உலகிலேயே பழமையான இதயம் கண்டுபிடிப்பு - மனித பரிணாம ஆராய்ச்சியில் புதிய திருப்பம்

ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதைப்படிமத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர். பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் இது மிக முக்கிய இடத்தைப் பெரும் என்றுக் கூறப்படுகிறது.
உலகிலேயே பழமையான இதயம்
உலகிலேயே பழமையான இதயம்Twitter
Published on

மனித உடலின் இயக்கத்துக்கு மிக முக்கியமான உறுப்பு இதயம். உயிர்கள் எல்லாமே இதயத்தின் இயக்கத்தை ஆதாரமாக கொண்டு தான் இயங்குகின்றன. உயிர்களின் தோற்றம் மற்றும் இதயத்தின் இயக்கம் குறித்து மிக முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான மீன் இதயம்.

இது 38 கோடி ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது இந்த மீன் இனம். ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதன் புதைப்படிமத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர். பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் இது மிக முக்கிய இடத்தைப் பெரும் என்றுக் கூறப்படுகிறது.

பேராசிரியர் கேட் டிரினாஜ்ஸ்டிக் இந்த ஆராய்ச்சிக் குழுவுக்கு தலைமைத் தாங்கியுள்ளார். பேராசிரியர் ஜான் லாங் அவருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்.

உலகிலேயே பழமையான இதயம்
டைனோசர் அழிவு : புதிய சிறுகோள் விழுந்த தடம் கண்டுபிடிப்பு - குழப்பத்தில் விஞ்ஞானிகள்?

இந்த மீனுக்கு கோகோ என்று பெயர் தாடையில் பற்களுடன் உருவான முதல் மீன் இது தான். முதல் முதலாக உருவான பெரிய மீன் இனமும் இதுதான். டைனோசர்கள் வாழ்ந்த காலத்துக்கு கிட்டத்தட்ட 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக, உலகத்தை ஆளும் இனமாக இந்த மீன்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இது டைனோசடர் விட 100 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.

முதல் வேட்டையாடும் இனமாகவும் இருக்கக் கூடிய இந்த மீனின் இதயமானது மிகவும் சிக்கலாக மனித இதயத்தை ஒத்ததாக இருக்கிறது. இதனால் பரிணாமத்தில் மீன்னின் துடுப்புகளே மனித கைகளாக மாறியிருக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது.

உலகிலேயே பழமையான இதயம்
30 ஆண்டுக்கு முன் தொலைந்த ஆமை உயிருடன் கண்டுபிடிப்பு! உரிமையாளர் நெகிழ்ச்சி

இந்த மீன் இதயத்தின் படிமம் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. முதுகெலும்புள்ள உயிர்களின் இதயம் எப்படி பரிமாணம் அடைந்திருக்கிறது என்பதைக் கண்டறிய இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் இதன் 3டி வடிவத்தைப் பார்த்து வியந்திருக்கின்றனர். இது பரிமாணம் குறித்த ஆரய்ச்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே பழமையான இதயம்
பூமியின் நீர் சந்திரனுக்குப் போனது எப்படி? விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு - அடடா தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com