மரணமே இல்லாத உயிர்கள் 3: இளமை மாறாத இறால்களை தெரியுமா?

இறால்கள் உண்மையிலேயே சாகாமல் வாழ்வதில்லை. மாறாக அவை வயது மூப்பையும் அனுபவிப்பது இல்லை. இதற்கு காரணம் அவற்றின் டி.என்.ஏ அமைப்பு தான்.
மரணமே இல்லாத உயிர்கள் 3: இளமை மாறாத இறால்களை தெரியுமா?
மரணமே இல்லாத உயிர்கள் 3: இளமை மாறாத இறால்களை தெரியுமா?twitter
Published on

கடந்த இரு கட்டுரைகள் மரணம் இல்லாத ஜெல்லி மீன் மற்றும் ஹைட்ரா போன்ற எளிய உயிரினங்கள் பற்றியவை. இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு வகை இறால்.

நாம் உணவில் சாப்பிடும் இறால் சாகாமல் வாழக்கூடும் என்பது இன்னும் வியப்பானதாக உள்ளது தானே! இறால்கள் உண்மையில் சாகாமலில்லை. ஆனால் அவை வயது முதிர்வை அனுபவைப்பதில்லை. அதனால் "என்றும் இளமை, எப்போதும் இளமை" என்ற பூமர் அங்கிள்களின் வார்த்தைகளை நிகழ்த்திக்காட்டுகிறது.

ஹைட்ராவில் இருப்பது போல குறிப்பிட்ட ஜீன்கள் இதற்கு உதவுவதில்லை. மாறாக இறால்களின் டி.என்.ஏ முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளத் தக்கதாக இருக்கிறது.

செல் பகுப்பு மற்றும் டி.என்.ஏ நகல் எடுத்தலின் போது குரோமோசோம்களின் பாதுகாப்பு தொப்பிகளான டிலோமெர்ஸ் சுருங்கிக்கொண்டே வருகிறது. மிக அதிகமாக சுருங்கிய பின்னர் அதனால் செல்பகுப்பில் ஈடுபட முடியாது. இதனால் நமக்கு வயது முதிர்வு ஏற்படத்தொடங்குகிறது.

இறால்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. டிலோமெர்ஸ் உருவாகாத தேவையான டிலோமெராஸ் என்ற என்சைம் முடிவில்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறது.

இனப்பெருக்கத்து ஏற்ற வளர்ச்சி வரும்போதிலிருந்து இந்த செயல்பாடு நடப்பதனால் இவற்றின் டி.என்.ஏ முதிர்ச்சி அடைவதே இல்லை.

டிலோமெராஸ் என்ற என்சைம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களிடத்திலும் இருந்தாலும், கரு நிலையை கடந்ததும் அவை தொடர்சசியாக புதுப்பிப்பதை நிறுத்திவிடும்.

மரணமே இல்லாத உயிர்கள் 3: இளமை மாறாத இறால்களை தெரியுமா?
மனிதனின் உயரம் எதிர்காலத்தில் குறையும்- ஏன் தெரியுமா?

வளர்ந்துகொண்டே போகும் இறால்களுக்கு மரணம் எப்படி?

இறால்கள் தங்கள் டீ.என்.ஏக்களின் மூலமாக வளர்ந்துகொண்டே போனாலும் அவற்றின் ஓடு வளருவதில்லை. இதனால் இறால் அதிகமாக வளர்ந்து ஓடு சிதைவினால் இறக்கிறது.

இறால்கள் பழைய சிறிய ஓட்டை உதிர்த்து புதிய ஓட்டை உருவாக்க அதிக சக்தி தேவை. இந்த சக்தி இல்லாமல் போவதாலும் அவை இறக்கின்றன.

தவிர வேடடையாடுதல் மற்றும் நோய்வாய்ப்படுதலினாலும் அவை இறக்கின்றன.

மரணமே இல்லாத உயிர்கள் 3: இளமை மாறாத இறால்களை தெரியுமா?
உலகிலேயே பழமையான இதயம் கண்டுபிடிப்பு - மனித பரிணாம ஆராய்ச்சியில் புதிய திருப்பம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com