Climate Change : ‘பூச்சி பேரழிவு’ - அதீத விவசாயத்தால் அழிந்து வரும் பூச்சிகள்!

அதீத விவசாயம் நடைபெறும் இடங்கள் மற்றும் புவி வெப்ப மயமாதலினால் பாதிக்கப்பட்ட இடங்களை மனித தீண்டுதல் இல்லாத இடங்களுடன் ஒப்பிட்டால் 49% பூச்சிகள் குறைந்துள்ளது தெரிய வருகிறது.
வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சிPixabay
Published on

பிரிட்டன் ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் பூச்சிகளின் வாழ்வு குறித்துத் திடுக்கிடும் தகவல்களைக் கூறியிருக்கின்றன. காலநிலை மாற்றம் மற்றும் விவசாயத்தின் பெருக்கம் காரணமாகப் பூச்சிகள் எண்ணிக்கை பாதிக்குப் பாதி குறைந்துள்ளதாக அந்த ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.

அழிந்து கொண்டிருக்கும் பூச்சியினங்களுக்கு மனிதர்களால் நேரடி அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது. இந்த உலகில் வாழும் தகுதி, பூச்சிகளுக்கும் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி பூச்சிகள் மனித வாழ்வுக்கு எந்தெந்த வகையில் உதவுகின்றன என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பூச்சிகளின் வாழ்விடத்தை அழித்துவிட்டு அவற்றை பாதுகாக்க முடியாது.

எறும்பு, பட்டாம்பூச்சி, தேனீக்கள், வெட்டுக்கிளி, தட்டான் உள்பட சுமார் 20 ஆயிரம் பூச்சி இனங்களின் தரவுகள் அந்த ஆய்வில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றிருக்கிறது.

Global warming
Global warmingPixabay

அதீத விவசாயம் நடைபெறும் இடங்கள் மற்றும் புவி வெப்ப மயமாதலினால் பாதிக்கப்பட்ட இடங்களை மனித தீண்டுதல் இல்லாத இடங்களுடன் ஒப்பிட்டால் 49% பூச்சிகள் குறைந்துள்ளது தெரிய வருகிறது. அத்துடன் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் 27% பூச்சி இனங்களின் அழிக்கப்பட்டுள்ளதும் ஆய்வில் குறிப்பிடப்படுகிறது.

பூச்சிகளின் இந்த இழப்பு “பூச்சி பேரழிவு” எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்விற்கு ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆய்வின் தலைவர் சார்லி, "பூச்சிகளை இழப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல மனிதர்களின் உடல்நலம் உணவு, பாதுகாப்பு என அனைத்துக்குமே ஆபத்துதான். அதுவும் பூச்சிகள் இல்லாமல் மகரந்த சேர்க்கைகள் இல்லை." என்கிறார்.

"எங்கள் ஆய்வு நாம் உடனடியாக இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும், கடுமையான விவசாயத்தை குறைக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது." என்கிறார் அவர்.

வண்ணத்துப் பூச்சி
ஹாபிட் : மனித குல மூதாதையர்கள் இன்னும் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?
Bee
BeePixabay
வண்ணத்துப் பூச்சி
காலநிலை மாற்றம்: போர் இல்லாமல் இந்த புவி வாழ்க்கை அழியப் போகிறதா ?

பூச்சி பேரழிவினை கட்டுப்படுத்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். விவசாய நிலங்களுக்கு அருகில் பூச்சிகள் வசிக்கும் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் காடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதி தீவிர விவசாயத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஒட்டு மொத்த சுற்றுச்சூழலுக்கும் மனிதனின் நல்வாழ்விற்கும் பூச்சிகள் முக்கியம் என்பதை நாம் ஏற்க வேண்டும். பல அரிய பூச்சியினங்கள் அழிந்து போவதற்கும் முன் நாம் அவற்றுக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தல்களுக்குக் கைமாறாக அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வண்ணத்துப் பூச்சி
காலநிலை மாற்றம்: உக்ரைன் ரஷ்யா போரால் என்ன நிகழ்ந்து இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com