மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' - வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!

FoxO genes என்ற ஜீன்கள் தான் ஹைட்ரா இளமையாகவே இருக்க காரணம். இந்த ஜீன்கள் புழுக்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிர்களிலும் இருக்கின்றன.
மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' -  வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!
மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' - வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!Twitter
Published on

மரணமே இல்லாத உயிர்களைப் பார்த்து வருகிறோம். மரணம் நம் வாழ்வில் என்றோ ஒரு நாள் நடக்கப் போகும் நிகழ்வு தான் என்று நம்மால் இருந்துவிட முடியாது. நம் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த மரணத்தை நோக்கியது தான். எப்படி டெட்லைன் இல்லாத அலுவலகத்தில் எந்த வேலையும் நடப்பது இல்லையோ அப்படி மரணம் இல்லாத வாழ்வு ஒன்றும் இல்லாததாக இருக்கும். ஆனாலும் வாழ்க்கையை அர்த்தமாகும் மரணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தானே நம்மில் பலரும் ஆசைப் பட்டிருக்கிறோம்! ஆசையின் படி இந்த மரணமற்ற உயிர்களின் மீது பொறாமை எழுந்திருந்தால் அது தேவையற்றது. ஏன் என இந்த உயிரினத்தைப் பார்த்ததும் அறிந்து கொள்வீர்கள்.

ஹைட்ரா - hydra

ஜெல்லி மீனின் வாழ்க்கை சுழற்சியில் வரும் polyp-களைப் போல காணப்படும் உயிரினம் தான் இந்த ஹைட்ரா. இதற்கு டியூப் போன்ற உடல் உள்ளது. பல கூடாரம் போன்ற வளையமான வாயும் பிசுபிசுப்பான காலும் இருக்கிறது.

நன்னீர் இருக்கும் குளம் அல்லது ஆறுகளில் வசிக்கும் இவை மிக எளிதான வாழ்க்கையை வாழ்கின்றன. ஒரே இடத்தில் நிலையாக இருந்து தனது கொட்டும் நீட்சிகள் மூலம் இரையை பிடிக்க முயற்சி செய்கின்றன.

1990களில் டேனியல் மார்டினஸ் என்பவர் ஹைட்ராக்களை கண்டறிந்தார்.

மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' -  வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!
பூமியின் தகுதியை தாண்டி பெருகுகிறதா மனித இனம்? அறிவியல் சொல்வதென்ன?
 டேனியல் மார்டினஸ்
டேனியல் மார்டினஸ்

ஹைட்ராக்கள் முதிர்ச்சி அடைவதே இல்லை. அவற்றின் செல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை.  FoxO genes என்ற ஜீன்கள் தான் இவை இளமையாகவே இருக்க காரணம். இந்த ஜீன்கள் புழுக்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிர்களிலும் இருக்கின்றன.

ஹைட்ராவின் ஸ்டெம் செல்களில்  FoxO genes அதிகமாக வெளிப்படுவதால் அவை மரணிப்பதில்லை. இந்த ஜீன்களை நீக்கினால் ஹைட்ராக்கள் முதிர்வடையும் என்பது சோதனை மூலம் நிறுபிக்கப்பட்டிருக்கிறது.

மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' -  வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!
மனித மூளையில் பயம் தொடர்பான நினைவுகள் ஆழமாக பதிய காரணம் என்ன?

ஆனாலும் எப்படி இளமையாக இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.  FoxO genes முக்கிய பங்கு ஆற்றுவது மட்டும் உறுதி.

இந்த சிரஞ்சீவிகளை கண்டு நாம் பொறாமை கொள்ள தேவையில்லை. ஏனெனில் ஹைட்ராகளுக்கு மூளை போன்ற உள்ளுறுப்புகள் கிடையாது. ஒரே நிலையான இடத்தில் வாழ்க்கை. யாராவது வெட்டிப் போட்டால் கூட திரும்ப வந்துவிடலாம் (ஹைட்ரோ செல்கள் மீண்டும் உறுப்புகளை உருவாக்க வல்லது). வாயில் வந்து விழும் உணவுகள். சுற்று சூழலே கொன்றால் மட்டுமே இறப்பு!

மரணமே இல்லாத உயிர்கள் 2: சிரஞ்சீவி 'ஹைட்ரா' -  வெட்டிப் போட்டாலும் வளரும் உயிரினம்!
Glass Octopus: இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கடல்வாழ் உயிரினம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com