CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?

கடந்த மூன்று சீசன்களிலும் ஆரம்பத்தில் சொதப்பி, தொடரின் பாதியில் அதிரடியைத் தொடங்கும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 92 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார்.
CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?
CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?Newssense
Published on

ஐபிஎல் 2023 கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைடன்ஸ் அணியும் விளையாடினர்.

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது.

முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. கடந்த மூன்று சீசன்களிலும் ஆரம்பத்தில் சொதப்பி, தொடரின் பாதியில் அதிரடியைத் தொடங்கும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 92 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார்.

ஆனால் அவரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பலாகவே விளையாடினர்.

ஓப்பனரான கான்வார் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதிக எதிர்பார்க்கப்பட்ட வீரரான ஜடேஜாவும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

மோயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே யாரும் சொல்லும் படியாக ரன் சேர்க்கவில்லை.

கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி 7 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடக்கம்.

CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?
தோனி 2023 ஐபிஎல்க்கு பிறகு ஓய்வு பெறுகிறாரா? கணித்த சுரேஷ் ரெய்னா - நெட்டிசன்ஸ் குதூகலம்

இரண்டாவது இன்னிங்ஸில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

குறிப்பாக சுப்மன் கில் 36 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து அசத்தினார். கடைசி நேரத்தில் ராகுல் திவாட்டியா வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

சி.எஸ்.கேவின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார்.

கடந்த ஆண்டு சாம்பியன் என்ற பெருமிதத்துடன் முதல் போட்டியையும் வென்று கெத்தாக பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்தது குஜராத் அணி.

மேட்ச் தோற்றாலும் தோனியின் சிக்ஸரைப் பார்த்த சந்தோஷமே போதும் என ஆறுதல் கூறிக்கொண்டனர் சி.எஸ்.கே ரசிகர்கள்.

இந்த தோல்வி குறித்து தோனி என்ன கூறினார்?

"இது கடினமானதாக இருக்கும் என அனைவருக்கும் தெரியும். நாம் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம்" என தனது கூலான பாணியை இழக்காமல் பேசினார் தோனி.

"ருதுராஜ் புத்திசாலித்தனமாக விளையாடினார், அவர் பந்தை சரியாக பார்த்து அடிப்பதும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கூட, பார்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இளைஞர்கள் உள்ளே வருவது முக்கியம் என நினைக்கிறேன்." என்றும் கூறியுள்ளார்.

அணியின் பௌலிங் பற்றி குறை எதுவும் சொல்லாத தோனி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் பந்துவீச்சை பாராட்டினார்.

CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?
"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com