முரளி விஜய்: சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர்!

இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத ஓபனராக வலம் வந்தார் முரளி விஜய். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இதுவரை 12 சதங்களை அடித்திருக்கிறார்.
முரளி விஜய்
முரளி விஜய்ட்விட்டர்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்.

கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கிய தனது பயணத்தை, கனத்த இதயத்துடன் முடித்துக்கொள்வதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் முரளி விஜய், தொடக்க வீரராக அணிக்கு வலுசேர்த்தவர். 2008ஆம் ஆண்டு இவரை இந்தியா ஏ அணிக்கு தேர்ந்தெடுத்தனர்.

இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காகவும், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.

தமிழக வீரரான முரளி விஜய் இந்தியாவுக்காக இதுவரை 9 டி20 போட்டிகள், 17 ஒருநாள் மற்றும் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். மொத்தம் 4,490 ரன்களை குவித்திருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத ஓபனராக வலம் வந்தார் முரளி விஜய். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இதுவரை 12 சதங்களை அடித்திருக்கிறார்.

முரளி விஜய்
முரளி விஜய்: "30 வயதுக்கு மேல் 80 போல நடத்துகின்றனர்"- வெளிநாட்டில் வாய்ப்பு தேடும் வீரர்

மிகுந்த நன்றியுடனும், பணிவுடனும் தனது இந்த ஓய்வை அறிவிப்பதாக கூறிய விஜய், இந்திய அணிக்காக விளையாடியதை மிகப் பெரிய கௌரவமாக கருதுவதாக தெரிவித்தார்.

தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய். கிரிக்கெட் உலகின் மற்ற பக்கங்களை புரட்டி, தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார் விஜய்.

சமீபத்தில், இந்தியாவை பொறுத்தவரை 30 வயதை ஒரு கிரிக்கெட் வீரர் கடந்துவிட்டாலே, 80 வயது போல நடத்துகின்றனர் என்று வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளிநாடுகளில் வாய்ப்புகளை தேடி வருவதாகவும் அவர் கூறினார்

முரளி விஜய்
”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com