நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகளுக்கு இடையிலான போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.
ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரிங்கு சிங் என கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு இணையம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. அவர்களின் வரிசையில் சுயாஷ் சர்மாவும் இருக்கிறார்
யார் இந்த சுயாஷ் சர்மா? இவரை இணையம் கொண்டாட காரணம் என்ன?
இந்த சீசனில், அணிகள் 12வதாக இம்பாக்ட் பிளேயராக ஒருவரை பயன்படுத்தலாம். போட்டியின் எந்த நேரத்திலும் இவர்களை களமிறக்கலாம் என்ற புதிய விதி கடைப்பிடிக்கப்படுகிறது.
கொல்கத்தா அணி, நேற்றைய போட்டியில் சுயாஷ் சர்மா என்பவரை களமிறக்கியது. சுழற்பந்து வீச்சாளரான இவருக்கு இது தான் முதல் போட்டியும் கூட.
விளையாடிய முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா, மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் போன்ற பழக்கப்பட்ட ஸ்பின் அட்டாக்கிற்கு தயாராகியிருந்த ஆர்சிபி அணிக்கு out of syllabus ஆக வந்தார் சுயாஷ்!
19 வயதாகும் சுயாஷ் சர்மா டெல்லியின் பஜன்புராவை சேர்ந்தவர். லெக் ஸ்பின்னரான இவர், நேற்று ஆர்சிபிக்கு எதிராக விளையாடியது தான் முதல் போட்டி.
டெல்லியின் 25 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு அணியில் இவர் இடம்பெற்றிருக்கிறார். இதற்கு முன் லிஸ்ட் ஏ, முதல் தர கிரிக்கெட், டி20 என எந்த வித கிரிக்கெட்டிலும் இதுவரை விளையாடியதில்லை.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி இவரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது.
போட்டி முடிந்து சுயாஷ் சர்மா குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா, “சுயாஷ் மிகவும் தன்னம்பிக்கையுள்ள இளைஞர். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, முழுத்திறனை வெளிப்படுத்தினார்” என்றார்
அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறுகையில் சுயாஷ் சர்மா வலைப்பயிற்சியின்போது சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். அவரது அணுகுமுறை மற்றும் கேம் ஸ்பிரிட் சிறப்பாக உள்ளது.
முன் அனுபவம் இல்லாவிட்டாலும், களத்தை அறிந்து செயல்பட்டார் எனவும், எதிரணியால் அவரை கணிக்கமுடியாமல் போனது எனவும் பண்டிட் தெரிவித்தார்
சுயாஷ் நேற்றைய போட்டியில், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் மற்றும் கரண் சர்மா ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust