வேகமாக சுழலும் பூமி : நமக்கு என்ன பாதிப்பு தெரியுமா? - விரிவான தகவல்

நமது கிரகத்தின் சுழற்சியின் அச்சு 1990களில் இருந்து வேகமாக நகர்வதைக் குறிப்பிடுகிறது. இதன் காரணமாகப் புவி வெப்பமடைதல் அதிகரித்து பனிப்பாறைகள் குறிப்பிடத்தக்க அளவு உருகுவதற்கு வழிவகுத்திருக்கிறது.
Earth
EarthTwitter
Published on

பூமி வேகமாகச் சுழல்கிறது. அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இதில் நமது கிரகத்தின் சுழற்சியின் அச்சு 1990களில் இருந்து வேகமாக நகர்வதைக் குறிக்கிறது. இதனால் புவி வெப்பமடைதல் அதிகமாகி பனிப்பாறைகள் குறிப்பிடத்தக்க அளவில் உருகுவதற்கு வழிவகுத்தது.

பூமியின் குறுகிய நாள்

பூமி அதன் அச்சில் ஒருமுறை சுழல சரியாக 24 மணிநேரம் ஆகும். இதைத்தான் நாம் ஆரம்ப பள்ளி பாடங்களிலிருந்து வழக்கமாக கற்று வருகிறோம். அப்படி எனில் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். யதார்த்தம் மாறிக்கொண்டே இருக்கிறது. உண்மைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

ஜூலை 29 அன்று, பூமி மிகக் குறுகிய நாளைப் பதிவுசெய்தது, இதன் மூலம் அது வழக்கமான வேகத்தை விட வேகமாகச் சுழல்கிறது என்ற உண்மையை நிரூபித்தது. கிரகம் அதன் நிலையான 24 மணி நேரச் சுழற்சியை விட அதற்கும் குறைவாக 1.59 மில்லி விநாடிகளில் முழு சுழற்சியை நிறைவு செய்தது. பூமி அதன் வேகத்தை விரைவுபடுத்துவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பூமி அதன் மிகக் குறுகிய மாதத்தை 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்தது. மற்றும் ஜூலை 19 அந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாகப் பதிவு செய்யப்பட்டது.

time
time Twitter

ஜூலை 29, 2022, வரலாற்றில் மிகக் குறுகிய நாளா?

இல்லை என்பதே பதில். பல்வேறு ஊடக செய்திகளின்படி, பூமி முன்பைவிட வேகமாக நகர ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இந்த அறிக்கைகள் 2020 ஜூலை 19 அன்று வரலாற்றில் மிகக் குறுகிய நாளாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன. ஏனெனில் பூமி அன்று ஒரு சுழற்சியை முடிக்க வழக்கத்தை விட 1.47 மில்லி விநாடிகள் குறைவாக எடுத்துக் கொண்டது.

Earth
அழிவின் விளிம்பில் இருக்கிறதா ஆஸ்திரேலியா? - அதிர்ச்சி தகவல்

பூமி ஏன் வேகமாகச் சுழல்கிறது?

பூமி ஏன் அதன் இயல்பான வேகத்தை விட வேகமாகச் சுழல்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் இன்னும் ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வரவில்லை. இருப்பினும், இதற்கு பல சாத்தியமான விளக்கங்கள் உள்ளன. அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, நமது கிரகத்தின் சுழற்சியின் அச்சு 1990களில் இருந்து வேகமாக நகர்வதைக் குறிப்பிடுகிறது. இதன் காரணமாகப் புவி வெப்பமடைதல் அதிகரித்து பனிப்பாறைகள் குறிப்பிடத்தக்க அளவு உருகுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

earth
earthTwitter

1990களில் இருந்து வட துருவம் கிழக்கு நோக்கி நகர்வதற்குக் காலநிலை மாற்றமும் காரணமாக இருந்ததாக ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. ஹைட்ரோஸ்பியரில் ஏற்படும் மாற்றங்களால் இது நடக்கிறது (ஹைட்ரோஸ்பியர் என்பது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவு). ஆய்வின்படி, நாசாவின் புவியீர்ப்பு மீட்பு மற்றும் காலநிலை பரிசோதனை (கிரேஸ்) திட்டத்தின் செயற்கைக்கோள் தரவு, தற்போது வட துருவத்தின் நகர்வு சராசரி வேகம் 1981 முதல் 1995 வரையிலான வேகத்தை விட 17 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு பத்தாண்டுகளில், துருவங்கள் சுமார் 4 மீட்டர் தூரம் நகர்ந்துள்ளன.

Earth
நம் பூமி சந்திக்கக் காத்திருக்கும் 8 மிகப்பெரிய பேரழிவுகள் - விரிவான தகவல்கள்

பூமி விரைவாகச் சுற்றுவது நம்மை எவ்வாறு பாதிக்கிறது?

இன்டிபென்டன்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, பூமி தொடர்ந்து வேகமான வேகத்தில் சுழன்றால், அது எதிர்மறையான லீப் விநாடிகளை அறிமுகப்படுத்த வழிவகுக்கும்.

இந்த எதிர்மறை லீப் வினாடிகளை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், பூமி சூரியனைச் சுற்றி வரும் விகிதத்தை அணுக் கடிகாரங்களின் அளவீடுகளுடன் ஒத்துப் போவதாகும். இது தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் கடிகாரத்தை நம்பியிருக்கும் மென்பொருள் மற்றும் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


இன்றைய நாள் உங்களுக்கு வேகமாக முடிந்தது என்றால் மகிழ்ச்சியா? ஆனால் பூமிக்கு அப்படி முடிந்து விட்டால் பிரச்சினை என்பதைத்தான் மேற்கண்ட ஆய்வுச் செய்திகள் காட்டுகின்றன.

Earth
லாங் மார்ச் 5 பி: பூமியில் விழும் சீன ராக்கெட் குப்பைகள் – என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com