"என்னடா மேட்ச் ஹைலைட்ஸ் பாக்கலாம் னு வந்தா மேட்சே ஹைலைட்ஸ் மாறி தான் இருக்கு?" என்று தான் இருந்திருக்கும் நீங்கள் நேற்றைய இறுதி போட்டியை மிஸ் செய்திருந்தால்!
8 அணிகள் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ஆசியக் கோப்பை போட்டிகள் நேற்று இறுதியை எட்டியது. இதில் இந்தியாவும், நடப்பு சாம்பியன்களான இலங்கையும் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை. முதல் ஓவரிலேயே, விக்கெட் எடுத்து பிள்ளையார் சுழி போட்டார், காயத்தில் இருந்து மீண்டு வந்திருந்த பும்ரா.
நீ கோடு போடு நா ரோடு போட்றேன் என் இணைந்து கொண்டனர் முகமது சிராஜ் மற்றும், ஹர்திக் பாண்டியா.
4வது ஓவரில் நான்கு விக்கெட்களை அடுத்தடுத்து சிராஜ் வீழ்த்த, 12 ரன்களுக்கு பாதி அணி பெவிலியனில் இருந்தது.
ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 3 விக்கெட்கள் எடுக்க, 15.2 ஓவர்களில் 50 ரன் எடுத்த நிலையில், ஆல் அவுட் ஆனது இலங்கை அணி.
6.1 ஓவரில், 51 என்ற எளிய இலக்கை அடைந்து, போட்டியை வென்றனர் இந்திய அணியினர்.
இலங்கை அணி வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆகி சென்றனர். ஆட்டநாயகனாக சிராஜும், தொடர்நாயகன் விருதினை குல்தீப் யாதவும் வென்றனர்
அடுத்த மாதம் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியாவில் இம்முறை போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 2011ல் இந்தியாவில் உலகக் கோப்பை நடைப்பெற்றது. அதில் இந்திய அணி வென்றிருந்தது.
இந்த ஆசியக் கோப்பை வெற்றி, இந்திய அணி மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி, 8வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. இது ரோஹித் சர்மா தலைமையில் வெல்லும் இரண்டாவது ஆசியக் கோப்பையாகும் .
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust