50000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றக்கூடிய வால் நட்சத்திரம் மீண்டும் பூமிக்கு மிக அருகில் வருவதனால் அதனை வரவேற்க அறிவியலாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சூரியனை 8 கோள்கள், துணைக்கோள்கள் மட்டுமின்றி எண்ணற்ற விண்வெளித் துகள்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் வால்நட்சத்திரங்களும் அடங்கும்.
வால்நட்சத்திரங்கள் விண்ணில் இருக்கும் பாறைகள் மற்றும் ஐஸ்கட்டிகளால் ஆனது. இப்போது நம்மை கடக்கவிருக்கும் வால்நட்சத்திரம் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது. சில வால்நட்சத்திரங்கள் இதை விட விரைவாக சூரியனை சுற்றுவதும் உண்டு.
இதற்கு முன்னதாக நியாண்டர்தல் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியை இந்த வால்நட்சத்திரம் கடந்து சென்றிருக்கிறது.
சூரியனை நெருங்கும் போது இதிலுள்ள ஐஸ்கட்டிகள் உருகுவதனால் வால் போல தோற்றமளிக்கிறது. C/2022 E3 (ZTF) என இந்த வால்நட்சத்திரத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
இது நம்மை கடக்கும் போது பச்சை நிறத்தில் ஒளிரும். இதனால் இதனை பச்சை வால்நட்சத்திரம் என்றே அழைக்கின்றனர்.
இதன் பச்சை நிறத்துக்கு காரணம் இதிலிருக்கும் டயட்டோமிக் கார்பன் தான். இது சூரியனின் புற ஊதா கதிர்களால் பச்சை நிறத்தில் ஒளிரும்.
இந்த வால்நட்சத்திரத்தை கடந்த மார்ச் மாதம் தான் கண்டறிந்தனர். அப்போது வியாழன் கோளுக்கு அருகில் வந்த இது கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு பூமியை நெருங்கியுள்ளது.
இதன் புகைப்படங்களை இந்திய வான் இயற்பியல் மையம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் லடாக்கில் உள்ள ஹன்லே கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து செவ்வாய் நோக்கி பயணிக்கும் இந்த வால்நட்சத்திரம் வரும் பிப்ரவரி 2ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும். அதாவது பூமியில் இருந்து 4.2 கோடி கிலோமீட்டர் தொலைவில். இது சூரியனிலிருந்து புதன் கிரகத்தின் தொலைவுக்கு சமமாகும்.
இதனை 2ம் தேதி பூமியின் வடக்கு அரைகோளத்தில் இருட்டான பகுதியில் இருந்து வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். பிப்ரவரி 10ம் தேதி வரை தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.
ஆனால் எதிர்பார்த்ததை விட இது குறைந்த பிரகாசத்துடனே இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
வால்நட்சத்திரங்கள் தான் பூமிக்கு தண்ணீர் கொண்டுவந்ததாகவும் அதிலிருந்து தான் உயிர்கள் தோன்றியதாகவும் சிலர் நம்புகின்றனர்.
இது போல வால்நட்சத்திரங்கள் பற்றி கதைகள் இருக்கின்றன. அவற்றில் உண்மையானவற்றை கண்டறிய ஆய்வுகள் முக்கியம். இதனால் தான் பூமிக்கு அருகில் வால்நட்சத்திரங்கள் வந்தால் வானவியலாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்குகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust