"கனவுகள் நனவாகும்": உலகக் கோப்பை அணியில் இடம் பெற்ற DK - வைரலாகும் எமோஷனல் பதிவு!

ஐபிஎல்-ல் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு என பல அணிகளுக்காக விளையாடியுள்ள கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தொடரின் நடுவில் இவரிடம் இருந்த தலைமை, இங்கிலாந்து அணியின் மார்கனிடம் சென்றது.
DK
DKTwitter
Published on

நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய ஆடவர் அணி நெற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில், தமிழக வீரர்கள் தினேஷ் கார்திக் மற்றும் அஷ்வின் இடம்பெற்றுள்ளனர்.

அணியில் தன் பெயர் இடம் பெற்றுள்ளதை அடுத்து, தினேஷ் கார்த்திக் தன் டிவிட்டர் பக்கத்தில் "கனவுகள் நிச்சயம் நனவாகும்" (Dreams do come true) என பகிர்ந்திருந்தது, ரசிகர்களை எமொஷனல் ஆக்கியுள்ளது.

DK
"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி

2004ல் இந்திய அணிக்குள் நுழைந்த தினேஷ் கார்த்திக், 2007 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, பெரிதாக எந்த தொடரிலும் விளையாடவில்லை. வங்கதேசத்திற்கு எதிராக இவரது முதல் டெஸ்ட் சதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இவரது ஃபார்மும் இவரது விளையாட்டிற்கு சற்று தடையாகவே இருக்க, இந்திய அணியில் இவர் இடம் பெறவே இல்லை.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தினேஷ் கார்த்திக், தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன். இவரது தலைமையில் தமிழக அணி தொடர்ந்து கோப்பைகளை வென்றது. ஐபிஎல்-ல் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு என பல அணிகளுக்காக விளையாடியுள்ள கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தொடரின் நடுவில் இவரிடம் இருந்த தலைமை, இங்கிலாந்து அணியின் மார்கனிடம் சென்றது.

இதற்கிடையில், வயதும் 30ஐ தாண்ட, தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவிக்கப்போகிறார், இனி இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை என பல கருத்துக்கள் எழுந்தன. இவரும், 2020-21 வாக்கில், கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தது, இந்த சந்தேகங்களுக்கு இன்னும் வலு சேர்த்தது.

அதன் பிறகு மீண்டும் கடந்த பருவத்தின் ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்கு திரும்பினார். இதுவே அவருக்கு இந்திய அணியில் மீண்டும் கால்பதிக்க அடித்தளமாக அமைந்தது. இவரது சிறந்த பேட்டிங்கால் பெங்களூரு அணி தொடர்ந்து வெற்றிபெற்று வந்தது. ஒரு முறை போட்டி முடிந்து இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பியபோது, "வேறொன்றும் இல்லை, எப்படியாவது இந்திய அணிக்குள் இடம்பெற வேண்டும்" எனக் கூறினார்.

இவரது சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இவர் அணி தேர்வாளர்கள் கண்களில் பட, அடுத்து இந்திய அணி விளையாடிய தொடர்களில் இவரது பெயர் இடம் பெறத் துவங்கியது.

கடைசியாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாடினார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில், நேற்று டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதனையடுத்து கார்த்திக், தன் டிவிட்டர் பக்கத்தில் "Dreams do come true" எனப் பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அணி வீரர் ஹர்திக் பாண்டியா இதற்கு அளித்த பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்டோபர் மாதம் 2022க்கான 20 ஓவர் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

DK
அடுத்த சீசனுக்கும் தோனி தான் சிஎஸ்கே கேப்டன்? சென்னை அணி குறித்த புதிய அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com