Women's Day : பெண் தெய்வ வழிபாடு வரலாறு | Spiritual

பல்லாயிரம் ஆண்டு முன்னர் கல்வெட்டுகளாக, அகழ்வாராய்ச்சி படிமங்களாக, சங்க கால பாடல்களின் ஆதாரமாகவெல்லாம் நமக்குக் கிடைக்கின்றன. பெண் தெய்வ வழிபாடுகள், பெண்களைப் போற்றி வணங்கியதற்கான ஆதாரங்கள் எனப் பலவற்றை நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

Published on

பெண் தெய்வ வழிபாடுகள் எப்படி வந்தன தெரியுமா?

“ பெண்கள் நாட்டின் கண்கள்” எனத்தொடங்கி இன்று கட்டுரைகளும் பேச்சுப்போட்டிகளும் பட்டிமன்றங்களும் களைக் கட்டும். வாட்சப் ஸ்டேட்டஸ்களும் முக நூல் பதிவுகளும் சமூக வலைத்தள வாழ்த்துக்களுமாக நிரம்பியிருக்கும். விருதுகள் வழங்கும் விழாக்களும் வெற்றி நடைபோடும். ஒரு நாள் மாத்திரமல்ல.. ஒவ்வொரு நாளும் போற்றிக் கொண்டாட வேண்டியவர்கள் பெண்கள், என்று சொல்லில் மட்டும் அல்லாது செயலிலும் வாழ்த்திக் கொண்டாடுபவர்களும் உண்டு.

இந்த கொண்டாட்டங்கள், பெண் போற்றுதல் என்பது இன்று நேற்றல்ல.. காலம் காலமாக, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்திருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டு முன்னர் கல்வெட்டுகளாக, அகழ்வாராய்ச்சி படிமங்களாக, சங்க கால பாடல்களின் ஆதாரமாகவெல்லாம் நமக்குக் கிடைக்கின்றன. பெண் தெய்வ வழிபாடுகள், பெண்களைப் போற்றி வணங்கியதற்கான ஆதாரங்கள் எனப் பலவற்றை நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

ஓர் உயிரைப் படைப்பவளும், தங்கள் இனத்தை விருத்தி செய்பவளுமாகிய பெண்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் என்ற கருத்தை அனைவரும் கடைபிடித்தனர்.

ஆதி மனிதனும் பெண் போற்றுதலும்

வேட்டையாடி வளரப்பெற்ற நாகரீக காலத்தில் முதன் முதலாகப் பெண்ணை மனிதன் போற்ற ஆரம்பித்தான்.

பஞ்சபூதங்கள் என்று சொல்லக்கூடிய இயற்கையையே முதலில் வணங்கினார்கள். வேட்டையாடச்செல்லும் போது, ஏற்படும் அச்சம், தாக்கம் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு, அந்த இயற்கையிடமே வேண்ட ஆரம்பித்து, வணங்கிக் கொண்டாடி மகிழ்ந்தான் மனிதன். பெண்கள் ஓர் உயிரைப் பெற்றெடுக்கும் அதிசயமான நிகழ்வைக் கண்ட பழைய கற்கால மக்கள், ஓர் உயிரைப் படைக்கும் சக்தி பெண்களுக்கே உண்டு என்பதையும் அறிந்தான். ஓர் உயிரைப் படைப்பவளும், தங்கள் இனத்தை விருத்தி செய்பவளுமாகிய பெண்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் என்ற கருத்தை அனைவரும் கடைபிடித்தனர். குழுக்களாக இருந்து வாழ்ந்த கற்கால மனிதர்களான அப்போது, அந்த கூட்டத்தில் சிலர் அந்த கருத்தை ஏற்கவில்லை. அதன் வெளிப்பாடுதான், பின்னர் ஓர் உயிர் உடலில் எங்கிருந்து வெளிவருகின்றதோ அந்த இடத்தைப் போற்றி வழிபட ஆரம்பித்தனர். அதன்பிறகு வந்ததே தாய் தெய்வ வழிபாடு. அந்த தாய் தெய்வ வழிபாடு என்பது பல்வேறு நிலைகளில் பரிணமிக்கத்தொடங்கியது. சிரண்டு (Chirand) பகுதியில், சுடுமண்ணால் செய்த தாய் தெய்வ உருவம், புதிய கற்காலப் பண்பாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளது.

கூம்பிய தலையையும் கொங்கைகளையும் கொண்ட பல தாய் தெய்வ சுடுமண் உருவங்கள், சிந்துச் சமவெளி நாகரிகங்களைக் கொண்ட பகுதிகளான மொகஞ்சதாரோ, அரப்பா, லோத்தால் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.

பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

சங்க இலக்கியத்தின் சான்றாகப் பெண் வழிபாடு

சங்க இலக்கியங்களில் பழையோள், பெரியவள் என்ற பொருளில் அழைக்கப்பட்டுள்ளாள். தாய் தெய்வம், ஊரின் நடுவில் இல்லாமல் காட்டுக்குள் காணப்படுகிறாள். இத்தாய் தெய்வத்தின் வழிபாட்டில், துணங்கைக் கூத்து நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.

தாய் தெய்வ வழிபாடு, பெருங் கற்கால மக்களிடையே மிகவும் சிறப்பாக இருந்தது. ஆதிச்சநல்லூரில் உலோகத்தால் ஆன சிறிய தாய் தெய்வ உருவம் ஒன்று கிடைத்துள்ளது. தாழியின் வெளிப்புறத்தில் விளிம்புகளுக்குக் கீழே தாய் தெய்வ உருவங்களை ஒட்டி வைத்திருப்பர். சங்க காலம் முதல் வெற்றியை வணங்கும் தெய்வமாகக் கொற்றவையைப் போற்றி வணங்கினார்கள். இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்கள், பெருங் கற்கால நினைவுச் சின்னங்கள், பெருங் கற்கால கற்ப துர்க்கையை நீலிகள், தவ்வைத்தாய், என்று பட்டியல் நீள்கின்றன. கொற்றவையை நீலி எனச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியின் மேல் பகுதியில் காணப்படும் பெண் உருவத்தைக் கொற்றவை என்றே ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

பெண் தெய்வங்கள்

புதுச்சேரி ஸ்ரீ அன்னை: எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு நேர்மறையாக வாழ அன்னை சொல்லும் வழி!

பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

சமணர்கள் காலத்தில்

இந்தியாவில், சமணமும் பௌத்தமும் 2-ம் நூற்றாண்டு முதலே தழைத்தோங்கியது நாம் அறிந்ததே. இந்த இரண்டு சமயங்களும் தங்களது பெண் தெய்வமாக இச(ய)க்கியம்மனை வழிபட்டுள்ளன. இயக்கியரின் சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும், கல்வெட்டுகளும் தமிழகத்தில் காணக்கிடைக்கின்றன.

ஆரம்ப காலகட்டங்களில் இயக்கியர்களின் திருவுருவங்கள், தீர்த்தங்கரர்களுடனும், அதன்பிறகு தனித்தும் காணக்கிடைக்கின்றன. அடுத்த நிலையாக, தீர்த்தங்கரர் ஆலயங்களுக்கு அருகிலேயே இசக்கியம்மனுக்குத் தனியாகக் கோயில் எடுத்துச் சிறப்புச் செய்து வழிபட்டுள்ளனர்.

பெண் தெய்வங்கள்

Isha Mahashivratri Celebrations : இதுவரை கலந்து கொண்ட பிரபலங்கள் | Visual Story

பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

பல்லவர்கள் காலத்தில் பெண் தெய்வ வழிபாடு

6-ம் நூற்றாண்டுக்குப் பிறகு சைவ, வைணவ குகைக் கோயில்களிலும், கட்டடக் கோயில்களிலும் பெண் தெய்வங்களை நிறுவிப் போற்றி வழிபட்டார்கள்.

தாய் தெய்வங்களின் தொகுப்பு பல்லவர்கள் காலத்தில் எழுவராக இருந்தது. சில இடங்களில் தாய் தெய்வங்களையும் பிற காவல் தெய்வங்களையும் இணைத்து அமைத்தனர். தாய் தெய்வங்களின் தொகுப்பு என்றும் தாய் தெய்வங்கள் என்றும், கன்னிமார் சிற்பங்கள் என்றும் அழைத்தனர். ராஜசிம்மப் பல்லவன் காலத்தில்தான் அன்னையர் எழுவர் சிற்பத் தொகுப்பு முதன்முதலாகக் காணமுடிகிறது.

சப்த மாதர்கள் என்றழைக்கப்படும் அன்னையர் தெய்வங்களைப் போர்த் தெய்வங்கள் என்றும் குறிப்பர்.

பெண் தெய்வங்களின் பெயர்கள், அதன் தோற்றம், செயல்பாடுகள் போன்ற அனைத்தும் மாறுபட்டாலும், இவை அனைத்தும் தாய் தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் வந்தவையே ஆகும்.

மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, பிரம்மி, சாமுண்டி. தமிழகத்தில் பாண்டியர் குடவரைக் கோயில்களில் மட்டுமே பழமையான அன்னையர் எழுவர் சிற்பங்களைக் காணமுடிகிறது. திருப்பரங்குன்றம், திருக்கோளக்குடி, குன்னத்தூர், கோகர்ணம் போன்ற குடவரைக் கோயில்களில் காணக்கிடைக்கிறது.

இயற்கை வழிபாடாகவும், பெண் தெய்வங்களாக மகிஷாசுரமர்த்தினி, காளி, துர்க்கை, சப்தமாதர்கள், சேட்டை போன்றவற்றையும் வணங்கினார்கள். இவற்றையே நாம் ஒருங்கிணைந்த தாய் தெய்வ வழிபாடு என்று குறிப்பிடுகின்றோம்.

பெண் தெய்வங்களின் பெயர்கள், அதன் தோற்றம், செயல்பாடுகள் போன்ற அனைத்தும் மாறுபட்டாலும், இவை அனைத்தும் தாய் தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் வந்தவையே ஆகும்.

பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

முற்காலச்சோழர் காலத்தில் பெண் தெய்வ வழிபாடு

முற்காலச் சோழர்கள் காலத்தில் அன்னையர் எழுவர்

பல்லவர்களுக்கு அடுத்து முத்தரையர்களும், முற்காலச் சோழர்களும் அன்னையர் எழுவர் சிற்பங்களைப் போற்றி வணங்கினார்கள். அவர்களும் தனியாகக் கோயில் அமைத்துச் செயல்படவில்லை. ஆனால், சிற்பங்கள் அனைத்தும் அளவில் பெரியதாகவும், மிக அழகாகவும் அமைக்கப்பட்டன. பரிவாரத் தெய்வங்களாகப் போற்றப்பட்ட அன்னையர் எழுவர் சிற்பங்கள், சோழர்கள் காலத்தில் தனிச்சிறப்பைப் பெற்றன என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

தவ்வைத்தாய் வழிபாடு

தவ்வைத்தாய் என்றழைக்கப்படும் ஜேஷ்டாதேவியின் வழிபாடும் மிகவும் சிறப்பும் பழமையும் வாய்ந்ததாகும். மங்களத்தின் அடையாளமாகவும், செல்வ செழிப்பின் அடையாளமாக திகழ்ந்த தவ்வைத்தாய் வழிபாடு பல்லவர் காலத்தில் தொடங்கியது. பிற்கால சோழர்கள் காலத்தில் இந்த வழிபாடானது சற்று தேய தொடங்கியது. நாயக்கர் காலத்தில் முற்றிலுமாக வழிபாடு நடைபெறாமல் "அமங்கலத்தின் சின்னமாகக் கருதப்பட்டது. நாளடைவில் ஆறு, ஏரி, குளம், வயல்வெளிகள் தூக்கி வீசப்பட்டது என்றும், ஒரு சில கோயில்களில் மட்டும் வழிபாடு செய்யப்படுவதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள்

Twitter

பிற மாநிலங்களிலும் கிடைக்கும் தாய் தெய்வ வழிபாட்டுச் சான்றுகள்

மராட்டிய மாநிலம் துலிய மாவட்டத்திலும், பெலன் ஆற்றங்கரையில் உள்ள பேட்டினி என்ற இடத்திலும் கிடைத்த கடைக் கற்காலத்தைச் சார்ந்த எலும்பினால் ஆன தாய் தெய்வத்தை மிகவும் தொன்மையானது எனக் குறிப்பிடுகிறார்கள் வல்லுநர்கள். அகமது நகர் மாவட்டம் நெவோசா, மராட்டிய மாநிலம் தீவாஸ் மாவட்டம் பில்வாடி, புனே மாவட்டம் இனாம்கோன் போன்ற இடங்களில் இவை காணப்பட்டுக் குறிக்கப்பட்டுள்ளன.

தக்காணத்தில் செப்புக் காலப் பண்பாட்டைச் சேர்ந்த பல சுடுமண் தாய் தெய்வங்கள், சிதைந்த நிலையில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, தாய் தெய்வ வழிபாடு மற்ற மாநிலங்களிலும் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. மத்தியப் பிரதேச மாநிலம், மகேஸ்வர் மாவட்டம் நவ்தாதோலியும் குறிப்பிடத்தக்க இடமாகும்.

வட இந்தியாவில் சமண சமயப் பெண் தெய்வங்களை யக்ஷி என்று பெயரிட்டு அழைத்தனர். ஆண் காவல் தெய்வங்களை யக்ஷன் என்றும் அழைத்தனர். தமிழில் இச்சொற்கள் இயக்கி, இயக்கன் என்று குறிப்பிடப்படுகின்றது. இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுக்கும் காவல் தெய்வமாக ஒரு இயக்கியும் ஒரு இயக்கனும் உள்ளார்கள்.

இப்படி ஆதிகாலம் தொட்டே பல்வேறு வகைகளில் வழிபடப்பட்ட பெண் சக்திக்கு இந்த இருபத்தோராம் நூற்றாண்டு கடந்தும் மதிப்பும் மரியாதையும் சிறப்புகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இன்று ஒரு நாளோடு பேசிவிட்டு, புகழ்ந்துவிட்டுச் செல்லாமல், ஒவ்வொரு நாளும் மதிப்புடன் நடத்த வேண்டும். அவ்வப்போது பாராட்டி மகிழ வேண்டும். வெறும் பெறுதலை மட்டுமே பழக்கப்படுத்தாமல், மற்றவர்கள் நமக்குச் செய்ய வேண்டும் என்ற சார்ந்து இருத்தலை, வருங்கால பெண்களுக்குப் புகுத்திவிடாமல், தனித்து இருப்பினும் மதித்து நடக்க, அடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும்.!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com