வயாகரா கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு தெரியுமா?

பெனிசிலின், வயாகரா, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் நேரடியான ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை மாறாக வேறு ஒரு ஆய்வின் அல்லது பரிசோதனையின் போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படி விபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
Viagra
ViagraCanva
Published on

ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புமே விஞ்ஞானத்தின் செயற்கரிய முயற்சிகளால் ஈடேறியவையே ஆகும். அப்படியான சில மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் தற்செயலாக நடந்தவையும் இருக்கின்றன.

இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய தற்செயலான அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிலவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

Penicillin
PenicillinCanva

பெனிசிலின்

முதலாம் உலகப் போரில் காயமடைந்த படை வீரர்கள் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்க்குப் பலியானார்கள். இதைக் கேள்விப்பட்ட ஸ்காட்லாந்து அறிவியலாளர் அலெக்சாண்டர் ஃபிளமிங் 'பாக்டீரியாவைக் கொல்லப் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பேன்' என்ற சபதத்துடன் ஓர் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

அந்த ஆராய்ச்சியின்போது, ஒரு விடுமுறை நாளில் ஆய்வுப் பொருட்கள் இருந்த கண்ணாடித் தட்டை மூடாமலே சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து வந்து பார்த்தபோது அந்தத் தட்டில் மெல்லிய பூஞ்சை படிந்திருந்தது.

பூஞ்சை படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதுமாக அழிந்திருந்தன. பூஞ்சைகளற்ற பகுதியில் கிருமிகள் பெருகி இருந்தன. அது என்ன பூஞ்சை என்று ஆராய்ந்தார். அது 'பெனிசிலியம் நொடேடம்' என்று கண்டுபிடித்தார். அதைப் பயன்படுத்தி, 1928, செப்டம்பர் 28ல் ஒரு மருந்து தயாரித்தார். அதற்கு 'பெனிசிலின்' என்று பெயர் வைத்தார்.

viagra
viagraCanva

வயாகரா

இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைசர் எனும் மருத்துவ ஆய்வாளர் கென்ட் எனும் ஆய்வகத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்கள் அடைப்பு காரணமாக ஏற்படும் நெஞ்சு வலிக்கு புதிய மருந்து ஒன்றைத் தயாரிக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் Sildenafil (UK92480) என்ற ஒரு புதிய காம்பவுண்ட் உருவாக்கினார். அது ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த மருந்தானது எந்த ஒரு பயனும் அளிக்கவில்லை. கிளீனிக்கில் இருந்த ஒருவருக்கு கூட அது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உயர் இரத்த அழுத்தம் அப்படியே தான் இருந்தது. இதய இயக்கத்திலும் முன்னேற்றம் காணப்படவில்லை. இவர்கள் மேற்கொண்ட பரிசோதனை முயற்சி தோல்வி என்று கருதினார்கள்.

viagra
viagraCanva

ஆனால், இந்த பரிசோதனையின் போது ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களிடம் ஒரு மாற்றம் தென்பட்டது. ஆய்வாளர் ஃபைசர் கொடுத்த அந்த புதிய மருந்து, ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி விறைப்பு ஏற்படுத்தியது.

உயர் இரத்த அழுத்தம் சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பிறகு விறைப்பு கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் பக்கமாக திசை மாறியது. ஒரு மருந்து தயாரிப்பு கம்பெனியின் இதைப் பரிசோதனை செய்யலாம் என்றது. மூன்று ஆண்டுகள் அதாவது 1993-1996 சோதனை செய்து வந்தனர். பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 1998 மார்ச் 27ம் நாள் லைசன்ஸ் கொடுத்தது. அன்று தான் அதிகாரப் பூர்வமாக வயாகரா சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதுதான், முதன் முதலில் விறைப்பு கோளாறுக்கு மருந்தாக வெளியான மருந்தாகும்.

Anesthesia
Anesthesia Canva

அனஸ்தீசியா

சென்ற நூற்றாண்டு வரையிலும் அறுவை சிகிச்சை என்பது கொடுமையான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. பல நோயாளிகள் அறுவை சிகிச்சையிலிருந்து பாதியிலேயே எழுந்து ஓடிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.

மருத்துவர்கள் இந்தக் கொடுமைக்கு முடிவுகட்டத் தீவிர முயற்சி செய்தார்கள். 1839ல் ஜார்ஜியாவை சேர்ந்த க்ராஃபோர்டு லாங் என்ற மருத்துவர், ஈத்தர்(Ether) என்ற வேதிப்பொருள் போதைக்காகப் பயன்படுவதைக் கண்டார். நிறமில்லாத இத்திரவத்தை நோயாளியை மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும் அனஸ்தீசியாவாக பயன்படுத்தலாமே என்று நினைத்தார் க்ராஃபோர்ட். அவரது கணிப்பின்படி ஈத்தரை முகர்ந்த உடன் நோயாளிகள் மயக்கமானார்கள். அதனால், அறுவை சிகிச்சைக்கு ஈத்தரை அனஸ்தீசியாவாக பயன்படுத்த ஆரம்பித்தார். க்ராஃபோர்டு லாங் இந்த கண்டுபிடிப்பு பற்றி பத்திரிகைகளில் எழுதாமல் விட்டுவிட்டார்.

Anesthesia (Rep)
Anesthesia (Rep) Canva

வில்லியம் டி.ஜி.மார்ட்டன் என்ற லண்டன் மருத்துவர் க்ராஃபோர்டின் முயற்சிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். பல் பிடுங்குவதற்காக வந்த தன்னுடைய நோயாளி ஒருவருக்கு

ஈத்தரை அனஸ்தீசியாவாக கொடுத்து பார்த்தார். இது வெற்றிகரமாக அமைந்ததும், உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் ஈத்தர் பற்றி எழுதினார் மார்ட்டன். இந்த அறுவை சிகிச்சை, 1846செப்டம்பர் 30 அன்று நடந்தது.

இச்செய்தியைப் படித்த ஹென்றி ஜேக்கப் என்ற அறுவை சிகிச்சை மருத்துவர், பொதுமக்கள் முன்னிலையில் ஒரு அறுவை சிகிச்சையை செய்து காட்ட வேண்டும் என்று மார்ட்டனுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, லண்டனில் உள்ள பாஸ்டன் நகரத்தின் பொது மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த அறுவை சிகிச்சையை செய்து காட்டினார் மார்ட்டன்.

Viagra
மனிதனின் உயரம் எதிர்காலத்தில் குறையும்- ஏன் தெரியுமா?

1846 அக்டோபர் 30 அன்று நடந்தது இந்த வரலாற்று நிகழ்வு. நோயாளிக்கு அனஸ்தீசியா கொடுத்த பிறகு, அவரது பல்லைப் பிடுங்கி அறுவை சிகிச்சை செய்தார் மார்ட்டன். வலியின் சுவடே தெரியாமல் இருந்தார் நோயாளி!

அதன்பிறகு, அனஸ்தீசியா பயன்பாடு பிரபலமாகி, இன்று பல மாற்றங்களைக் கடந்து முன்னேறியிருக்கிறது. முன்பு, கைவிரலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றாலும், நோயாளிக்கு சுயநினைவு இல்லாமல் போகும் அளவுக்கு மயக்க மருந்து கொடுத்து வந்தார்கள். இப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பகுதிக்கு மட்டும் அனஸ்தீசியா கொடுத்துவிட்டு, வலியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துவிடலாம்.

Viagra
மனித பரிணாம வளர்ச்சி மாறப் போகிறது ஏன் தெரியுமா? - அதிர்ச்சி தகவல்

போடோக்ஸ்

போடோக்ஸ் 1920 இல் ஜெர்மன் மருத்துவர் ஜஸ்டினஸ் கெர்னரிடமிருந்து உருவானது. டாக்டர் கெர்னர் அப்பகுதியில் ஏற்பட்ட காரணம் தெரியாத திடீர் இறப்புகளுக்கான காரணங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பொட்டிலினம் நச்சுத்தன்மையைக் கண்டுபிடித்தார். இந்த விஷமானது தசை பலவீனத்தையும் ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்பிறகு பொட்டிலினம் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்தது. 1950 களில் சிறிய அளவுகள் தசைப்பிடிப்பைக் குறைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 1960 மற்றும் 1970 ஆண்டுகளில், குறுக்குக் கண்கள் தொடர்பான பிரச்சினைகளைப் போக்கவும் இது உதவும் என்று ஆய்வுகள் தீர்மானித்தன.

1980 ஆம் ஆண்டிலும் ஆராய்ச்சி தொடர்ந்தது. இறுதியாக, 1989 இல் கண் தசைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கான முதல் பொட்டிலினம் சிகிச்சையாக போடோக்ஸுக்கு FDA ஒப்புதல் அளித்தது. மருத்துவத் துறையில் இது ஒரு பெரிய பாய்ச்சலாக இருந்தது. மேலும் பொட்டிலினத்தின் பிற பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

plastic
plasticCanva

பிளாஸ்டிக்

18-ஆம் நூற்றாண்டிலிருந்து பல விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் சார்ந்த பல்வேறு பொருட்களை உருவாக்கி இருந்தாலும், இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100% செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுநரான ஹென்றிக் பேக்லேண்ட் என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.

பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவர தாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக 'பேக்லைட்’' வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Viagra
புருவம் இல்லாத மோனலிசா முதல் ஓய்வு இல்லாத எறும்புகள் வரை - இந்த 50 உண்மைகளை அறிவீர்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com