அண்டார்டிக்கா பூமியில் இருக்கும் அதிசயமான கண்டமாகும். எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத, மனிதர்கள் வாழாத ஒரே கண்டம்.
அண்டார்டிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். நமக்குத் தெரியாத அதிசயங்கள் அந்த கண்டத்தில் உறைந்திருக்கிறது.
-62 டிகிரி செல்சியஸ் குளிரில்,சூரியனே ஒளிராத மனித காலசித்தசமே படாத இடத்தில் அமெரிக்காவின் அலபாமா மற்றும் அரிசோனா அரசு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மர்மத்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
திரைப்படங்களில் காட்டப்படும் சொர்க்கம் போல எங்கும் வெண்மை நிரம்பியிருக்கும் அண்டார்டிகாவில் ஆய்வாளர்கள் பல ஆண்டுகாலம் பூமிக்குள் மறைந்திருக்கும் ஒரு மலைத் தொடரையே கண்டறிந்துள்ளனர்.
2015ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி குழுவினர் 15 நில அதிர்வை அளவிடும் கருவிகளை அமைத்து பூமியின் உட்புறத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் மர்மமான மலைத்தொடர் போன்ற அமைப்பைக் கண்டறிந்தனர்.
புவியானது பல அடுக்குகளாக இருக்கிறது என நமக்குத் தெரியும். அதன் உலோக மையத்துக்கும் பாறை அடுக்குக்கும் இடையே இந்த மலைத்தொடர்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த மலைகளின் சிகரங்கள் மிக உயரமானவை எனக் கூறப்படுகிறது. சில சிகரங்கள் 40 கிலோ மீட்டர் உயரம் வரை அமைந்திடுக்கிருக்கின்றன. இது எவரெஸ்ரை விட 4.5 மடங்கு அதிகம்.
இந்த இடத்தைச் சுற்றி பல மலைத்தொடர்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். உயரமாக மட்டுமல்லாமல் 910 கிலோமீட்டர் வரை பரந்து விரிந்த மலைகளும் இருந்திருக்கின்றன.
இந்த மலைகள் ஒரு காலத்தில் பூமிக்கு மேலிருந்து அடியில் சென்றனவா? அல்லது வேறு எப்படி உருவாகின என்பது குறித்து ஆய்வாளர்களால் கூற முடியவில்லை. மேலும் இந்த மலைகளில் காணப்படும் குமிழ்கள் போன்ற கட்டனைப்பும் எப்படி உருவாக்கப்பட்டது என்பதும் மக்களுக்குத் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது.
புவியின் உலோக மையம் மற்றும் பாறை அடுக்கு சந்திக்கும் பகுதிகள் ஓரளவு உருகக் கூடும் இதனை ULVZ பகுதிகள் என அழைக்கின்றனர்.
பாசால்ட் பாறைகள் மற்றும் கடல் வண்டல்களின் கலவையால் இந்த மலைத்தொடர்கள் உருவாகி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பூமியின் மையத்தில் இருந்து எப்படி வெப்பம் வெளியேறுகிறது என அறிவதில் இந்த மலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உண்மையில் பூமியின் மேலடுக்கில் உள்ள டெக்டோனிக் தகடுகள் கீழே சறுக்கி, அதன் உலோக மையத்திற்கும், பாறை உறைக்கும் இடையே அமைந்துள்ள எல்லையில் மூழ்கி, அதற்குள் மெதுவாக பரவி மலைத்தொடர்கள், அதையொட்டி அமைந்துள்ள குமிழ்கள் போன்ற கட்டமைப்புகள் உருவாகி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த மலைகள் குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust