BCCI : ரவீந்திர ஜடேஜாவுக்கு புரோமோஷன்; கே.எல்.ராகுல் சறுக்கல் - முழுமையான விவரம்

2015ம் ஆண்டு தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சனுடன் முதல் முறையாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது பிசிசிஐ. மேலும் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
BCCI : ரவீந்திர ஜடேஜாவுக்கு புரோமோஷன்; கே.எல்.ராகுல் சறுக்கல் -  முழுமையான விவரம்
BCCI : ரவீந்திர ஜடேஜாவுக்கு புரோமோஷன்; கே.எல்.ராகுல் சறுக்கல் - முழுமையான விவரம்Twitter
Published on

BCCI-ன் வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிய இடைவெளிக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற ஜடேஜாவுக்கு பிசிசியை புரோமோஷன் வழங்கியுள்ளது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா உடன் ஜடேஜாவும் 7 கோடி சம்பளம் பெறும் ஏ+ கிரேடில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் டெஸ்ட் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே.எல்.ராகுல், தொடர்ந்து சொதப்பியதால் ஏ பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ரிஷப் பண்ட், அக்ஸர் படேல் மற்றும் முகமது ஷமி என 5 பேர் ஏ பிரிவில் உள்ளனர்.

பி பிரிவில் 6 நபர்களும் சி பிரிவில் 11 நபர்களும் உள்ளனர்.

ஏ பிரிவில் இருந்த சிக்கர் தவான் ஒருநாள் போட்டிகள் அணியில் இடம் பெறாததால் சி பிரிவுக்கு பின்னடைந்துள்ளார்.

2015ம் ஆண்டு தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சனுடன் முதல் முறையாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது பிசிசிஐ.

சஞ்சு கே.எல்.ராகுலின் விக்கெட் கீப்பர் இடத்தையும் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.

இந்த வீரர்களில் யாரெல்லாம் உலகக்கோப்பை அணியில் பங்கேற்கப் போகிறார்கள் என்பதில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI : ரவீந்திர ஜடேஜாவுக்கு புரோமோஷன்; கே.எல்.ராகுல் சறுக்கல் -  முழுமையான விவரம்
Chetan Sharma vs BCCI : விராட் கோலி முதல் ஊக்கமருந்து சர்ச்சை வரை - பதவி விலக காரணம் என்ன?

எனவே ஐபிஎல் தொடரை தங்களது திறமையை நிரூபிக்கும் களமாக எடுத்துக்கொண்டு வீரர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் திருவிழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த பட்டியலில் புவனேஷ்வர் குமார் பெயர் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளத் தொகையானது வீரர்களுக்கு ஒரு வருடத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ஊதியம் வழங்கப்படும். மேலும், விளம்பரப்படங்கள் மூலமாகவும் சம்பாதிக்க முடியும்.

BCCI : ரவீந்திர ஜடேஜாவுக்கு புரோமோஷன்; கே.எல்.ராகுல் சறுக்கல் -  முழுமையான விவரம்
இந்திய அணியில் மீண்டும் தோனி? டி20 அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com