிலாவில் பூமியில் இருப்பது போன்ற வளிமண்டலம் இல்லையென்பதால் பகலில் அதீத வெப்பநிலையுடனும் இரவில் உறைபனிக் குளிரோடும் இருக்கும். இதனால் அதன் மண்ணில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து இந்த கருவி ஆராயும்.

இந்த ஆய்வின் மூலம் நிலவின் வளிமண்டலம் சாதாரண நிலையில் இருக்கிறதா? அல்லது அயனியாக்கப்பட்ட நிலையில் இருக்கிறதா? என்பதை நாம் கண்டறிய முடியும்.

நிலவின் வயதை கணக்கிடவும் இந்த ஆய்வு உதவப்போகிறது.

சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?
நிலவில் நீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்து இந்தியாதானா? பலரும் அறியாத சுவாரஸ்யங்கள்!

இரண்டாவது கருவி சேஸ்ட் : இது நிலவில் மண் கெட்டியாக உள்ளதா? துகளாக உள்ளதா? தூசியாக இருக்கிறதா? என்பதை இந்த கருவி கண்டறியும்.

நிலவில் உள்ள பொருட்கள் வெப்பத்தால் உடையக்கூடியதாக இருக்கிறதா? அல்லது வெப்பத்தை தாங்கக்கூடியதா என்பதையும் ஆராய்கின்றது.

ஐ.எல்.எஸ்.ஏ : மூன்றாவது கருவியான இது நிலவில் பூமியில் இருப்பதைப் போல அதிர்வுகள் இருக்கின்றதா என்பதை ஆராயும். ஒரு வேளை முற்காலத்தில் அதிர்வுகள் இருந்தனவா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

ஒருவேளை எதிர்காலத்தில் நிலவில் மனிதன் கட்டுமானங்களை உருவாக்கினால் அதற்கு நிலவின் நிலம் எப்படி ஒத்துழைக்கும்?நிலவின் அதிர்வுகளுக்கு ஏற்ற கட்டுமானங்களை எப்படி உருவாக்குவது? போன்ற கேள்விகளுக்கு விடை அறியலாம்.

எல்.ஆர்.ஏ : இது நிலவின் சுழற்சியை ஆய்வு செய்யும் கருவியாகும். நிலவின் சுழற்சி சீரானதாக இருக்கிறதா? அல்லது அதிர்வுகளுடன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும்.

பூமியில் இருந்து நிலவு விலகிச் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எந்த அளவு இந்த விலகல் இருக்கிறது என்பதை இது ஆய்வு செய்யும்

சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?
சந்திரயான் முதல் ககன்யான் வரை: சாதனை படைக்க தயாராகும் இஸ்ரோ- என்னென்ன விண்வெளி திட்டங்கள்?

பிரக்யான் ரோவரில் இரண்டு முக்கிய கருவிகாள் இருக்கின்றன.

  • எல்.ஐ.பி.எஸ் - LASER Induced Breakdown Spectroscope

  • ஏ.பி.எக்ஸ்.எஸ் - Alpha Particle X-Ray Spectrometer

இந்த கருவிகள் நிலவின் தரைப்பரப்பை ஆராய உதவுகின்றன. இதுதான் சந்திரயான் 3 திட்டத்தின் முக்கிய பகுதியும் கூட.

ரோவர் மண்ணைக் குடைந்து மாதிரிகளை எடுத்து லேசர் மூலம் ஆராயும். தங்கத்தை பிரித்து எவ்வளவு செப்பு கலந்திருக்கிறது என கண்டறிவதைப் போல நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிய உள்ளனர்.

மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் போன்ற தனிமங்களையும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வேதிக்கலவைகளையும் கனிமங்களையும் ரோவர் ஆராய உள்ளது.

சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?
Chandrayaan 3: இஸ்ரோ மிஷனால் ஒன்றிணைந்த இந்தியா - இணையத்தில் குவியும் வாழ்த்துகள்

லேண்டரும் சரி ரோவரும் சரி சூரிய ஒளி இருக்கும் 14 நாட்கள் தான் வேலை செய்யும். அதன் பிறகு அதிலிருந்து தகவல்களை பெற முடியாது.

ஆனால் 14 நாட்களில் போதுமான சார்ஜ் ஏற்றிக்கொண்டு, அவற்றை உறக்க நிலையில் வைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதனை சரியாக அடுத்த 14 நாட்கள் கழித்து வேலை செய்ய வைத்தால் இஸ்ரோவுக்கு போனஸ் வெற்றியாக இருக்கும்.

ஆனால் சூரிய வெளிச்சம் இல்லாத நிலவில் உறைய வைக்கும் குளிர் இருக்கும். இதனால் ஆய்வு கருவிகள் சேதமடைய வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லாமே நன்றாக அமையும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?
சந்திரயான் 3: சைக்கிளில் தொடங்கி சந்திரன் வரை! இந்தியாவின் ’நிலவு’ பயணம் - ஒரு பார்வை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com