2023ம் ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டு நாம் நினைத்தது எல்லாம் நடந்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் வரப்போகிற 2024ம் ஆண்டில் இவர்கள் கணித்தது நிச்சயம் நடக்கும் என மேற்குலகம் நம்புகிற இருவர் பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ்.
இவர்களது கணிப்புகள் நமக்கு ஆறுதல் அளிக்கிறதா இல்லை அதிர்ச்சி அளிக்கப்போகிறதா எனப் பார்க்கலாம்.
பாபா வங்கா என்ற வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர். 26 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாக கூறப்படும் இவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் சக்தி இருந்ததாக மக்கள் நம்புகின்றனர்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு நடக்கப்போகும் விஷயங்களை இவர் கூறியிருக்கிறார். அதன்படி 2024ல் நடக்க வாய்ப்பிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
ரஷ்ய அதிபர் புதின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.
ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம், மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.
அதிகரித்து வரும் கடன் அளவுகள் மற்றும் அதிகரிக்கும் புவி-அரசியல் பதட்டங்களால் மிகப் பெரிய பொருளாதார பிரச்னை ஏற்படும்.
பெரிய அளவில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்.
மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.
கேன்சர், அல்சைமர் போன்ற பெரிய மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.
குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்தை எட்டும்.
நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் மைக்கெல் டெ நாஸ்ட்ராடமே ஃப்ரெஞ்சு ஜோதிடர். இவர் 500 ஆண்டுகளுக்கு முன்பே தனது கணிப்புகள் அடங்கிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
வறண்ட பகுதிகள் மேலும் வறண்டு போகும் என்றும், அதிக வெள்ள பெருக்குகள் ஏற்படும் என்றும் கணித்துள்ளார். பஞ்சம் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்.
சீனாவுடன் கடற்படை மோதல் ஏற்படும் (அவர் ஒரு பிரஞ்சுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது)
ராஜாவுக்கான அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார். (இது இங்கிலாந்து மன்னரைக் குறிக்கலாம் என்கின்றனர்)
போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust