ரொனால்டோவா? ப்ரூனோவா? கோல் அடித்தது யார்? அடிடாஸ் நிறுவனம் அளித்த விளக்கம்

போட்டியின் 54வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட இந்த முதல் கோல் ரொனால்டோ அடித்ததாக கூறப்படுகிறது. ஃபெர்னாண்டஸ் அடித்த பந்து ரொனால்டோவின் தலையில் பட்டு சென்றுள்ளது.
ரொனால்டோவா? ப்ரூனோவா? கோல் அடித்தது யார்?
ரொனால்டோவா? ப்ரூனோவா? கோல் அடித்தது யார்?Twitter
Published on

நேற்று நடந்த ஃபிஃபா கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்த கோல், சக வீரர் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு அடிடாஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

மிகவும் சுவாரஸ்யமாக நடந்து வரும் போட்டிகளில் போர்சுகல், பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.

நேற்று போர்சுகல் உருகுவே அணிகளுக்கு இடையில் போட்டி நடந்தது. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்சுகல் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த இரண்டு கோல்களையும் அந்த அணி வீரர் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் அடித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. போர்சுகல் அணி அடித்த இரண்டில் ஒரு கோல் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ அடித்தார் என அவர் உள்பட ஒரு தரப்பு தெரிவித்தது.

போட்டியின் 54வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட இந்த முதல் கோல் ரொனால்டோ அடித்ததாக கூறப்படுகிறது. ஃபெர்னாண்டஸ் அடித்த பந்து ரொனால்டோவின் தலையில் பட்டு சென்றுள்ளது.

கோல் விழுந்ததால், ரொனால்டோவும் கொண்டாடினார். ஆனால், அந்த கோல் அவருக்கு வழங்கப்படவில்லை.

ரொனால்டோவா? ப்ரூனோவா? கோல் அடித்தது யார்?
FIFA : இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்த ஃபிஃபா - காரணம் என்ன?

பந்தை ரொனால்டோ தலையில் அடிக்க முயன்றபோது அது அவரது தலையில் படவில்லை என்றும், ஃபெர்னாண்டஸ் அடித்து தான் கோல் சென்றது என்றும் உலகக்கோப்பை நிர்வாகிகள் முடிவை அறிவித்தனர்.

இது குறித்து ரொனால்டோ கேள்வியெழுப்பினார். இதற்கு அடிடாஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அடிடாஸ் நிறுவனம் தான் இந்த வருடத்தின் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளுக்கு அதிகாரப்பூவமாக பந்துகளை தயாரிக்கிறது. பந்துகள் Ball Detector Technology உடன் தயாரிக்கப்படுகிறது. அதை சோதித்து பார்த்ததில், ரொனால்டோவின் தலை பந்தின் மேல் படவில்லை என நிரூபணம் ஆனதாக நிறுவனம் விளக்கியுள்ளது.

அடிடாஸ் நிறுவனம் “அளவீடுகள் மற்றும் இணைக்கப்பட்ட கிராஃபிக் ஆகியவற்றில் ரொனால்டோவின் தாக்கம் பதிவாகவில்லை, கோலை நோக்கி சென்ற பந்தின் மேல் எந்தவிதமான external force உம் அளவிடப்படவில்லை. பந்தின் உள்ளே இருக்கும் 500Hz IMU சென்சார் மிக துல்லியமான இதை கணக்கிடுகிறது” என்று தெரிவித்திருந்தது.

இதனால் இந்த கோல் ரொனால்டோவின் கணக்கில் வரவில்லை. இதற்கு முன்னர் கானா அணிக்கு எதிராக ரொனால்டோ கோல் அடித்திருந்தார். இதன் மூலம் 5 உலகக்கோப்பைகளில் கோல் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக்கோப்பை கிறிஸ்டினோ ரொனால்டோவுக்கு கடைசி தொடர் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

உலகளவில் அதிகமாக விரும்பப்படும் கால்பந்து ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டினோ ரொனால்டோ இதுவரை ஒரு உலகக்கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோவா? ப்ரூனோவா? கோல் அடித்தது யார்?
கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com