ஏலியன்கள் மனிதர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனரா? : சீனா சொன்னது உண்மையா? 👽👽👽

இந்த நிமிடத்தில், கிட்டத்தட்ட முழுமையான உறுதியுடன், எலியன்களால் அனுப்பப்பட்ட ரேடியோ அலைகள் பூமியில் விழுகின்றன. ஒரு தொலைநோக்கியை உருவாக்கி, சரியான இடத்தில் சுட்டிக்காட்டி, சரியான அதிர்வெண்ணில் டியூன் செய்து, இந்த அலைகளாக நம்மால் கண்டறிய முடியும்.
Alien
AlienCanva
Published on

பல தசாப்தங்களாக மற்ற விஞ்ஞானிகள் சந்தித்து வந்த தவறான சமிக்ஞைகள் குறித்த எச்சரிக்கையுடன், வேற்று கிரக நுண்ணறிவுக்கான தேடலைத் தொடங்கி இருக்கிறார்கள் சீன வானவியலாளர்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, "Project Cyclops" என்ற தலைப்பில் 253 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை நாசா வெளியிட்டது. வேற்றுகிரகவாசிகளின் நாகரிகங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்த NASA பட்டறையின் முடிவுகளைச் சுருக்கமாக விளக்கும் வண்ணம் இருந்தது அந்த புத்தகம். வானியலாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் உயிரியலாளர்கள் அடங்கிய குழுவானது, ஆயிரம் 100 மீட்டர் விட்டம் கொண்ட ஆண்டெனாக்களுடன் பரந்த அளவிலான ரேடியோ தொலைநோக்கிகளை சைக்ளோப்ஸ் உருவாக்க முடிவு செய்தது. இதன் மூலம் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஏலியன் சிக்கல்களைக் கண்டறிய முடியும் என வானியலாளர்கள் தெரிவித்தனர்.

இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸ் பேராசிரியராக உள்ள வானியலாளர் ஃபிராங்க் டிரேக்கின் மேற்கோளுடன் இந்த அறிக்கையில்,

"இந்த நிமிடத்தில், கிட்டத்தட்ட முழுமையான உறுதியுடன், எலியன்களால் அனுப்பப்பட்ட ரேடியோ அலைகள் பூமியில் விழுகின்றன. ஒரு தொலைநோக்கியை உருவாக்கி, சரியான இடத்தில் சுட்டிக்காட்டி, சரியான அதிர்வெண்ணில் டியூன் செய்து, இந்த அலைகளாக நம்மால் கண்டறிய முடியும். நிச்சயமாக என்றாவது ஒரு நாள், எதோ ஒரு நட்சத்திரத்திலிருந்து, மனிதக்குலம் கேட்ட பல பழமையான கேள்விகளுக்கான பதில்கள் வரும்.

Space
SpaceCanva

சைக்ளோப்ஸ் அறிக்கை, நீண்ட காலமாக அச்சிடப்படவே இல்லை. ஆனால் அது ஆன்லைனில் கிடைக்கிறது, அறிவியலின் பலகாத்திரமான கேள்விகளுக்குப் பதில் வைத்திருக்கும் அந்த புத்தகம், வரும் தலைமுறை வானியலாளர்களுக்கு ஒரு பைபிளாக மாறும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

"முதன்முறையாகப் பாதிரியார்கள் மற்றும் தத்துவஞானிகளைக் கேட்பதற்குப் பதிலாக ஒரு பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்பம் எங்களிடம் இருக்கிறது" என்று ஜில் டார்டர் முன்னர் கூறியிருந்தார். இவர் வேற்று கிரக நுண்ணறிவுக்கான தேடலில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆவார்.

Alien
ஏலியன் போல மாற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ரஷ்ய இராணுவ வீரர்

மேலும் அவர் கூறுகையில், “ஒரு வேற்று கிரக நாகரீகத்தின் குணாதிசயங்களைக் கொண்ட ஒரு ரேடியோ சிக்னலை சீன வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்ற செய்தி இந்த வாரம் உலகம் முழுவதும் பரவியபோது, சைக்ளோப்ஸ் மற்றும் அது தூண்டிய வேலைகள் எனக்கு நினைவிற்கு வந்தன. அதாவது, இது 140.604 MHz, அதிர்வெண்ணில் மிகவும் குறுகிய அலைவரிசையைக் கொண்டிருந்தது. இது ஒரு அசாதாரணமான நிகழ்வாகும்” என்றார்.

Radio Signals
Radio SignalsCanva

சீன ET Civilization Research Group-ன் தலைமை விஞ்ஞானி ஜாங் டோங் ஜி என்பவரின் கருத்தை, சீன விண்வெளி மற்றும் வானியல் வளர்ச்சிகளைக் கண்காணிக்கும் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸ் மேற்கோள் காட்டினார், "சந்தேகத்திற்குரிய சமிக்ஞை ஒருவித ரேடியோ குறுக்கீடாக இருப்பதற்கான சாத்தியம் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் இது கட்டாயமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால், அதனைச் செய்வதற்கு ஒரு நீண்ட செயல்முறை தேவையாக இருக்கலாம்." என்றார்.

Alien
'ஏலியன் சிக்னலாக இருக்கலாம்' : சர்ச்சையான சீன ஆய்வு - என்ன, எங்கே?

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின், பெர்க்லியின் டான் வெர்திமர் இது குறித்து எழுதிய மின்னஞ்சலில், ”இந்த சமிக்ஞைகள் ரேடியோ குறுக்கீட்டிலிருந்து வந்தவை. அவை பூமியிலிருந்து வரும் ரேடியோ மாசுபாட்டால் ஏற்படுகின்றன. எலியன்களிடமிருந்து அல்ல” என்று தெரிவித்திருந்தார். இவர், ரேடியோ சிக்னலைப் பற்றிய அறிவியல் கட்டுரையை எழுதியவர்களில் ஒருவர் ஆவார்.

"இதுவரை SETI ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட அனைத்து சிக்னல்களும் பூமிலிருந்து உருவாக்கப்பட்டவையே. அவற்றிற்கும் எலியன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை " என்று டாக்டர் வெர்திமர் தொடர்ச்சியான மின்னஞ்சல்கள் மூலம் சொல்லிக் கொண்டே இருந்தார். மேலும், “பூமியில் வளர்ந்து வரும் ரேடியோ மாசுபாடு மற்றும் சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் குறுக்கீடு ஆகியவற்றிலிருந்து தப்பிக்க பூமி வாசிகள் சந்திரனின் பின்புறத்தில் ஒரு தொலைநோக்கியை உருவாக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

Alien
Aliens : 100 ஆண்டுகளாய் வேற்றுகிரகவாசிகளுடன் பேச முயலும் மனித குலம் - முழுமையான வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com