இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி ரசிகர்களின் 3 ஆண்டு காத்திருப்பை நிறைவுக்கு கொண்டுவந்து தனது 28வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4வது நாளாக நாளாக 480 ரன்களை துரத்தியது இந்திய அணி. 128 பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினார் விராட் கோலி. இரண்டாவது செஸ்ஸனில் தனது சதத்தை பதிவு செய்தார்.
2019 நவம்பரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது 27வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.
விராட் கோலியின் 25 மற்றும் 26வது டெஸ்ட் சதங்களுக்கு இடையே 10 இன்னிங்ஸ் வித்தியாசம் இருந்தது. 27வது சதத்துக்காக 11 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டவர் 41 இன்னிங்ஸ்களுக்கு பிறகு 28வது சதமடித்தார்.
இன்றைய போட்டியில் ஜடேஜா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் ஷ்ரேயஸ் ஐயர் முதுகில் காயமடைந்திருந்தார். வழக்கமாக ஆக்ரோஷமாக விளைடாடும் கோலி மிக நிதானமாக 396 பந்துகாளுக்கு 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் எதுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
விராட் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் 8வது சதம் இது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடுத்தவர் என்ற சச்சின் டெண்டுலுக்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust