இலங்கை அணி வீரர் Angelo Mathewsக்கு ஏன் டைம் அவுட் வழங்கப்பட்டது? இது என்ன விதிமுறை?

இவர் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளும் முன்னதாகவே அவுட் என அறிவிக்கப்பட்டார். களத்தில் வந்து நின்று வெகு நேரமாகியும் விளையாட தொடங்காததால், டைம்ட் அவுட் செய்யப்பட்டார் மேத்யூஸ்.
இலங்கை அணி வீரர் Angelo Mathewsக்கு ஏன் டைம் அவுட் வழங்கப்பட்டது? இது என்ன விதிமுறை?
இலங்கை அணி வீரர் Angelo Mathewsக்கு ஏன் டைம் அவுட் வழங்கப்பட்டது? இது என்ன விதிமுறை?twitter
Published on

நேற்று வங்கதேசத்துக்கு எதிராக நடந்த போட்டியில், விளையாடமலேயே அவுட் ஆகினார் இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ். இவர் டைம்ட் அவுட் (Timed out) செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்டருக்கு டைம்ட் அவுட் விதிமுறைப்படி அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது இதுவே முதன்முறை.

இதனால், களத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் மேத்யூஸுக்கு நடந்தது அநியாயம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த டைம் அவுட் விதிமுறை என்பது என்ன? நேற்று ஏன் மேத்யூஸுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது? இந்த பதிவில் காணலாம்.

என்ன நடந்தது?

நேற்று இலங்கை வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது பங்களாதேஷ்.

அப்போது 25வது ஓவரில் விக்கெட் ஒன்றை வீழ்த்தினர் வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசன். அதனை தொடர்ந்து இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார்.

இவர் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளும் முன்னதாகவே அவுட் என அறிவிக்கப்பட்டார். களத்தில் வந்து நின்று வெகு நேரமாகியும் விளையாட தொடங்காததால், டைம்ட் அவுட் செய்யப்பட்டார் மேத்யூஸ்.

இவரது ஹெல்மெட்டில் கோளாறு ஏதோ இருந்ததாக வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு தெரிகிறது. களத்தில் நடுவர்களின் அனுமதியில்லாமல், மேத்யூஸ் மாற்று ஹெல்மெட்டை கேட்டார். இதனால் களத்தில் நேரம் கடத்துகிறார் என வங்கதேச அணி தரப்பு குற்றம் சாட்டியது.

வெகுநேரம் அம்பையர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மேத்யூஸ் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

இலங்கை அணி வீரர் Angelo Mathewsக்கு ஏன் டைம் அவுட் வழங்கப்பட்டது? இது என்ன விதிமுறை?
உலகக்கோப்பை இல்லை, ஒரு தங்க பதக்கத்துக்காக போட்டி போடும் இந்திய வீரர்கள் - பின்னணி என்ன?

டைம்ட் அவுட் விதிமுறை என்பது என்ன?

கிரிக்கெட் விதிமுறைகளின்படி,

ஒரு போட்டியின்போது பேட்டர் அவுட் செய்யப்பட்டாலோ அல்லது காயம் காரணமாக வெளியேறினாலோ, அவருக்கு அடுத்த வீரர் 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்துவிடவேண்டும், 3வது நிமிடத்தில் தனது முதல் பந்தை எதிர்கொள்ள வேண்டும்.

அல்லது, எதிர்முனையில் இருக்கும் பேட்டர் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்த நேரமானது மீறப்பட்டால், எதிரணி குற்றம்சாட்டினால், நடுவர்கள் அவுட் வழங்க அதிகாரம் இருக்கிறது.

இந்த விக்கெட் எந்த பௌலரின் கணக்கிலும் வராது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நேற்றைய போட்டியில் நடந்தது இதுதான். இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இது போன்று எந்த அணி பேட்டருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை.

உலகக்கோப்பை 2023 தொடங்கி அரையிறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் செமி ஃபைனலுக்கு சென்றுவிட்டன.

மேலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் போட்டியில் இருந்து எலிமினேட் ஆகிவிட்டன.

இலங்கை அணி, இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அந்த நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், விளையாட்டு துறை அமைச்சரின் இந்த முடிவு செல்லாது என கலைக்கப்பட்ட வாரியத்தை மீண்டும் அமலில் கொண்டுவரச் சொல்லி தீர்ப்பு வழங்கியது இலங்கை நீதிமன்றம்.

இலங்கை அணி வீரர் Angelo Mathewsக்கு ஏன் டைம் அவுட் வழங்கப்பட்டது? இது என்ன விதிமுறை?
World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com