FIFA : இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்த ஃபிஃபா - காரணம் என்ன?

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (FIFA) அகில இந்தியக் கால்பந்து சங்கத்துக்கு ஒருமனதாகத் தற்காலிக தடை விதித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
AIFF
AIFFTwitter
Published on

மூன்றாம் தரப்பினரின் தலையீடு இருப்பதனால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளதாக ஃபிஃபா (FIFA) அறிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (FIFA) அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிற்கு ஒருமனதாகத் தற்காலிக தடை விதித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையில் - அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் (AIFF), மூன்றாம் தரப்பினரின் தலையீடும் செல்வாக்கும் அதிகமாக உள்ளதாகவும், இது ஃபிஃபா அமைப்பின் விதிகளை மீறும் தீவிர குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.

AIFF
லலிதா மத்வால் : 45 வயதிலும் தடகளத்தில் தங்க மழை பொழிந்த இந்தியப் பெண் - யார் இவர்?

இதனால் வரும் அக்டோபர் 11முதல் 30 வரை நடக்கவிருந்த 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரை இந்தியாவில் நடத்த இயலாது என்றும் ஃபிஃபா அமைப்பு அறிவித்துள்ளது.

போட்டியை நடத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்துவருவதாகவும் அதை பற்றிய தகவல்கள் பின்னர் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஃபிஃபா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் புதிய குழு ஒன்றை அமைத்து AIFF இன் நிர்வாக கட்டுப்பாடு மற்றும் தினசரி விவகாரங்களை அவர்கள் மீட்டெடுத்தவுடன், இந்த இடைக்காலத் தடை நீக்கப்படும் என்றும் பிபா அமைப்பு கூறியுள்ளது.

AIFF
இந்தியா : கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com