செவ்வாய் கிரகத்தில் ஏலியன்ஸ் கட்டிய கட்டடமா ? - வைரல் புகைப்படம் | உண்மை என்ன?

பூமி பரப்பில் கல்லறை நுழைவுவாயில்கள் இருப்பது போல, செவ்வாய்க் கிரகத்தின் பரப்பிலும் கல்லறை நுழைவு வாயில் இருப்பதாக தன்னைத் தானே யூ எஃப் ஓ நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் மனிதர் கூறியுள்ளார்.
Mars
MarsPixabay
Published on

மனிதர்களுக்கு விண்வெளி மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புவியை மாசுபடுத்தி இன்று நிம்மதியாக சுவாசிக்கக் கூட முடியாமல் தவிக்கும் மனிதன், செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவது எப்படி எனச் சிந்திக்கத் தொடங்கிவிட்டான்.

அதற்கான அறிவியல் பூர்வமான பணிகளையும் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்த மனிதக் குலத்துக்கே செவ்வாய்க் கிரகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பூமி பரப்பில் கல்லறை நுழைவுவாயில்கள் இருப்பது போல, செவ்வாய்க் கிரகத்தின் பரப்பிலும் கல்லறை நுழைவு வாயில் இருப்பதாக தன்னைத் தானே யூ எஃப் ஓ நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் மனிதர் கூறியுள்ளார்.

ஸ்காட் சி வாரிங் என்கிற மனிதர் தன்னைத் தானே ஒரு யூ எஃப் ஓ நிபுணர் என்று கூறிக் கொள்கிறார். இவர் தான் செவ்வாயில் கல்லறை வடிவ நுழைவாயில் இருப்பதாகக் கூறியுள்ளார். அது உலகில் எகிப்து நாட்டில் காணப்படும் கல்லறை நுழைவாயிலை ஒத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Rover
RoverTwitter

செவ்வாய்க் கிரகத்தில் அவர் சுட்டிக் காட்டும் இடம் தொடர்பான படங்களைப் பார்த்தால், ஒரு நுழைவாயிலைப்போல்தான் இருக்கிறது.

"செவ்வாய்க் கிரகத்தில் பழங்கால ஏலியன்கள் வாழ்ந்ததற்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. சமீபத்தில் ரோவர் எந்திரம் அனுப்பிய படங்களைப் பாருங்கள். செவ்வாய் கிரகத்தில் மலைப் பகுதிகளுக்குச் செல்லும் வழியில் ஒரு நுழைவாயில் போன்ற அமைப்பு இருப்பதைப் பார்க்கலாம். எகிப்து நாட்டில் வாலி ஆஃப் தி கிங்ஸ் என்றழைக்கப்படும் பழங்கால நுழைவுவாயில்களைப் போன்று இருக்கிறது" என யூ எஃப் ஓ சைட்டிங்ஸ் டெய்லி என்கிற தளத்தில் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார் ஸ்காட் சி வாரிங்.

செவ்வாய்க் கிரகத்தில் பழங்கால புத்திசாலித்தனமான உயிரினங்கள் ஒரு காலத்தில் செழித்து வாழ்ந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார் ஸ்காட்.

"இத்தனை உறுதியான ஆதாரங்கள் இருக்கும் போது, அகழ்வாய்வாளர்கள் எப்படி இதை மறுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்கிறார் ஸ்காட்.

ஸ்காட்டின் இந்த கருத்தை, சமூக வலைத்தளங்களில் பல பார்வையாளர்களும் ஆமோதித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திலிருக்கும் வாசல்
செவ்வாய் கிரகத்திலிருக்கும் வாசல்Twitter
Mars
Aliens : 100 ஆண்டுகளாய் வேற்றுகிரகவாசிகளுடன் பேச முயலும் மனித குலம் - முழுமையான வரலாறு


"அந்த நுழைவு வாயில் வெறுமனே ஒரு அடிக்கு இருந்திருந்தால், நிலத்தடியில் இருக்கும் கட்டடத்துக்கு அது காற்று போக்குக்காக வைத்திருக்கும் துவாரமெனக் கருதி இருப்பேன்" என ஒரு பார்வையாளர் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

"இந்த அமைப்பு பார்க்க ஒரு நுழைவுவாயில் போல் இருக்கிறது என்பதை என்னால் மறுக்க முடியாது. அது பார்க்க ராம்செஸ் கல்லறை வாயிலைப் போல் இருக்கிறது. நீங்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை" என மற்றொருவர் கூறி இருந்தார்.

Mars
ஏலியன்ஸ் நம்மை தொடர்பு கொள்ள 4 இலட்சம் ஆண்டுகள் ஆகும் - புதிய ஆய்வு

ஸ்காட் வாரிங் இப்படி அதிரடியான பல விஷயங்களைக் கூறுவது இது ஒன்றும் முதல்முறையல்ல.

கடந்த ஆண்டு, கூகுள் எர்த் செயலியைப் பயன்படுத்தி அண்டார்டிக்காவில் இதயம் போன்ற வடிவத்திலான பணி உருகிய இடத்தில் ஒரு மர்மமான டிஸ்கை இருப்பதாகக் கூறினார்.

74°35'37.57"S 164°54'28.90"E இந்த இடத்தில் தேடினால் அந்த மர்மமான டிஸ்க் கிடைக்கலாம் என்றும் பொதுவெளியில் பகிர்ந்தார். அது ஒரு விபத்துக்கு உள்ளான ஏலியன் விமானமாக இருக்கலாம், அது அண்டார்டிக்கா பனிப்பாறைகளில் மோதியதால் தான் பணி அடுக்கில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறினார் ஸ்காட்.

Mars
ஏலியன்ஸ் குறித்த ஆராய்ச்சி : பரபரப்பைக் கிளப்பிய 50 ஆண்டுகள் பழைய புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com