World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன?

ஊர் ஊராக 9 ஆண்டுகள் சுற்றித் திரிந்துள்ள இவருக்கு கிடைத்திருக்கும் அனுபவங்களைக் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது அல்லவா?
World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன?
World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன?Twitter
Published on

யாரும் செய்யாத புதிய விஷயங்களை செய்வது மிகவும் உற்சாகமானதாக இருக்கும் தானே! அந்த உற்சாகத்தில் ஈர்க்கப்பட்ட டென்மார்க்கைச் சேர்ந்தவர் தான் டார்ப்ஜோர்ன் சி. பெடர்சன்.

இவர் இந்த உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். இதுவரை 200 பேர் கூட செய்திடாத சாதனை அது. அதிலும் புதுமையாக ஒரு ஊருக்கு கூட எளிதாக விமானத்தைப் பிடிக்காமல் கப்பல் மற்றும் சாலை மார்கமாகவே பயணித்துள்ளார்.

அவரது பயண அனுபவங்களை  'ஒன்ஸ் அபான் எ சாகா' (Once upon a saga) என்ற அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார். 

 'அந்நியர் என்பவர் யார் என்றால் நீங்கள் இதுவரை சந்தித்திராத ஒரு நண்பர்'  என்ற மேற்கோளுடன் அவரது இணையத்துக்கு நம்மை வரவேற்கிறார். 

ஊர் ஊராக 9 ஆண்டுகள் சுற்றித் திரிந்துள்ள இவருக்கு கிடைத்திருக்கும் அனுபவங்களைக் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது அல்லவா?

இவரது பெயர் நீளமாக இருப்பதனால் தார் என்றே இவரை அழைக்கலாம். அது தான் அவருக்கு பிடித்த பெயரும் கூட. டென்மார்க் விஞ்ஞானி பியட் ஹெய்ன் கூறிய "உலகம் உருண்டையானது என்பதை புரிந்து கொள்ள ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும்," என்ற சொற்றொடர் தான் இவர் பயணிக்க உந்துதலாக இருந்திருக்கிறது.

எந்த ஒரு நாட்டுக்கு சென்றாலும் 24 மணிநேரத்துக்கு குறைவாக அங்கே இவர் தங்க கூடாது என்றும் எந்த காரணத்துக்காகவும் விமானத்தில் ஏறக் கூடாது என்றும் இவர் தனக்குத் தானே விதிமுறைகளை வகுத்துக்கொண்டார். உலகை முழுவதுமாக சுற்றிமுடிக்காமல் வீடுதிரும்புவதில்லை எனவும் தனக்குத் தானே கூறிக்கொண்டு புறப்பட்டுள்ளார்.

மேலும் எந்த இடத்துக்கும் காரிலோ அல்லது தனியான வாகனத்திலோ செல்லாமல் பெரும்பாலும் பொதுப்போக்குவரத்தையே சார்ந்திருந்தார். இதனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் மக்களுடன் தான் நெருங்கி பழகியதாக குறிப்பிடுகிறார். 

ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 193 நாடுகளையும் கடந்து 203 நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். இரண்டு நாடுகள் உரிமைக்கோரும் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கும் சென்றுள்ளார். 

டென்மார்க்கில் 10/10/2013ல் தொடங்கிய அவரதுப் பயணம் மே 2023ல் நிறைவடைந்திருக்கிறது. மொத்தமாக 3,512 நாட்கள் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போதே அவருக்கு முதல் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இரண்டாவதும் கூட.

203 நாடுகளிலும் அவருக்கு உள்ளே நுழையவே ஈக்குவேடாரில் உள்ள கினியா மிகவும் கடினமான நாடாக இருந்திருக்கிறது. வெவ்வேறு இடங்களில் இருந்து 6  முறை விண்ணப்பித்தும் இவருக்கு கினியா செல்ல அனுமதி கிடைக்கவில்லை. 

4 மாத முயற்சிக்கு பிறகு அவரது பட்டியலில் 100வது நாடான கினியாவுக்கு சென்றிருக்கிறார் அவர். இதுமட்டுமல்ல இந்த பயணத்தின் போது ஏகப்பட்ட தடைகளை, சவால்களை சந்தித்திருக்கிறார்.

54 மணிநேரம் ஒரே பேருந்தில் அமர்ந்து பயணித்திருக்கிறார். பெரும்பாலும் பயணிகள் 2 ஆண்டுகளில் பலதரப்பட்ட மக்களை சந்தித்த பிறகு பலதரப்பட்ட நிலப்பரப்புகளைக் கடந்த பிறகு சோர்ந்துவிடுகின்றனர். அதே சோர்வை 2015ம் ஆண்டு எதிர்கொண்டார் தார். ஆனால் அது அவரை முடக்கிவிடவில்லை.

கொரோனா காலத்தில் ஹாங்காங்கில் முடங்கினார். பலமுறை வானத்தில் விமானத்தைப் பார்க்கும் போது தவறான முடிவெடுத்துவிட்டோமோ என சிந்தித்திருக்கிறார். 

கடலில் புயல் வீசும் போது சரக்கு கப்பலில் பயத்துடன் பயணித்திருக்கிறார், ஒரு பயணத்தை தொடங்கவும் சரி நிறைவு செய்யவும் சரி எத்தனை தடைகள், எத்தனை சவால்கள், எத்தனை ஆபத்துகள், அவ்வளவு செலவு…. ஏன் இதை எல்லாம் பொறுத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என உங்களில் யாருக்காவது கேள்வி எழலாம். 

World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன?
அமைதியை தேடிய பயணம் : உலகின் 8 புனித மலைகள் பற்றி தெரியுமா?
“பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும் உலகின் சிறந்த நாடாகக் கருதப்படுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.”

நாம் படும் துன்பங்கள் அனைத்தையும் நிறைவு செய்வதாய் இருக்கும் ஒரு பயணம். எப்படி? அப்படி பயணிப்பதில் என்ன தான் இருக்கிறது? என மீண்டும் உங்களுக்கு கேள்விகள் எழுந்தால் பயணித்துப்பாருங்கள் விடைகிடைக்கும்.

தார் கண்டறிந்த விடையாக அவர் குறிப்பிடுவது, 

உலகம் நாம் நினைப்பது போல அல்ல. உலகின் பரபரப்பான பக்கத்தை மட்டுமே செய்திகளும் ஊடகங்களும் நமக்குக் காட்டுகின்றன. பயங்கரவாதம், ஊழல், மோதல்கள், இயற்கை பேரழிவுகள், இறப்புகள், தீவிரவாதிகள்  என்றே நாம் உலக நாடுகளைப் பார்த்து வருகிறோம். ஆனால் உலகம் அதுபோல இல்லை என்கிறார் தார்.

World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன?
எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்

“இந்த பூமியைப் பகிர்ந்து கொள்ளும் பெரும்பாலான மக்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்பதை மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதை நான் கண்டுபிடித்தேன்.” எனத் தார் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

“பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும் உலகின் சிறந்த நாடாகக் கருதப்படுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.” என்றும் கூறுகிறார்.

World Tour: 3500 நாட்கள், 203 நாடுகளுக்கு பயணம் செய்த நபர்; கண்டறிந்த ஒரு உண்மை என்ன?
83 வயதில் சோலோ ட்ரிப்: பசிபிக் கடலில் தனியாக பயணித்த ஜப்பான் முதியவர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com