டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதா? - ஆய்வுகள் கூறுவதென்ன?
டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதா? - ஆய்வுகள் கூறுவதென்ன?Twitter

டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதா? - ஆய்வுகள் கூறுவதென்ன?

சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஓஹியோவில் கிடைத்த புதைபடிவத்தின் படி, கரப்பான் பூச்சிகள் சுமார் 3.5 அங்குல நீளமாக இருந்ததாக கூறப்படுகிறது.
Published on

கரப்பான் பூச்சிகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் இருந்ததா? வாருங்கள் விரிவாக படிக்கலாம்.

ஆய்வின்படி, ட்ரயாசிக் காலத்தில் அதாவது 250 முதல் 199 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

அவை 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாங்கேயாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆரம்ப காலத்தில், பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் உள்ளடக்கிய கண்டம், பாங்கேயா என்று அழைக்கப்பட்டது.

டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதா? - ஆய்வுகள் கூறுவதென்ன?
டைனோசர் : 256 முட்டைகள், 92 கூடுகள் கண்டுபிடிப்பு - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

ஆய்வில் என்ன தெரிய வந்தது?

புதைபடிவ பதிவுகளின்படி, தற்போதைய கரப்பான் பூச்சியின் மூதாதையர்கள் சுமார் 125 முதல் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இருக்கும் 119 கரப்பான் பூச்சி இனங்களின் மாதிரிகளை சேகரித்து, கரப்பான் பூச்சியின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதா? - ஆய்வுகள் கூறுவதென்ன?
சீனாவில் 4300 ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கால்தடங்கள் - அதிர வைக்கும் தகவல்
டைனோசர்
டைனோசர்NewsSense

விளைவு என்ன?

எழுத்தாளர் தாமஸ் போர்குக்னனின் கூற்றுப்படி,

தற்போதுள்ள கரப்பான் பூச்சி இனங்கள் சுமார் 180 மில்லியன் ஆண்டுகள் வரை பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதாக முடிவுகள் குறிப்பிடுகின்றன.

இதன் அடிப்படையில், இன்றைய கரப்பான் பூச்சிகளில் 4,500 க்கும் மேற்பட்ட இனங்கள் சுமார் 235 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஓஹியோவில் கிடைத்த புதைபடிவத்தின் படி, கரப்பான் பூச்சிகள் சுமார் 3.5 அங்குல நீளமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று வாழும் கரப்பான் பூச்சிகள் சிறியதாக இருந்தாலும் அது போன்ற அளவுகளை அடையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

சுமார் 165 மில்லியன் ஆண்டுகள் முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர்கள் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

டைனோசர்களுக்கு முன்பே கரப்பான் பூச்சிகள் தோன்றியதா? - ஆய்வுகள் கூறுவதென்ன?
முட்டைக்குள் முட்டை, அதுவும் டைனோசர் முட்டை - ஆச்சரியத்தில் அறிவியலாளர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com