சுமார் ஐந்து அடி நீள மண்டை ஓடு கொண்ட கடல் பல்லி அழிந்தது எப்படி?

இந்த பிரமாண்ட கடல் பல்லி சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலில் வாழ்ந்து வந்த பல விலங்கினங்களை வேட்டையாடியுள்ளது என தி இண்டிபென்டென்ட் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
கடல் பல்லி
கடல் பல்லிCanva
Published on

அறிவியல் எப்போதும் மனிதனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கத் தவறியதில்லை. இன்று உலகமே தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறது. விண்வெளிக்கு ஒரு தொலைநோக்கியை அனுப்பி வைத்து அண்ட பேரண்டத்தையே படமெடுக்க முடிந்த மனித இனத்தால், பல லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வந்தும், இக்கோளில் இருக்கும், இருந்த உயிரினங்களைக் குறித்து முழுமையாகத் தெரியுமா என்று கேட்டால் விடை இல்லை. அப்படி புதிதாக ஒரு கடல் பல்லியை சில விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஒரு ராட்சத கடல் பல்லியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பெயர் தலசோடிடன் அட்ராக்ஸ் (Thalassotitan atrox), அது மோசோசர் (mosasaur) இனத்தைச் சேர்ந்தது. இந்த பிரமாண்ட கடல் பல்லி சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலில் வாழ்ந்து வந்த பல விலங்கினங்களை வேட்டையாடியுள்ளது என தி இண்டிபென்டென்ட் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

கடல் பல்லி
டைனோசர் அழிவு : புதிய சிறுகோள் விழுந்த தடம் கண்டுபிடிப்பு - குழப்பத்தில் விஞ்ஞானிகள்?

தலசோடிடன் அட்ராக்ஸ் உயிரினம் சுமார் 9 மீட்டர் (27 அடி) நீளம் வரை வளரக் கூடியது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மோசோசர் உயிரினங்கள் எல்லாம் ஸ்குவிட், மீன்கள், ஆங்கிலத்தில் கிளாம் என்று அழைக்கப்படும் மட்டிகள்... போன்றவற்றையே உணவாக உட்கொள்ளக் கூடியவை. ஆனால் தலசோடிடன் அட்ராக்ஸ் உயிரினம், அதன் காலத்தில் வாழ்ந்து வந்த கடல் ஊர்வனக்களை உணவாக உட்கொண்டது எனப் பிரிட்டனைச் சேர்ந்த பாத் பல்கலைக்கழகம் (University of Bath) கூறியுள்ளது.

மேலும், தலசோடிடன் அட்ராக்ஸ் உணவுச் சங்கிலியில் உச்சத்திலிருந்திருக்கிறது என்றும் இந்தியா டைம்ஸ் பத்திரிகை வலைத்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் மற்றும் மகாசமுத்திரங்களைப் பொருத்தவரை ப்ளாங்க்டன் உயிரி, கடலின் அடிப்பகுதியில் உள்ள நுண் சத்து நிறைந்த நீரைக் குடித்து உயிர் வாழும். ப்ளாங்க்டன்களைச் சிறிய மீன்களும், சிறிய மீன்களைப் பெரிய மீன்களும், பெரிய மீன்களை மோசோசர்களும், மோசோசர்களை தலசோடிடன் அட்ராக்ஸ் உயிரினங்களும் உண்டு வாழ்ந்தன.

தலசோடிடன் உயிரினத்தின் தலைப் பகுதி மட்டுமே 1.4 மீட்டர் (கிட்டத்தட்ட ஐந்து அடி) நீளத்துக்கு இருக்கிறது என்றால் அதன் முழு உருவத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். அதோடு அதன் பற்கள் பலமானவையாகவும், இரையை கடித்துச் சாப்பிட வசதியாகவும் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு இந்த தலசோடிடன் அட்ராக்ஸ் இயற்கையாகவே ஆக்ரோஷமானவையாக இருந்துள்ளன என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தனை ஆக்ரோஷமாக, உணவுச் சங்கிலியில் உச்சியிலிருந்த இந்த உயிரினமே, வேறு ஏதோ ஒரு விலங்கினத்துக்கு உணவாக இருந்துள்ளது என பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலசோடிடன் அட்ராக்ஸ் ஆய்வின் இணை ஆசிரியர் நிக் லாங்ரிச் (Nick Longrich) கூறியுள்ளார். மேலும் கொல்லப்பட்ட தலசோடிடன் அட்ராக்ஸ் உயிரினத்தின் எலும்புகள் கிடைத்திருப்பதாகவும், தலசோடிடன் வேட்டையாடப்பட்டு இருப்பதாகவும் நிக் லாங்ரிச் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

கடல் பல்லி
பூமியில் 450 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்களுக்கு முன்பே நம்முடன் வாழும் உயிரினம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com