ICC World Cup 2023: இன்று தொடங்குகிறது உலக கோப்பை - பிரம்மாண்ட தொடக்கவிழா இல்லாதது ஏன்?

ஐபிஎல் தொடருக்காக பிரம்மாண்டமான தொடக்க விழாக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 4 அண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டித் தொடருக்கான தொடக்கவிழா குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஏன்?
ICC World Cup 2023: இன்று தொடங்குகிறது உலக கோப்பை - பிரம்மாண்ட தொடக்கவிழா இல்லாதது ஏன்?
ICC World Cup 2023: இன்று தொடங்குகிறது உலக கோப்பை - பிரம்மாண்ட தொடக்கவிழா இல்லாதது ஏன்?Twitter
Published on

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் இன்று தொடங்குகின்றன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, கடந்த ரன்னர்-அப் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.

ஒரு மிகப்பெரிய போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னர் அதற்கான தொடக்க விழா நடைபெறுவது வழக்கம். ஐபிஎல் தொடருக்காக பிரம்மாண்டமான தொடக்க விழாக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 4 அண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டித் தொடருக்கான தொடக்கவிழா குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஏன்?

உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பு தொடக்கவிழா திட்டமிடப்படவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் அறிக்கை கூறுகிறது.

ஐபிஎல்லைப் பொறுத்தவரையில் மாலை நேரத்தில் போட்டிகள் தொடங்கும். ஆனால் உலகக் கோப்பையில் மதிய வேளையில் போட்டிகள் தொடங்குவதால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்கிறது அந்த அறிக்கை.

தொடக்க விழா நடக்கவில்லை என்றாலும் கேப்டன்கள் தினத்தை முன்னரே நடத்தியது பிசிசிஐ. 10 அணிகளின் கேப்டன்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கனும் கலந்துகொண்டனர்.

ICC World Cup 2023: இன்று தொடங்குகிறது உலக கோப்பை - பிரம்மாண்ட தொடக்கவிழா இல்லாதது ஏன்?
BCCI: உலகக்கோப்பை 2023 அட்டவணை வெளியிட்ட ஐசிசி - இந்தியா பாகிஸ்தான் எப்போது மோதுகிறது?

கடந்த 3 உலகக் கோப்பைத் தொடரிலும் அந்த தொடரை நடத்திய அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்தியா போட்டியை நடத்துவதனால், இது குறித்து ரோகித் சர்மவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் அந்த கூற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளலாமல், "இதுபற்றி அதிகமாக் சிந்திக்கவில்லை. இந்த தொடரில் எங்களது அனைத்தையும் கொடுத்து விளையாடுவோம். போட்டியை ரசிக்கலாம்" எனப் பேசினார்.

இன்று மதியம் 1:30க்கு டாஸ் போடப்பட்டு, 2:00 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது!

ICC World Cup 2023: இன்று தொடங்குகிறது உலக கோப்பை - பிரம்மாண்ட தொடக்கவிழா இல்லாதது ஏன்?
கோலி To தோனி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் ஆடம்பர வீடுகள் - மதிப்பு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com