பிரிட்டனில் கிட்ட தட்ட 50% பேர், வேலை நேரத்தில் சுய இன்பம் செய்வதாகவும், இதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதிலும் 5ல் 2 பெண்கள் இவ்வாறு செய்ய சுவாரஸ்யமாக இருப்பதாக கூறியுள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சுய இன்பம் என்பது வெளிப்படையாக பேசப்படாத விஷயமாக இன்றும் இருந்தாலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல்நலனை கருத்தில் கொண்டு அது தேவையே என மருத்துவர்கள் வாதாடி வருகின்றனர். சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள தான் நினைக்கின்றனர்.
ஆனால், சமீபத்தில் லண்டனில் நடந்த ஆய்வு ஒன்றில், வேலை நேரத்தில் சிலர் சுய இன்பம் செய்வதில் ஈடுபடுவதாகவும், அதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலும் ஊழியர்கள் ஒர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கிறார்கள்
பிரிட்டனின் பாலியல் ஆரோக்கிய பிராண்டான Lovehoney இந்த ஆய்வை மேற்கொண்டது. டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி, பிரிட்டிஷ் மக்களில் 49% பேர் வேலை நேரத்தில் சுயஇன்பம் செய்வதை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை அந்த புதிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அதில் சுமார் 38 சதவிகிதம் பேர் தேவையின் காரணமாக வேலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். 35 சதவிகிதம் பேர் element of risk ஐ இதற்கு காரணமாக முன்வைக்கும் நிலையில், 68% பேர் மனவுளைச்சல் போன்ற காரணங்களை எடுத்துரைத்தனர்.
வேலை நேரத்தில் சுய இன்பம் செய்ய சுவாரஸ்யமாக இருப்பதாக பெண்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களில் 5இல் 2 பெண்கள், 39%, மற்றவரை போலவே 'ரிஸ்க்'கை காரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் 32% ஆண்களும் இதை சுவாரஸ்யமான செயலாக கருதுவதாக கூறியுள்ளனர்.
பணி நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு 43 சதவிகிதம் ஆண்கள் ஆம் என்ற பதிலை கொடுத்துள்ளனர். 34% பெண்களும் வேலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதாக பதிலளித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust