கொரோனா, குரங்கு அம்மை வைரஸுக்கு அடுத்து இளைஞர்களை தாக்க போகும் பேராபத்து - விரிவான தகவல்

கோடை காலம் வெப்பமடைவதால் குளிர்காலம் அதிக குளிர்ச்சியாக இருக்கும். இது வளிமண்டலத்தில் அதிக அளவு மாசு மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் விளைவாகும்.
கொரோனா, குரங்கு அம்மை வைரஸுக்கு அடுத்து  இளைஞர்களை தாக்க போகும் பேராபத்து - விரிவான தகவல்
கொரோனா, குரங்கு அம்மை வைரஸுக்கு அடுத்து இளைஞர்களை தாக்க போகும் பேராபத்து - விரிவான தகவல்Gawrav Sinha
Published on

அரசியல் செய்திகளுக்கு இணையாக வெப்ப அலைகள், வறட்சி மற்றும் வெள்ளம் ஆகிய காலநிலை செய்திகள் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. 2022இல் ஐக்கிய நாடுகளின் சபை காலநிலை மாநாட்டை நடத்த இருக்கிறது. அதை ஒட்டி காலநிலை கவலை என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பு.

காலநிலை மாற்றத்தால் உருவாகும் எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகள் உலகளவில் தற்போது உணரப்படுகின்றன. ஒரு தனிநபரது மனநலத்தில் கால நிலை மாற்றத்தின் தாக்கம் குறைவாக இருந்தாலும் அது உடனடியாக தெரியும் வண்ணம் உள்ளது. இந்தியாவில் இந்தப் பிரச்சினை அத்தகைய அளவுக்கு உணரப்படவில்லை என்றாலும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பிடும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலக நாடுகளில் அமெரிக்க உளவியல் சங்கம் மற்றும் பிற வல்லுநர்கள் குறிப்பிடுவது போல இது "சுற்றுச்சூழல் பேரிடர் பற்றிய நீண்டகால பயம்" என்று வெளிப்படுகிறது. இதுதான் தற்போது புதிதாக காலநிலை கவலை அல்லது சுற்றுச்சூழல் கவலை என குறிப்பிடப்படுகிறது.

காலநிலை மாற்றம் என்றால் என்ன, அது மக்களை எவ்வாறு பாதிக்கிறது?

“வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் ஏற்படும் நீண்டகால மாற்றங்கள் காலநிலை மாற்றம்" என்று ஐநா சபையால் குறிப்பிடப்படுகின்றது. இந்த மாற்றங்கள் சூரிய சுழற்சியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் போன்ற இயற்கை செயல்முறைகளால் ஏற்படலாம். இது நமது கிரகமான பூமி தோன்றியதிலிருந்து உள்ள இயற்கை நடைமுறை.

ஆனால் 1800களில் இருந்து நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதை படிவ எரிபொருட்களின் பயன்பாடு தற்போதைய காலநிலை மாற்றத்திற்கான முதன்மைக் காரணமாகும். இயற்கையான மாற்றங்கள் நடைபெற நீண்டகாலம் பிடிக்கும். ஆனால் மனிதனால் ஏற்படும் செயற்கையான எதிர்மறை மாற்றங்கள் உடனடியான விளைவுகளைக் கொண்டு வரும்.

அதிக வெப்பநிலை பொதுவாக காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. ஆனால் இன்றைய விளைவுகளில் தீவிர திடீர் வறட்சி, பெருகும் வெள்ளம், நீர் பற்றாக்குறை, நீடித்த வறட்சி, உருகும் துருவ பனிக்கட்டிகள், பல்லுயிர் குறைப்பு மற்றும் பேரழிவு புயல்கள் ஆகியவையும் அடங்கும். காலநிலை மாற்றம் என்பது எந்தவொரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கும் மட்டுமேயான பிரச்சினை அல்ல. மாறாக, பூமியின் ஒவ்வொரு வகை உயிரினங்களும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன.

காலநிலை மாற்றம் மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத வழிகளில் பாதிக்கிறது. துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் அதிகரித்து, கடற்கரைக்கு அருகாமையிலும் சிறிய தீவுகளிலும் வசிக்கும் மக்கள் இடம் பெயர நேரிடும். கூடுதலாக, இது பஞ்சம் மற்றும் நன்னீர் ஏரிகள் மற்றும் ஆறுகளில் உப்பு நீர் ஊடுருவலை அதிகரிக்கும். நீண்ட வறட்சியை தோற்றுவிக்கும்.

கோடை காலம் வெப்பமடைவதால் குளிர்காலம் அதிக குளிர்ச்சியாக இருக்கும். இது வளிமண்டலத்தில் அதிக அளவு மாசு மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் விளைவாகும்.

அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கம் குறித்து விஞ்ஞானிகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல பத்தாண்டுகளாக எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் வெள்ளம் ஆகியவை சமீபத்தில் நமது செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி கவலையுடன் பேசப்படும் ஒன்றாக உள்ளன.இப்படித்தான் காலநிலை மாற்றத்தின் பிரச்சினை நமது சிந்தனை ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுதான் "காலநிலை கவலை" என்ற சொல்லை உருவாக்கியது.

காலநிலை கவலை என்றால் என்ன?

காலநிலை கவலை, சுற்றுச்சூழல் கவலை என்றும் அழைக்கப்படுகிறது. இது வளர்ந்து வரும் காலநிலை நெருக்கடியின் யதார்த்தத்துடன் தொடர்புடைய பயம், விரக்தி, துக்கம் மற்றும் ஆத்திரம் மற்றும் அதை போதுமான அளவில் நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறியது போன்றவைகளோடு தொடர்புடையது.

மேலும் பரந்த அளவில், சூழலியல் கவலை என்பது மாறிவரும் சூழலைப் பற்றிய கவலைகளுடன் தொடர்புடைய உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் அது தொடர்பான நடத்தை மற்றும் எதிர்வினைகளைக் குறிக்கிறது.

காலநிலை மாற்ற நெருக்கடி, சுற்றுச்சூழல் மனச்சோர்வு, சுற்றுச்சூழல் அதிர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் வேதனை என்று வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

சில அறிகுறிகளில் நாம் பயன்படுத்தும் வாகனங்கள் கருவிகள் மூலம் வெளிப்படும் கார்பன் உமிழ்வு நம்மை தொந்தரவு செய்கிறது. அது தொடர்பான சஞ்சலப்படும் மனநிலை, குற்ற உணர்வு அல்லது அவமானம், காலநிலை பற்றிய வெறித்தனமான எண்ணங்கள் மற்றும் கோபம் அல்லது விரக்தி ஆகியவை அடங்கும். குறிப்பாக புவி வெப்பமடைதலை மறுப்பவர்கள் அல்லது பழைய தலைமுறையினர் காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஏதும் செய்யவில்லை என்ற கோபமும் அடங்கும்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த பிரச்சனைகள் தூக்கமின்மை, பசியின்மை மற்றும் மோசமான கவனக்குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். கூடுதலாக, இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். மேலும் காலநிலை மாற்றம் குறித்த எதிர் கருத்துகளை வைத்திருப்பவர்களுடனான உறவுகளை மோசமாக்கலாம்.

கொரோனா, குரங்கு அம்மை வைரஸுக்கு அடுத்து  இளைஞர்களை தாக்க போகும் பேராபத்து - விரிவான தகவல்
காலநிலை மாற்றம்: உக்ரைன் ரஷ்யா போரால் என்ன நிகழ்ந்து இருக்கிறது தெரியுமா?

காலநிலை பிரச்சினை குறித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தலைவர்களால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். மேலும் காலநிலை நெருக்கடியைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையின் விளைவாக கவலை அளவுகள் அதிகரித்து வருகின்றன.

சுற்றுச்சூழல் கவலை என்பது ஒரு இயல்பான எதிர்வினையாகும். ஏனெனில் இது வரவிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவுகளைப் பற்றி ஒரு நபர் அறிந்திருப்பதையும் கவலைப்படுவதையும் குறிக்கிறது.

காலநிலை கவலை குறித்த மிகப்பெரிய அறிவியல் ஆய்வு பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. இதில் 16 முதல் 25 வயது வரையிலான நபர்கள் 10 நாடுகளில் 10,000த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கெடுத்தனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பொதுவாக இளைஞர்களிடம் நிலவும் காலநிலை கவலை குறித்து எடுத்துரைக்கிறது. மேலும் இதை தீர்ப்பதற்கு அரசாங்கங்கள் போதிய முனைப்பு காட்டாமை குறித்தும் விளக்குகிறது. இவை இரண்டிற்கும் உள்ள தொடர்புகளையம் ஆய்வு செய்கிறது.

ஆய்வின் முடிவுகள்

இந்த ஆய்வில் பங்கேற்ற பதின்ம வயதனிரில் 45 சதவீதத்தினர் தங்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு வழிகளில் காலநிலை கவலை தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்புகின்றனர். 10 இல் 7 பேர் நமது எதிர்காலம் பயங்கரமாக இருக்குமென்று நம்புகிறார்கள்.

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர், அரசாங்கங்கள் "என்னையும், அல்லது எதிர்கால சந்ததியினரையும் காட்டிக் கொடுக்கின்றன" என்கின்றனர். அதே சமயம் வரவிருக்கும் உலகளாவிய பேரழிவைத் தடுக்க அரசாங்கங்கள் போதுமான அளவு செயல்படவில்லை என்று 64 சதவீதம் பேர் கூறுகின்றனர். கிட்டத்தட்ட 40 சதவீத இளைஞர்கள் சுற்றுச்சூழல் கவலைகள் காரணமாக குழந்தைகளைப் பெற பயப்படுவதாகக் கூறினர்.

காலநிலை கவலையை குறைக்க என்ன செய்யலாம்?

நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு நபர் காலநிலை கவலை குறித்து தனிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பது பெரும்பாலும் கவலைகளைத் தணிக்க உதவும். அந்த நடவடிக்கை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்ற சிறிய விசயமாகக் கூட இருக்கலாம். அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணிப்பதாகவும் இருக்கலாம். இருப்பினும் பெரும் கவலை கொண்டிருப்போருக்கு காலநிலை கவலை ஒரு கோளாறாக மாறும்.

காலநிலை அல்லது சுற்றுச்சூழல் குறித்து ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் சேர்ந்து தம்மாலானதை செய்யலாம். இது காலநிலை கவலை குறித்து ஒரு கூட்டுத்துவ செயல்பாடுக்கு வழிவகுக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

மேலும் இயற்கையோடு ஒன்றும் விதத்தில் நேரத்தை செலவிடுவது, காலநிலை மாற்றத்திற்கான நிலையான நடைமுறைகளில் ஈடுபடுவது, காலநிலை பேரழிவு பற்றி விவாதிக்கும் ஆதரவுக் குழுக்களில் சேர்ந்து செயல்படுவது போன்றவையும் ஒரு நபருக்கு ஏற்படும் காலநிலை கவலையை சமாளிக்க உதவும்.

இத்தகைய காலநிலை குறித்த கவலை மற்றும் பிரச்சினைகள் இந்தியாவில், தமிழகத்தில் இல்லை என்றாலும் நாமும் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் நல்ல முறையில் இந்த உலகை ஒப்படைக்க வேண்டியது அவசியம்.

கொரோனா, குரங்கு அம்மை வைரஸுக்கு அடுத்து  இளைஞர்களை தாக்க போகும் பேராபத்து - விரிவான தகவல்
காலநிலை மாற்றம்: போர் இல்லாமல் இந்த புவி வாழ்க்கை அழியப் போகிறதா ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com