Dhoni: Railways வேலை பேட்டிங்குக்கு உதவியது எப்படி? - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
Dhoni: Railways வேலை பேட்டிங்குக்கு உதவியது எப்படி? - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!Twitter

Dhoni: ரயில்வே வேலை பேட்டிங்குக்கு உதவியது எப்படி? - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

தோனி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய ஒரு போட்டியில் தன்னுடைய ரயில்வே வேலை அனுபவம் பேட்டிங்குக்கு எப்படிக் கைக்கொடுத்தது எனக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ள சுவாரஸ்ய சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது. ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

இப்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் தோனி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய ஒரு போட்டியில் தன்னுடைய ரயில்வே வேலை அனுபவம் பேட்டிங்குக்கு எப்படிக் கைக்கொடுத்தது எனக் கூறியுள்ளார்.

சிறுவயது முதல் தனக்கிருந்த பல தடைகளைத் தாண்டி உலகை திரும்பிப்பார்க்க வைத்த கிரிக்கெட்டர் தோனி.

ஒரு கட்டத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வே டிக்கெட் செக்கர் வேலை கிடைக்க குடும்ப சூழல் காரணமாக அந்த வேலையில் சேர்ந்து பணியாற்றினார் தோனி.

கோரக்பூர் ரயில்வே வேலையை விட்டு கிரிக்கெட் விளையாடுவதை முழுநேர வேலையாக தேர்ந்தெடுத்தது தோனியின் வாழ்க்கையில் அதி முக்கியமான முடிவு.

ஒரு நாள் தோனி பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட, கீப்பர் பெங்காலி மொழியில் பௌலருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.

Dhoni: Railways வேலை பேட்டிங்குக்கு உதவியது எப்படி? - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
கோலி To தோனி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் ஆடம்பர வீடுகள் - மதிப்பு தெரியுமா?

பந்து வரும்போது அதை முன்னரே கணித்த தோனி அசால்டாக விளாசியிருக்கிறார்.

போட்டி முடிந்த பிறகு வங்காள தேச வீரர்கள் பெங்காலி மொழியில் பேசிக்கொண்டிருந்ததற்கு தோனி எதேர்ச்சையாக ரியாக்ட் செய்திருக்கிறார்.

இதை கவனித்த வீரர்கள் இவருக்கு பெங்காலி புரிகிறது என வியந்துள்ளனர். தோனியின் தாய்மொழி போஜ்புரி, அவர் பள்ளி காலத்தில் இந்தி கற்றுக்கொண்டிருந்தார். அவரது ஆங்கிலம் பற்றிதான் நம் அனைவருக்குமே தெரியுமே!

Dhoni: Railways வேலை பேட்டிங்குக்கு உதவியது எப்படி? - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
CSK vs SRH: "எனக்கு அவார்ட் இல்லையா?" கலகலப்பாக பேசிய தோனி - Retirement பற்றி கூறியதென்ன?

கோரக்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் போது சுற்றியிருக்கும் மக்கள் பெங்காலியில் பேசுவது தோனிக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிந்திருக்கிறது.

இவர் பெங்காலி அறிந்திருப்பார் என பங்களாதேஷ் வீரர்கள் எண்ணியிருக்கவில்லை. இப்படியாக அவர் ரயில்வேயில் வேலை செய்தது பேட்டிங்குக்கு உதவியிருக்கிறது.

இப்படி நம் வாழ்வில் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் நாம் அன்றைய நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் அனுபவம், வாழ்க்கையில் ஏதோ ஒருநாள் நிச்சயம் உதவும்.

Dhoni: Railways வேலை பேட்டிங்குக்கு உதவியது எப்படி? - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
MS Dhoni : தசாப்த கால பயணம், தளராத நம்பிக்கை - 'தல தோனி' இந்தியாவுக்கு செய்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com