அதிக நேர வெளிச்சத்தினால் அவதிப்படும் வண்ணத்துப் பூச்சிகள்

பறவைகள் நீண்ட தூரம் பயணிப்பது போல வண்ணத்துப் பூச்சியும் நீண்ட தூரம் பயணிக்கும். எவ்வளவு என்றால், தலைமுறைகளாக பயணித்து மெக்சிகோ முதல் கனடா வரை சென்று மீண்டும் திரும்புமாம்.
வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சிPixabay

மோனார்க் எனப்படும் பெரிய இறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி இனம் மிக அரிதான ஒன்றாக மாறிவிட்டது. அழகான, மிருதுவான இறக்கைகளைக் கொண்ட இந்த வண்ணத்துப் பூச்சிகள் மனிதர்களால் உருவாக்கப்படும் இரவு வெளிச்சத்தால் வெகுவாக பாதிக்கப்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

வண்ணத்துப்பூச்சிகள் ஒரு இடத்தில் தங்காமல் தலைமுறையாக இடப்பெயர்வு செய்தவாறு இருக்கும். பறவைகள் நீண்ட தூரம் பயணிப்பது போல வண்ணத்துப் பூச்சியும் நீண்ட தூரம் பயணிக்கும். எவ்வளவு என்றால் மெக்சிகோ முதல் கனடா வரை சென்று மீண்டும் திரும்புமாம்.

ஆனால் இப்போது இரவு நேரங்களில் எரியும் விளக்குகளால் இந்த பூச்சிகளின் வாழ்க்கை வெகுவாக குழப்பமடைந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவிலுள்ளா சின்சினாட்டி பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த ஆய்வு ஒன்றை நடத்தினர். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளின் மீது நமது ஒளி அத்துமீறலினால் ஏற்படும் விளைவுகளை கண்காணித்தனர்.

வண்ணத்துப் பூச்சி
அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு
Night Light
Night LightPixabay

இந்த வெளிச்சத்தால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு பகல் - இரவு குழப்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொலைதூரப் பயணங்களை சீராக மேற்கொள்ள வண்ணத்துப்பூச்சிகள் திசை உணர்வை (Internal Compass) பெற்றிருக்கும். திசை உணர்வை உருவாக்க புரதங்கள் தேவை. இந்த புரதங்கள் வண்ணத்துப்பூச்சிகளில் உருவாக இரவின் இருள் தேவையானதாக இருக்கிறது

வண்ணத்துப் பூச்சி
வெடிக்குண்டை கண்டுபிடிக்கும் இயற்கை போலீஸ் - ஒரு மருத்துவ பதிவு

இந்த திசை உணர்வு உள்ளிட்ட திறன்களை உருவாக்கும் மூலக்கூறு செயல்முறைகளை இரவு வெளிச்சம் தடுக்கிறது. இந்த திறன்களை இழக்கச் செய்கிறது. நம் உடல் செயல்பாடுகள் 24 மணிநேரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் உடல் ஒரு சுழற்சியை மேற்கொள்கிறது. இந்த சுழற்சிக்கு சிர்கேடியம் ரிதம்ஸ் என்று பெயர். வண்ணத்துப்பூச்சிகளின் சிர்கேடியம் ரிதமை வெகுவாக பாதிக்கிறது இந்த ஒளி மாசு.

இதனால் அவை பெரும்பாலான நேரங்கள் ஓய்வின்றி உழைத்து திசை அறியும் தன்மையை இழக்கின்றன.

Butterfly
ButterflyPexels

'ஜெட் லேக்' நோய் போன்ற பாதிப்புக்கு வண்ணத்துப்பூச்சிகள் உள்ளாகின்றன. அடிப்படையில் அவற்றின் நேர உணர்வுகள் பாதிக்கின்றன. நமது வசதிக்காக இரவு நேரங்களில் வெளிச்சத்தைப் பயன்படுத்தும் நாம், ஒரு மிகச் சிறிய பூச்சியினத்தின் மீது அதனால் அறிந்திட முடியாத நோயைத் திணித்து வருகிறோம். மனித இனத்தின் அசுர வளர்ச்சி புவியின் பல்லுயிர்த் தன்மையை வெகுவாக பாதிக்கிறது என்பதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.

வண்ணத்துப் பூச்சி
Climate Change : ‘பூச்சி பேரழிவு’ - அதீத விவசாயத்தால் அழிந்து வரும் பூச்சிகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com